பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலத்தீவின் உயரிய விருது வழங்கப்பட்டது. இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்திய அளவில் பாஜகவின் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்ற பின் அவரது வெளிநாட்டு பயணங்கள் குறித்த திட்டங்கள் வெளியிடப்பட்டது. இன்று பிரதமர் நரேந்திர மோடி குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.பின்னர் அங்கு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.இதன் பின்னர் மாலத்தீவிற்கு விமானம் மூலம் கிளம்பினார். மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்ற […]
துபாயில் நடந்த பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். சொகுசு பேருந்து ஓன்று ஓமனில் இருந்து துபாய் திரும்பி கொண்டிருந்தது.இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.இந்த பேருந்து துபாய் அருகே வந்தபோது அந்த இடத்தில் இருந்த அறிவிப்பு பலகை மீது மோதியது.இதனால் பேருந்து அப்பளம் போல நொறுங்கியது.பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 17 பேர் உயிரிழந்தனர்.மேலும் 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு காயம் […]
கடலின் நடுவில் கப்பலில் இருந்த படியே விண்வெளிக்கு ஏவுகணையை அனுப்பி உலக அளவில் சாதனையை செய்துள்ளது சீனா. பல்வேறு துறைகளில் முன்னேறி இருக்கும் சீனாவின் இத்தகைய சாதனையை கண்டு உலக நாடுகள் பல வியப்பில் உள்ளன. சீனாவின் ஷாண்டோங் கடலில் இருந்து இந்திய நேரப்படி, நேற்று பகல் 12.07 அளவில் ஏவப்பட்டுள்ளது.சீனாவின் இந்த சாதனைக்கு அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கும், விண்வெளி துறைக்கும் உலக நாடுகள் பல வாழ்த்து தெரிவித்துள்ள.
அலுவலகத்திற்கு வரும் பெண்கள் “Skirt ” என்னும் குட்டை பாவாடை அணிந்து வந்தால் அவர்களுக்கு அதிகமாக சம்பளம் வழங்கப்படும் என்று ரஷ்யாவில் உள்ள அலுமினியம் தயாரிக்கும் நிறுவனம் ஓன்று தெரிவித்துள்ளது. femenity marathon என்பதன் அடிப்படையில், பெண்கள் முழங்காலுக்கு கீழே 5 செ.மீ அளவுக்கு அடையையோ , skirt என்னும் அடையயோ அணிந்து வந்தால் அவர்களுக்கு ரஷ்ய மதிப்பில் 100 ரூபிள்ஸ் வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், […]
உலகலாவிய சிறந்த தலைமை பதவிக்கான விருது, கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்பு வகிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிட்சைக்கு வழங்கப்பட உள்ளது. சுந்தர் பிட்சை கடந்த நான்கு வருடங்கள் முன்பு கூகுள் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பு பதவி ஏற்றார். அவர் பல்வேறு சவால்களை ஏதிர்கொண்டு வழி நடத்தினர். கூகுள் நிறுவனம் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமைதியான முறையில் விளக்கம் அளித்தார். இது உலகம் முழுவதும் அவருக்கு நன்மதிப்பை பெற்று தந்தது. இந்நிலையில், 2019 […]
ஐக்கிய நாடுகள் சபையால், சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், ஜூன்-5ம் தேதி உலக சுற்றுசூழல் தினம் கொண்டாடப்படுகிறது. நாம் அனைவருக்கும் சுற்றுசூழலை பாதுகாப்பதில் மிக முக்கியமான கடமையாக உள்ளது. இயற்கை நமக்கு இறைவன் கொடுத்த வரம். அதை அழிப்பதற்கு நமக்கு எந்த அதிகாரமும் கொடுக்கப்படவில்லை. நாம் நம்முடைய சுய தேவைகளுக்காக இயற்கையை அழிப்பது, இறுதியில் அதுவே நமக்கு கண்ணியாக மாறி விடுகிறது. நாம் இயற்கையை என்று அழிக்க துணிந்தோமோ, அன்றே நமது உடல் ஆரோக்கியமும், சுற்றுசூழல் […]
இலங்கையில் மீண்டும் அரசியல் பதற்றம் உருவாகியுள்ளது. இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லீம் அமைச்சர் அனைவரும் தங்கள் பதிவிகளை ராஜினிமா செய்ய முடிவு எடுத்துள்ளதாக இலங்கை முஸ்லீம் அமைச்சர் ரவுஃப் ஹக்கீம் தகவல் தெரிவித்துள்ளார்.இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு உலக நாடுகளை எல்லாம் அச்சுறுத்தியது.இதில் அந்நாட்டு அப்பாவி மக்கள் அநியாயமாக உயிரிழந்தனர். இந்நிலையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தொடர்ந்து இலங்கை அரசியலில் பரபரப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இனிமேல் விசா வேண்டி விண்ணப்பிப்பவர்கள், தங்களின் சமூக வலைதள விவரங்களை அளிக்க வேண்டும் என அமெரிக்கா புதிய விதியை விதித்துள்ளது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், விசா கோருபவர்கள், இனிமேல் தங்களின் சமூக வலைதள விபரங்களையும் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும், குறைந்தது 5 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட இ-மெயில் விவரத்தையும், தொலைபேசி எண்களையும் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு ஒரு கோடியே 47 லட்சம் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளனர். […]
பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் செய்த தவறான செயல். பின்னர் அந்த பெண்ணின் உடல் முழுவதும் தீப்பற்றி 40 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்து பின்னர் உயிரிழந்துள்ளார். ரோமானியாவில் உள்ள புக்கரெஸ்டில் அமைந்திருக்கும் ப்ளோரியாஸ்கா மருத்துவமனையில் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 66 வயதுடைய பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த தேதி அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்துள்ளனர். பின்னர் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு அந்த பெண் மீது ஆல்கஹால் மாதிரியான […]
பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஐ.நா மாநாடு போலந்தில் தொடங்கியது. உலக வெப்பமயமாதல் சர்வதேச நாடுகளுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எனவே இதனை 2 டிகிரி செல்சியஸுக்கும் கீழே குறைக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்து இலக்கு நிர்ணயித்தன. இது தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க, ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு முன்பு, பாரீசில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த, 200 நாடுகளின் பிரதிநிதிகள் போலந்தில் உள்ள கடோவைஸ் நகரில் ஒன்று கூடியுள்ளனர். […]
