சென்னை

ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா சென்னை அப்போலோவில் அனுமதி.!

ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா கால்வலி காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ஆந்திர மாநில நகரி தொகுதி எம்எல்ஏவாகவும் , சுற்றுலா மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராகவும் உள்ள நடிகை ரோஜா தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கால் வலி ஏற்பட்டு அதன் காரணமாக மேல்சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு 2 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.

2 Min Read
Minister Roja

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்.!

தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]

4 Min Read
rain tn

இதற்கு தள்ளுபடி! சென்னை மெட்ரோ நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்த கட்டணத்தில் தள்ளுபடி என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு. சென்னை மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்த பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், வரும் 14-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டையைப் பயன்படுத்தி வாகனங்களை நிறுத்திவிட்டு, மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பயணிகள் தங்களது வாகனங்களை அதே நாளில் திரும்ப எடுக்கும் போது வாகன நிறுத்தம் கட்டணத்தில் கட்டண தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. மாதாந்திர வாகன நிறுத்தம் அட்டையை […]

3 Min Read
Chennai Metro

என்.ஐ.ஆர்.எப் 2023 விருது பட்டியல்; சிறந்த உயர்கல்வி நிறுவனம் – ஐஐடி மெட்ராஸ்க்கு முதலிடம்!

நாட்டின் ஒட்டுமொத்த உயர்கல்வி நிறுவனங்களில் தலைச்சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி முதலிடம். மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் வெளியிடப்படும் என்.ஐ.ஆர்.எப் 2023 விருது பட்டியலில், இந்தியாவின் உயர்கல்வியில் சிறந்த கல்வி நிறுவனம் என்று ஐஐடி மெட்ராஸ்க்கு ஒட்டுமொத்த பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை ஐஐடி 5-ஆவது முறையாக, நாட்டிலேயே சிறந்த உயர்கல்வி நிறுவனமாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை முதலிடம், சண்டிகர் பிக்மர் […]

3 Min Read
IITMADRAS

சென்னையில் உலகத்தரத்தில் பன்னாட்டு அரங்கம்! முதலமைச்சர் அறிவிப்பு

சென்னையில் உலக தரத்தில் “கலைஞர் கன்வென்ஷன் சென்டர்” என்ற பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு . சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனை, வரலாறு குறித்து பேசி புகழாரம் சூட்டினார். இதன்பின், பேசிய அவர், கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. மக்களின் மனங்களில் இன்றும் ஆட்சி செய்கிறார் […]

3 Min Read
MK Stalin

அடுத்தடுத்து மோதிய 4 வாகனங்கள் – 20-க்கும் மேற்பட்டோர் காயம் …!

சென்னை பூந்தமல்லி அருகே நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்டதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் சென்னை பூந்தமல்லி அருகே நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்டதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சிறிய சரக்கு வாகனம் திடீரென்று பிரேக் போட்டதில் பின்னால் வந்த நான்கு வாகனங்களும் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நான்கு வாகனங்கள் மோதலை தொடர்ந்து சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபட்டு […]

2 Min Read
accident

சென்னை வந்தடைந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியில் மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்திற்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வரும் நிலையில், இன்று  முதலமைச்சரை சந்திக்க அரவிந்த் கெஜ்ரிவால் தமிழகம் வருகிறார் என கூறப்பட்டது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் வருவதாகவும் கூறப்பட்டது. மாநிலங்களவையில் திமுகவுக்கு 10 எம்பிக்கள் பலம் […]

3 Min Read
Arvind Kejriwal

சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாள் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்ட நிலையில் சென்னை திரும்பியுள்ளார். இந்த பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அதன் […]

3 Min Read
MK Stalin

சென்னையை சேர்ந்த சுரானா நிறுவனத்தின் ரூ.124 கோடி சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை

சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் ரூ.124 கோடி மதிப்புள்ள சுரானா நிறுவன சொத்துக்கள் முடக்கம். சென்னையை சேர்ந்த சுரானா குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்களின் சுமார் ரூ.124 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை. சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் ரூ.124 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதில், 78 அசையா சொத்துக்கள், 16 அசையும் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ரூ.3,986 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் சுரானா நிறுவனத்துக்கு […]

3 Min Read
Enforcement Directorate

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து துறை ஊழியர்கள் – நாளை அதிகாரிகள் ஆலோசனை…!

