இரவு 7 மணி முதல் 9 மணி வரை இலவசமாக உணவு வழங்கும் பிரபல நடிகர்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுப்பதற்கு ஒவ்வொரு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு வேலை உணவு இல்லாமல் எத்தனையோ பேர் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் விக்னேஷ் ஈக்காட்டுதாக்கலில் உள்ள தனது உணவாகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, இரவு 7 மணி முதல் 9 மணி வரை இலவசமாக உணவருந்தலாம் என அறிவித்துள்ளார். இதற்க்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.