ஞானவேல் ராஜா பாவம் சுமக்காதீர்கள்! அமீருக்கு ஆதரவாக இறங்கிய சேரன்!

அமீர் குறித்த பேச்சுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டும் இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வந்த பாடு இல்லை. ஏனென்றால், சரியாக மன்னிப்பு கேட்டு ஞானவேல் ராஜா அறிக்கை விடாத காரணத்தால் சரியாக மன்னிப்பு கேட்கவேண்டும் என சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் ஆவேசமாக அறிக்கையை வெளியீட்டு இருந்தார்கள்.

எனவே, இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இன்னுமே பலரும் அமீருக்கு ஆதரவாக பேசி அறிக்கையை வெளியீட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது இயக்குனர் சேரன் அமீருக்கு ஆதரவாக பதிவு ஒன்றை வெளியீட்டு உள்ளார். அமீர்.. மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு…. காலம் நூறு கடந்தாலும் பணமும் புகழும் கண்ணை மறைத்தாலும் அவர்களை உருவாக்கியவன் நீயே..

வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது!ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சமுத்திரக்கனி!

திமிராய் இரு.. நீயின்றி அவர்களில்லை என்ற கர்வம் மட்டும் போதும் .. உண்மையும் சத்தியமும் வெல்லும். காலம் எல்லா களங்கத்தையும் துடைக்கும். ஞானவேல் ராஜா படைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள் அமீரின் நேர்மையையும், உண்மையும், நாணயமும் நான் நன்கறிந்தவன் என்ற முறையில் நீங்கள் சொன்ன வார்த்தை முற்றிலும் பொய்யானது. கண்டிக்கிறேன் உங்களை. கார்த்தியும் சூர்யாவும் உங்களை இந்நேரம் உம் தவறை கண்டித்திருக்கவேண்டும்.” என சேரன் தெரிவித்துள்ளார். மேலும்,  பருத்திவீரன் படத்தின் சமயத்தில் இருந்தது அந்த படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் அமீர் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே பேசிக்கொள்ளாமல் இருந்தார்கள்.

பிறகு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அமீர் பருத்திவீரன்  படத்தை ரிலீஸ் செய்த போது தான் படாதா பாடு பட்டதாகவும், எனக்கு எதிராக ஞானவேல் ராஜா மற்றும் அவருடைய தரப்பில் சிலர் இருந்ததாக கூறியிருந்தார்.அவரை தொடர்ந்து அடுத்ததாக ஒரு பேட்டியில் ஞானவேல் ராஜா ” அமீர் என்னை கணக்கு விஷயத்தில் ஏமாற்றி விட்டார் அவர் தான் எங்களுக்கு துரோகம் செய்தவர்.

அந்த சமயம் எனக்கு சினிமாவை பற்றி அந்த அளவிற்கு எதுவும் தெரியாது என்பதால் கணக்கு விஷயத்தில் என்னை அமீர் ஏமாற்றிவிட்டார். பணத்தை உழைத்து சம்பாதிக்கவேண்டும் அவர் அப்படி சம்பாதிக்காமல் திருடி சம்பாதிக்கிறார்” என கடுமையாக தாக்கி திருடன் என அமீரை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். இதன் காரணமாக தான் இந்த விவகாரம் இந்த அளவிற்கு பெரிதாக வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.