ஆகாய நடைபாதையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மக்கள் பயன்பாட்டுக்காக ஆகாய நடைபாதையை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். 

சென்னை தியாகராய நகரில் பொதுமக்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள ஆகாய நடைபாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தியாகராய நகரில் ரூ.30 கோடி செலவில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.  ஆகாய நடைபாதையை திறந்து வைத்த பின்னர் நடந்து சென்று பார்வையிட்டார்.

ஆகாய நடைபாதையால் தியாகராய நகர் பேருந்து நிலையத்திலிருந்து மாம்பலம் ரயில் நிலையம் விரைவாக செல்லலாம். அதற்கு ஏற்ப, தியாகராய நகர் பேருந்து நிலையம் – மாம்பலம் ரயில் நிலையம் இடையே பொதுமக்கள் செல்ல லிப்ட், எஸ்கலேட்டர் வசதிகளுடன் இந்த நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆகாய நடை பாதை 570 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டது.