விஷ சாராய வழக்கில் கைது செய்தவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம்…!

விஷ சாராய வழக்கில் கைது செய்தவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம்…!

CBCID

மரக்காணம் விஷச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் 11 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுத்தாக்கல்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஷச்சாராயம் அருந்தி உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாக காவல்துறை தரப்பில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த விவகாரத்தில் 11 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இதனையடுத்து, கைதான 11 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.

Join our channel google news Youtube