‘புஷ்பா 2’ படத்தின் டீசர் எப்போது தெரியுமா? அல்லு அர்ஜூன் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.!

Pushpa 2 Teaser: அல்லு அர்ஜூன் பிறந்த நாளை முன்னிட்டு ‘புஷ்பா 2’ படத்தின் டீசர் ஏப்ரல் 8ம் தேதி வெளியாகிறது.

‘புஷ்பா’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ஆம் பாகம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா -2’ படத்தின் டீசர் வரும் 8-ஆம் நாள் வெளியாகும் என பட நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1,000 கோடிக்கு மேல் வசூல் ஈட்டும் என திரை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. இந்நிலையில் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால்,  அல்லு அர்ஜுன் ரசிகர்கள் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாட்டத்தை தொடங்கி உள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக ‘புஷ்பா 2’ டீசர் என்ற ஹேஷ்டேக் எக்ஸ் வலைதள பக்கத்தில் டிரெண்டாகி வருகிறது.  முதல் பகுதியை போலவே இதில் ஃபகத் பாசில், ரஷ்மிகா மந்தனா, ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சுனில், அனசூயா பரத்வாஜ், ராவ் ரமேஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த பெரிய பட்ஜெட் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 15 ஆகஸ்ட் 2024 அன்று வெளிவர உள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.