இன்று இந்த கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

இன்று இந்த கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Rain

தமிழகத்தில் பருவமழை  தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் பகுதி வங்கக்கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது எனவும், இது வரும் 29ஆ தேதி வரை நிலை கொண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 48 மணிநேரத்தில் புயலாக மாற உள்ளது.

சேரி சர்ச்சை… குஷ்பூ வீட்டின் முன் போராட்டத்தில் களமிறங்கிய காங்கிரஸ் கட்சியினர்.! 

இதன் காரணமாக தமிழகம், மற்றும் புதுச்சேரியில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வரையில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Join our channel google news Youtube

உங்களுக்காக