ஓய்வறைக்கு அனுப்பப்பட்ட சுச்சி மற்றும் பாலாஜி – வம்பிழுக்கும் சனம்!

ஒழுங்காக விளையாடாததால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓய்வறைக்கு அனுப்பப்பட்ட சுச்சி மற்றும் பாலாஜியிடம் உள்ளே சென்று சனம் வம்பிழுக்கிறார்.

இன்றுடன் 47 ஆவது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவதும் மணிக்கூண்டு டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் பலரும் மிக ஆர்வமாக கலந்து கொண்டு விளையாடினார்கள். இருப்பினும் சுச்சி மற்றும் பாலா சற்று அதிலிருந்து மறுபட்டிருந்தனர். மேலும் சரியான நேரத்தில் கலந்துகொள்ள பாலா மறுக்கவும் செய்தார். இந்நிலையில் இன்று இந்த டாஸ்கில் இன்று சரியாக விளையாடாத குழு எது என பிக்பாஸில் அறிவிக்கப்பட்டது.

அந்த குழுவில் ரம்யா, சுச்சி மற்றும் பாலா ஆகிய மூவரும் உள்ளனர். இந்த மூவரில் யாரேனும் இருவரை வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் தேர்வு செய்து கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதனை அடுத்து பாலா மற்றும் சுச்சியை போட்டியாளர்கள் தேர்வு செய்து கூறினர். இந்நிலையில் அவர்கள் இருவரும் ஓய்வறைக்கு அனுப்பப்பட்டனர். அதன்பின் அங்கு சனம் சென்று பாலாவுடன் வம்பு இழுத்துக் கொண்டு இருக்கிறார். எனவே அங்கும் கடுப்பாகிய பாலா சனத்தை வெளியே செல் என கூறுகிறார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

author avatar
Rebekal