போக்குவரத்துத்துறை சார்பில் தொழிற்சங்கங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு பேருந்துகள் இயக்காமல் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நேற்று திடீரென்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து துறையில் ஒப்பந்த முறையில் நியமனம் செய்ய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து துறை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனங்களை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனங்களை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்திய […]

3 Min Read
BusStrike

அமைச்சர் அறிவுறுத்தல்..! அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கம்..!

சென்னையில் அரசு பேருந்துகள் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது. சென்னையில் சில இடங்களில் மாநகரப் பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசு போக்குவரத்து துறையில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமனம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தற்பொழுது பேருந்துகள் வழக்கம்போல் இயங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் நடத்திய நிலையில், அமைச்சரின் […]

2 Min Read
BusStrike

சென்னையில் உதவி ஆணையர்கள் இடமாற்றம்!

சென்னையில் 4 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு. சென்னையில் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தரமணி சரக உதவி ஆணையர் ஜீவானந்தம், சென்னை தெற்கு அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பரங்கிமலை சரக உதவி ஆணையர் அமீர் அகமது, தரமணி சரக உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி மோகன், ராயப்பேட்டை சரக உதவி ஆணையராக நியமனம் […]

2 Min Read
DGP Sailendrababu

சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலா நாளை பதவியேற்பு;!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நாளை பதிவியேற்கிறார் சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா. சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா நாளை பதவியேற்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சய்  விஜயகுமார் கங்காபூர்வாலாவுக்கு நாளை பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் ஆளுநர் ஆர்என் ரவி. ஆளுநர் மாளிகையில் நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற […]

3 Min Read
SVGangapurwala

சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக வைத்தியநாதன் நியமனம்!

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நியமனம். சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார். தற்போது சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா இன்றுடன் ஓய்வு பெறுவதால், புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமித்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ராஜா பதவி வகித்து வந்தார். ஏற்கனவே, தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த […]

2 Min Read
SVaidyanathan

தங்கம் விலை உயர்வு..! சவரன் ரூ.45,000-த்தைக் கடந்து விற்பனை..!

உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் கவர்ச்சிமிக்க, மற்றும் ஜொலிக்கக்கூடிய பொருட்கள் என்றாளே மிகவும் பிடித்தமான ஒன்று. அந்த வரிசையில் வைரம் போன்ற விலையுயர்ந்த பொருள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் விரும்புவது தங்கம் தான். தங்கத்தை நகைகளாக அணிவது மட்டுமல்லாமல் அதில் முதலீடு செய்து தேவையான நேரத்தில் அதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய தன்மை கொண்ட தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. அந்தவகையில், இன்று தங்கம் விலை ஏற்றத்தைக் கண்டுள்ளது. அதன்படி, சென்னையில் […]

3 Min Read
Gold price

சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக இன்று 4 பேர் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 4 பேர் இன்று பதவியேற்கின்றனர். சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 4 பேர் இன்று பதவியேற்கவுள்ளனர். அதன்படி, ஆர்.சக்திவேல், கே.ராஜசேகர், பி.தனபால், சின்னசாமி குமரப்பன் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக இன்று பதவியேற்கவுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா புதிய நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். கடந்த மார்ச் மாதம், கொலிஜியம் ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க […]

3 Min Read
madras high court

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள்.. பயணசீட்டு கட்டாயம் – சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்க பயணச்சீட்டுகளை பெற வேண்டும் என நிர்வாகம் அறிவிப்பு. சென்னையில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் ப்ளே ஆஃப் போட்டிகளை கண்டுகளிக்க வருகை தரும் கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்க பயணச்சீட்டுகளை பெற வேண்டும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டு  ஐபிஎல் தொடரை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் இணைந்து வழங்கி வந்தது. அதன்படி, ஐ.பி.எல் […]

5 Min Read
chennai metro

இன்றைய (22.5.2023) பெட்ரோல், டீசல் விலை..!

366-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 35 அல்லது […]

3 Min Read
Today Petrol Rate

ஒரு வருடம் நிறைவு..! பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லை..!

365-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 35 அல்லது […]

3 Min Read
Petrol pump

சென்னையில் 23 பேர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை – காவல் ஆணையர்

நடப்பாண்டில் இதுவரை 181 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 23 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நடப்பாண்டில் இதுவரை 181 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்ற செயல்கள் நடக்காமல் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். சட்டவிரோத செயலிகளில் ஈடுபடும் நபர்களை […]

2 Min Read
Shankar Jiwal