விசுவாசம்’ படத்தில் அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா எனத் தகவல் கிடைத்துள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடித்துவரும் படம் ‘விசுவாசம்’. அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த 7-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கியது. பாடல் காட்சியுடன் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர்.
விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, ரமேஷ் திலக், ‘மெர்சல்’ சிட்டுக்குருவி பாட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கடந்த சில படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்த அஜித், இந்தப் படத்தில் இளமைத் தோற்றத்தில் நடிக்கிறார்.
இதில், அஜித்துக்குத் தாய்மாமனாக நடிக்கிறாராம் தம்பி ராமையா. சிவா இயக்கத்தில் அஜித் நடித்து ஏற்கெனவே வெளியான ‘வீரம்’ மற்றும் ‘வேதாளம்’ படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார் தம்பி ராமையா. அதைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் படம் முழுக்க வரும் அளவுக்கு மிகப்பெரிய வேடத்தில் நடிக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…