15 சீட்களை பாஜக தாண்டுமா என பார்ப்போம்.! சத்தீஸ்கர் மாநில முதல்வர் விமர்சனம்.!

சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த 7 மற்றும் 27 என இரு கட்டங்களாக 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வரும் டிசம்பர் 3ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 68 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. 15 தொகுதிகளில் பாஜக வென்று இருந்தது. 7 தொகுதிகளில் மாநில கட்சியான பிஎஸ்எப் வென்று இருந்தது.

காங்கிரஸ் அரசுக்கு விடைகொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர்.! அமித்ஷா பேட்டி.!

பாஜக மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான ராமன் சிங் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சத்தீஸ்கரில் முதற்கட்டமாக நடைபெற்ற 20 தொகுதிகளில் 14 தொகுதிகளில் பாஜக வெல்லும். அதே போல மொத்தமாக 55 இடங்களை வெல்லும் எனவும் ராமன் சிங் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதில் கூறிய அம்மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல், மாநிலத்தில் பாஜக இதுவரை 52 இடங்களை வென்றது இல்லை. முதலில் அவர்கள் கடந்த முறை வென்ற 15 தாண்டி வென்று காட்டட்டும். இந்த யுகங்களுக்கான முடிவுகள் டிசம்பர் 3இல் தெரிந்துவிடும் என விமர்சித்து பதில் கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.