சென்னை வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தனி விமானத்தில் சென்னை வந்தடைந்தார் அமித்ஷா.

திண்டுக்கலில் உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிவிட்டு மீண்டும் புறப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தனி விமானத்தில் சென்னை வந்தடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்.

மாலை 3 மணி அளவில் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இன்று மாலை 4 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார் அமித்ஷா.  இதனிடையே, சென்னை, ஆளுநர் மாளிகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்கள் வரவேற்றார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment