29 C
Chennai
Wednesday, June 7, 2023

கடந்த 4 ஆண்டுகளாக ரோஹித் ஷர்மா சிறப்பாக ஆடியுள்ளார்…விராட் கோலி புகழாரம்.!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று லண்டன் ஓவல்...

செங்கல்பட்டு, தூத்துக்குடி ஆட்சியர் இடமாற்றம் ரத்து! – தமிழக அரசு

மருத்துவத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடியிடம் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை கூடுதலாக வழங்கல்.

செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத் இடமாற்றம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதுபோன்று தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜின் இடமாற்றமும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசின் தலைமை செயலர் அறிவித்துள்ளார். மேலும், நிதித்துறை செயலாளர் உதயசந்திரனிடம் தொல்லியல் துறை ஆணையர் பதவி கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடியிடம் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநராக கமல் கிஷோரும், ஆவின் மேலாண் இயக்குநராக வினீத்தும் நியமனம்  செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதே சமயத்தில், ஏற்கனவே இருந்த ஆவின் மேலாண் இயக்குநர் சுப்பையன், தற்போது கூட்டுறவு சங்களின் பதிவாளர் பொறுப்புக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

சமீபத்தில் தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உத்தரவு பிறப்பித்திருந்தார். இதில், ராகுல்நாத்திற்கு பதிலாக கமல்கிஷோர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ஏ.ஆர்.ராகுல் நாத், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், இவ்உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.