அஜித்தின் தாய்மாமன் நான் : அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகர்..!
தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கியுள்ள ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு முடியவுள்ளது . இந்த படத்திற்காக பல கோடி ரூபாய் செலவில் இரண்டு மிகப்பெரிய ஸ்டுடியோக்களில் செட் போடப்பட்டு எடுக்கப்பட்டது.
இந்த படத்தின் பெரும்பாலான பகுதி படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
இந்த படத்தில் கார் சேசிங் காட்சிகள் உள்ளன.இது ரசிகர்களின் மத்தியில் பெரும் ஆர்வத்தை தூண்டியது. இந்த சண்டைக்காட்சிக்காக வெளிநாட்டு கார் சேசிங் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் விசுவாசத்தில் நடித்து வரும் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் தம்பி ராமையா ‘இப்படத்தில் அஜித்தின் தாய் மாமனாக நான் நடிக்கின்றேன், இதற்கு மேல் நான் படத்தை பற்றி ஏதும் சொல்ல முடியாது’ என்றும் அஜித்துடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.