முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் ஆய்வு..!

மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால் சென்னை முழுவதும் மழைநீரால் சூழப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான இடங்கள் தீவு போல காட்சியளிக்கிறது. மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு மக்களுக்கு தேவையான உணவு மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு!

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று தரமணியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அந்த பகுதி மக்களுக்கு அரிசி, பால், பிரெட், பாய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை  வழங்கினார். இதனை தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். நிவாரண பணிகள் குறித்து அதிகாரிகள் முதல்வரிடம் விளக்கம் அளித்தனர். இதனை தொடர்ந்து, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.