எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம்.! விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு.!

எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம்.! விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு.!

ashwini vaishnaw

எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. செல்போன் உரையாடல்கள் குறித்த ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை செய்தியானது, காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர், பவன் கேரா, ஆம் ஆத்மி எம்பி ராகுல் சத்தா, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி என பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

செல்போன் உரையாடல்கள் குறித்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அலர்ட் செய்திகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த செய்திகள் வந்ததையடுத்து மொபைல் போனை ஹேக் செய்பவர்கள் அரசு ஆதரவுடன் தங்கள் மொபைலை ஹேக் செய்ய முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். ராகுல்காந்தி இந்த செல்போன் உரையாடல்களை கேட்டு, பாஜகவினர் இளம் தலைமுறையினரின் கவனத்தை திசை திருப்ப முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்பு.? ராகுல்காந்தி கடும் கண்டனம்.!

அரசு ஆதரவுடன் இது போன்ற செல்போன் விதிமீறல் நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள் என பல எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அவர்களின் தொலைபேசி நிறுவனத்திடம் இருந்து வந்த எச்சரிக்கை மின்னஞ்சலின் நகலைக் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு காட்டினார். மேலும் இது கிரிமினல்கள் மற்றும் திருடர்களின் வேலை என்று கடுமையாக எச்சரித்தார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் ஒட்டுகேட்பு விவகாரத்தில் அரசாங்கம் மிகவும் தீவிரமாக உள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார். எனவே இந்த அறிவிப்பு வந்தவர்களும், ஆப்பிள் நிறுவனமும் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் கூறுகையில், “ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட அறிவிப்பு குறித்து சில எம்.பி.க்கள் மற்றும் சிலரிடமிருந்து நாங்கள் ஊடகங்களில் பார்த்த அறிக்கைகளால் நாங்கள் கவலைப்படுகிறோம். ஊடக அறிக்கைகளின்படி அவர்கள் பெற்ற அறிவிப்பில், அவர்களின் சாதனங்களில் ‘அரசு ஆதரவு தாக்குதல்கள்’ பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த பிரச்சினையில் ஆப்பிளின் பெரும்பாலான தகவல்கள் தெளிவற்றதாகவும் குறிப்பிட்ட தன்மையற்றதாகவும் தெரிகிறது.

ஏதோ எதிரி நாட்டோடு மோதுவது போல் நினைக்கிறார்கள் – அமைச்சர் துரைமுருகன்

இந்த அறிவிப்புகள் முழுமையற்ற தகவலின் அடிப்படையில் இருக்கலாம் என்று ஆப்பிள் கூறுகிறது. எனவே சில அறிவிப்புகள் பொய்யாக இருக்கலாம். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா உலகளவில் முன்னேறி  வருகிறது. இந்தியாவின் முன்னேற்றத்தை ஜீரணிக்க முடியாத எதிர்க்கட்சிகள் மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். அவர்களின் ஒரே வேலை அரசாங்கத்தை விமர்சிப்பது மட்டுமே.” என்று கூறினார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.
Join our channel google news Youtube