சென்னை ஸ்பெஷல்.. வடகறி செய்வது எப்படி?

வடகறி -வடகறி செய்வது எப்படி என்று இப்பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள் :

 • கடலை பருப்பு =200கி
 • இஞ்சி =1 துண்டு
 • பூண்டு =8 பள்ளு
 • பெரிய வெங்காயம் =2
 • தக்காளி =3
 • பச்சைமிளகாய் =2
 • சோம்பு =1 ஸ்பூன்
 • பட்டை =2 துண்டு
 • கிராம்பு =4
 • சீரகம் =1/2 ஸ்பூன்
 • மிளகாய்தூள் =1 ஸ்பூன்
 • மல்லி தூள் =1 ஸ்பூன்
 • கரம் மசாலா =1 ஸ்பூன்
 • மஞ்சள் தூள் =1 ஸ்பூன்
 • எண்ணெய்=4 ஸ்பூன்

செய்முறை:

கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து அதில் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அதை இட்லி வேக வைக்கும் தட்டில் வடை போன்று தட்டி பத்து நிமிடம் வேக வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் சேர்த்து பொரிந்ததும்  வெங்காயம் ,பச்சை மிளகாய்,பூண்டு 4,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். தக்காளியை அரைத்து சேர்த்துக் கொள்ளவும் .

தக்காளி அரைக்கும் போது ஒரு துண்டு பட்டை, ஒரு ஸ்பூன்சோம்பு, கிராம்பு , இரண்டு ஏலக்காய், இஞ்சி ஒரு துண்டு, பூண்டு 4 பள்ளு சேர்த்து அரைத்து வெங்காயத்துடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளற வேண்டும்.

பிறகு அதில் கரம் மசாலா, மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி விடவும் ,அதன் பச்சை வாசனை போன பிறகு 600 ml தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.

பிறகு நம் வேக வைத்துள்ள கடலைப்பருப்பை உதிர்த்து அதிலே சேர்த்துக் கொள்ளவும், அரை கப் தண்ணீர் ஊற்றி கலந்துவிட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் வடகறி தயாராகிவிடும்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.