கன்னத்தில் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சித்ராவின் சடலம்.!கொலையா? தற்கொலையா?

கன்னத்தில் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சித்ராவின் சடலம்.!கொலையா? தற்கொலையா?

Default Image

இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் கன்னத்தில் ரத்த காயம் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் பிரபலமான சித்ரா தனது சீரியலின் படப்பிடிப்பிற்காக கணவர் ஹேம்நாத் உடன் சென்னை அருகிலுள்ள நாஙரேத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார் .

இந்த நிலையில் இன்று அதிகாலை தூக்கில் தொங்கிய படி சித்ராவின் சடலம் மீட்கப்பட்டது . போலீசார் சடலத்தை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட சித்ராவின் கன்னத்தில் ரத்தம் காயம் இருந்ததும் ,கழுத்தின் மேற்பகுதியிலும் ரத்த காயம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டால் கழுத்தில் மட்டுமே ரத்த காயங்கள் இருக்கும்.ஆனால் சித்ராவின் கன்னத்தில் எப்படி ரத்த காயங்கள் வந்திருக்கும் என்பது போலீசாரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .சித்ராவின் மரணம் கொலையா? தற்கொலையா என்பது குறித்து போலீசார் அனைத்து கோணங்களிலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Join our channel google news Youtube