கோட்டூர்புரத்தில் நடைபெறும் சித்ராவின் இறுதி சடங்கு.! சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.!

கோட்டூர்புரத்தில் நடைபெறும் சித்ராவின் இறுதி சடங்கு.! சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.!

Default Image

சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெறும் சித்ராவின் இறுதி சடங்கில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர் .

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நேற்றைய தினம் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அவரது கன்னத்தில் ரத்த காயம் இருந்ததை தொடர்ந்து போலீசார் சித்ராவின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்ராவின் கணவர், பெற்றோர்கள் மற்றும் சக நடிகர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .மேலும் சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது .அவரது இறுதி சடங்குகள் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நடைபெறும் சித்ராவின் இறுதி சடங்கில் சக நடிகர்கள் உட்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது .சித்ராவுடன் பணியாற்றிய சக நடிகர்கள் இவரது உடலுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Join our channel google news Youtube