ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மூன்றாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் 7.1 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான 2-வது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதத்தை எட்டியிருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறை என கூறப்பட்டது. இந்நிலையில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டின் ஜிடிபி […]
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிப்பவர்களுக்கே பிரதமர் பதவி என, இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார். ஆனால் இதனை ரணில் விக்ரமசிங்க ஏற்க மறுத்து விட்டார். இதனால் அங்கு மிகப்பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதனிடையே, ராபக்சவின் அமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் அரசு நிதியைப் பயன்படுத்துவதற்கு இலங்கை நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிப்பவர்களுக்கு பிரதமர் பதவி வழங்க, அதிபர் […]
அமெரிக்க முன்னாள் அதிபரான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் ஆவார்.இவருக்கு வயது 94 ஆகும். இவர் அமெரிக்காவின் 41வது அதிபராக பதவி வகித்தவர். ஆவார்.அதேபோல் 43வது துணை அதிபராகவும் பதவி வகித்தவர். 1989 முதல் 1993 வரை அமெரிக்காவின் அதிபராக இருந்துள்ளார் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக அமெரிக்க முன்னாள் அதிபரான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார்.
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் வாகனங்கள் எரிந்து நாசமாகின. இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் நேற்று நள்ளிரவில் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் பெட்ரோல் குண்டை அங்கே இருந்த வீடு ஒன்றின் மீது வீசி விட்டு சென்றது. இதனால் அந்த வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவை எரிந்து நாசமாகின. வீட்டின் கண்ணாடிகள் மற்றும் கதவுகள் சேதமடைந்தன. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். www.dinasuvadu.com
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது. “நாட்டுக்கு வெளியே நடைபெறும் பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் எல்லையை பயன்படுத்த அனுமதிப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. பாகிஸ்தான் மக்களின் மனநிலை மாறிவிட்டது. பாகிஸ்தான் மக்கள் இந்தியாவுடன் அமைதியாக இருக்கவே விரும்புகிறார்கள்.காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முடியுமா? என்று கேட்டதற்கு, “முடியாதது எதுவும் இல்லை. எந்த பிரச்சினை குறித்தும் பேசுவதற்கு நான் தயார். காஷ்மீர் பிரச்சினைக்கு ராணுவம் […]
இலங்கையில் அதிபர் சிறிசேனா, ராஜபக்சே தலைமையிலான அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் ஜனநாயக இயக்கத்தினர் 10 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கிய அதிபர் சிறிசேனா, அந்த பதவிக்கு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தார். இதைத் தொடர்ந்து ராஜ்பக்சே பெரும்பான்மை நிரூபிக்க வேண்டியிருந்த சூழலில் நாடாளுமன்றத்தையும் முடக்க உத்தரவிட்டார். இந்த விவகாரம் இலங்கை அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதிபர் சிறிசேனாவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, […]
பூச்சி உளவாளிகளின் உதவியால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் துப்பு துலக்கி, குற்றவாளிகளை கண்டுபிடித்து உள்ளது அபுதாபி போலீசார். பூச்சிகளை கொண்டு குற்றவாளிகளை கண்டறிந்து வருகின்றனர் அபுதாபி போலீசார்.நவீன தொழில்நுட்பங்களை தற்போது குற்றவாளிகளை கண்டுபிடிக்க அபுதாபி போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஒருபடி அபுதாபி போலீசார் பூச்சிகளையும் ரகசிய உளவாளிகளாக மாற்றியுள்ளனர்.பூச்சிகள் மூலம் ஆதாரங்களையும், தடயங்களையும் சேகரிக்கின்றனர் அபுதாபி போலீசார். https://www.facebook.com/taqwamuslim/videos/285221872299196/ அதேபோல் பூச்சி உளவாளிகளின் உதவியால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் துப்பு துலக்கி, குற்றவாளிகளை கண்டுபிடித்து உள்ளதாக அபுதாபி போலீஸ் உயர் அதிகாரி […]
இன்று கோலாகலமாக இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் திருமணம் நடைபெற்றது. இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மெகன் மார்கலை திருமணம் செய்ய உள்ளதாக கடந்த ஆண்டு அரசக் குடும்பம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அவர்களது திருமணம் மே மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள வின்ட்சர் கோட்டையில் இளவரசர் ஹாரி மெகன் மார்கல் திருமணம் […]
இரு துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ந் தேதி சந்தித்துப் பேசுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் திடீரென வடகொரியாவின் போக்கில் மாறுதல் ஏற்பட்டு உள்ளது. அணு ஆயுதங்களை கைவிடும் பிரச்சினையில் அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக தனக்கு மென்மேலும் அழுத்தம் தருவதாக வடகொரியா கருதுகிறது.இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் திடீரென வட கொரியா, டிரம்புடனான […]
இங்கிலாந்து இளவரசர் ஹாரி – மேகன் மெர்கல் திருமணம், பிரிட்டனின் விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஹாரியின் தந்தையும், இளவரசருமான சார்லஸ், மணமகள் மெர்கலுக்கும் தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைக்க இருக்கிறார். உடல் நலக்குறைவு காரணமாக மெர்கலின் தந்தை, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளார். எனவே, மெர்கலின் வேண்டுகோளை ஏற்று சார்லஸ், அவருக்கும் தந்தை இடத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைக்க இருக்கிறார். 36 வயதாகும் […]
ஹவாய் தீவில் kilauea எரிமலை கரும்சாம்பலை வெளியேற்றி வருவதால், வான் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 12 நாட்களுக்கு முன் வெடிக்கத் தொடங்கிய அந்த எரிமலை, 12 ஆயிரம் அடி உயரத்திற்கு கரும் சாம்பலை வெளியேற்றி வருகிறது. தொடர்ந்து அதிக அளவில் கரும்சாம்பல், ரசாயன வாயுக்கள் வெளியேறலாம் என்று அறிவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் வான் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதை குறிப்பிடும் வகையில் ரெட் அலர்ட் எச்சரிக்கையை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. […]
துறைமுக அதிகாரி ஒருவர் அமெரிக்காவில் பதவி அதிகாரத்துடன் போலீசாரை மிரட்டிய நிலையில் ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸியின் துறைமுக ஆணையரான கேரன் டர்னர் (Caren turner) உடைய மகளின் கார் போக்குவரத்து விதி மீறலுக்காக நிறுத்தப்பட்டது. அனுமதிக்கப்படாத கண்ணாடியின் அடர் நிறத்துக்காக நிறுத்தப்பட்ட காரின் பதிவு உரிமம் முடிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையறிந்து அங்கு வந்த டர்னர் தமது அடையாள அட்டையைக் காண்பித்து போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவர்களை சபிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதுகுறித்து […]