செப்டம்பர் 15க்குள் மழைநீர் வடிகால் பணிகள் முழுதாக முடிவடையும்.! சென்னை மேயர் பிரியா உறுதி.! 

செப்டம்பர் 15க்குள் மழைநீர் வடிகால் பணிகள் முழுதாக முடிவடையும்.! சென்னை மேயர் பிரியா உறுதி.! 

Mayor Priya Rajan

செப்டம்பர் 15க்குள் மழைநீர் வடிகால் பணிகள் முழுதாக முடிவடையும் என சென்னை மேயர் பிரியா செய்தியாளர்களிடம் கூறினார். 

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் பணிகள் முழுவீசச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வடிகால் கட்டுமான பணிகளை மேயர் பிரியா அதிகாரிகளுடன் சென்று நேரில் பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் இது பற்றி கூறினார்.

அவர் கூறுகையில், சென்னையில் வடிகால் பணிகள் வரும் செப்டம்பர் 15க்குள் முழுதாக முடிக்க திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதே போல தூர்வாரும் பணிகளும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன என குறிப்பிட்டார்.

மேலும், சென்னையில் மிகவும் சேதமடைந்த 46 அரசு பள்ளிகள் கண்டறியப்பட்டு அவற்றை புதியதாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் பள்ளிகளை சீரமைக்க 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் சென்னை மாநகராட்சி மேயர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Join our channel google news Youtube