செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி.., ஒரு வாரத்தில் முடிவு..!

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலை தமிழக அரசு எடுத்து நடத்துவது தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவு எடுப்பதாக மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசால் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் (HLL Biotech) கடந்த 2012-ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால், தற்போது வரையில் ஒரு டோஸ் மருந்துகூட தயாரிக்காமல் தொடர்ந்து கிடப்பிலேயே உள்ளது.

இந்நிலையில், செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை தமிழகத்திற்கு ஒதுக்க வலியுறுத்துவதற்காக இன்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு டி.ஆர்.பாலு உள்ளிட்டோர்  டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ்வர்தன், பியுஷ் கோயல் ஆகியோரை சந்தித்து பேசினார்.

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலை தமிழக அரசு எடுத்து நடத்துவது தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவு எடுப்பதாக மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர். செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை எடுத்து நடத்த நிதி ஒரு பிரச்னை அல்ல, மக்களை காப்பாற்ற தடுப்பூசி உற்பத்தியை வேகப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர்களை சந்தித்த பிறகு டி.ஆர்.பாலு, தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளனர்.

author avatar
murugan