சித்ராவின் மரணம் தற்கொலையாக இருக்க வாய்ப்பு இல்லை.! தடயவியல் நிபுணரின் பகீர் தகவல்.!

சித்ராவின் மரணம் தற்கொலையாக இருக்க வாய்ப்பு இல்லை என்றும், கொலையாக இருக்க கூடும் என்றும் தடயவியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நேற்றைய தினம் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அவரது கன்னத்தில் ரத்த காயம் இருந்ததை தொடர்ந்து போலீசார் சித்ராவின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.தூக்கில் தொங்கினால் கழுத்தில் காயம் ஏற்படலாம் ,எப்படி கன்னத்தில் ஏற்பட்டிருக்க கூடும் என்று பல கேள்விகள் எழுந்தது.

அதனை தொடர்ந்து முதலாவதாக அவருடன் தங்கியிருந்த கணவரான ஹேமந்துடன் விசாரணை மேற்கொண்ட போது இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறயிருந்ததாக கூறப்பட்டது .மேலும் அவர் குளிக்க செல்வதாக கூறி ஹேமந்தை வெளியே அனுப்பியதாகவும் கூறப்பட்டது .இது சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது.ஏனெனில் கணவரை எதற்கு அறையிலிருந்து குளிக்க செல்வதாக கூறி வெளியேற்ற வேண்டும் என்று கேள்விகள் எழுந்தது .

இந்த நிலையில் இவ்வாறான ஒவ்வொரு வழக்கிலும் திருப்புமுனையாக அமைவது தடயவியல் நிபுணரின் கருத்து தான் .அந்த வகையில் பெங்களூரைச் சேர்ந்த தடயவியல் நிபுணர் தினேஷ் ராவ் நடிகை சித்ராவை சடலமாக மீட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்து சித்ராவின் மரணம் தற்கொலையாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை எனவும் , முகத்தில் உள்ள காயங்களை பார்த்தால் இது கொலையாக இருக்க கூடும் எனவும் ,வேறு யாராவது ஒருவர் சித்ரா மீது தாக்குதல் நடத்த முற்பட்டபோது, அதை அவர் தடுக்கும் போதுதான் இது போன்ற காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் . தடயவியல் நிபுணரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.