இந்தியா மற்றும் ஸ்பெயின் இடையே கைதிகளை பரிமாறிக்கொள்ளும் பரஸ்பர ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் குற்றம்புரிந்துவிட்டு வெளிநாடுகளில் சில குற்றவாளிகள் தலைமறைவாகிவிடுகின்றனர். அவர்களை மீண்டும் இந்தியா அழைத்து வர வேண்டுமென்றால் இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் கைதிகளை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் அமலில் இருக்க வேண்டும். இந்தநிலையில் ஸ்பெயினுடன் இந்தியா மேற்கொண்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. அதன்படி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் கைதிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படாது என ஸ்பெயினிடம் இந்திய அரசு உறுதி அளித்துள்ளது. […]
ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு பொதுத்தேர்தலே ஒரே வழியென, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஜனநாயகமும் பொதுத்தேர்தல்களும் என்ற அறிக்கையில், இலங்கையின் அரசியலமைப்பின் படி இறைமை என்பது மக்களிடத்தில் தான் உள்ளதே தவிர நாடாளுமன்றத்திடம் இல்லை என்று கூறியுள்ளார். மக்கள் தங்கள் இறைமையை வாக்களிப்பு மூலமே பயன்படுத்துகின்றனர் என்று குறிப்பிட்டுள்ள ராஜபக்ச, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல்களை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதை இலங்கையில் மட்டும்தான் காணமுடிகிறது என்று கூறியுள்ளார். ஆறு மாகாண சபைகள் […]
பிரான்ஸ் நாட்டில் போராட்டக்காரர்களால் நாடு சூறையாடப்பட்டு கலவரம் பலம் பெற்று வருவதால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படப்படும் எனக் கூறப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் மற்றும் அத்தியவாசிய பொருட்களின் மீதான வரியானது அதிகபடுத்தபட்டுள்ளது.இதனை கண்டித்து இன்று அந்நாடு முழுவதும் மக்கள் பல போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டங்கள் ட்விட்டரில் #YELLOW JACKETS என்ற ஹெஸ்டேக்கில் பதிவிடப்பட்டு வருகின்றனர் போராட்டக்காரர்கள்.இந்நிலையில் பல இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் முகமூடி அணிந்து வந்த இளைஞர்கள் பலர் கலவரங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் […]
இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கே பிரதமர் பதவியை வழங்க உள்ளதாக அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார். இலங்கையில் பெரும்பான்மையுடன் பதவி வகித்த ரனில் விக்ரமசிங்கே, தம்மை கொலை செய்ய சதி செய்ததாக பிரதமர் பதவியில் இருந்து பதவிநீக்கம் செய்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக அதிபர் சிறிசேனா நியமித்தார். இது, சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ராஜபக்சே திணறினார். இந்நிலையில், தமிழ் […]
எச்-1 பி விசா விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்கி வேலை செய்வதற்காக ‘எச்-1 பி’ விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. ஆண்டுதோறும் 65 ஆயிரம் பேர் இந்த விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசா விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் […]
உலக அளவில் தொழில் நுட்பத் துறையில் சிறந்து விளங்கும், 50 பெண்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 பேர் இடம் பிடித்துள்ளனர். நியூயார்கிலிருந்து வெளி வரும் பிரபல பத்திரிகையான, போர்ப்ஸ் உலக அளவில், தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் 50 பெண்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய வம்சவளியை சேர்ந்த 4 பெண்கள் இடம்பிடித்துள்ளனர். இந்த பட்டியலில், இந்திய வம்சாவளியான’சிஸ்கோ’ நிறுவனத்தின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரி, பத்மஸ்ரீ வாரியர் (Padmasree warrior) ‘உபேர்’ நிறுவனத்தின் […]
அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கிய அலாஸ்கா மாநிலத்தில் அவசரநிலையை பிரகடனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள அன்கரேஜ் நகரின் அருகே ஏற்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை சில மணி நேரத்துக்கு பின்னர் திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அம்மாநிலத்தில் உள்ள பல சாலைகள், வீடுகள் மற்றும் அரசு கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அர்ஜென்டினா நாட்டுக்கு சென்றிருக்கும் அமெரிக்க […]
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மூன்றாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் 7.1 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான 2-வது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதத்தை எட்டியிருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறை என கூறப்பட்டது. இந்நிலையில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டின் ஜிடிபி […]
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிப்பவர்களுக்கே பிரதமர் பதவி என, இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார். ஆனால் இதனை ரணில் விக்ரமசிங்க ஏற்க மறுத்து விட்டார். இதனால் அங்கு மிகப்பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதனிடையே, ராபக்சவின் அமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் அரசு நிதியைப் பயன்படுத்துவதற்கு இலங்கை நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிப்பவர்களுக்கு பிரதமர் பதவி வழங்க, அதிபர் […]
அமெரிக்க முன்னாள் அதிபரான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் ஆவார்.இவருக்கு வயது 94 ஆகும். இவர் அமெரிக்காவின் 41வது அதிபராக பதவி வகித்தவர். ஆவார்.அதேபோல் 43வது துணை அதிபராகவும் பதவி வகித்தவர். 1989 முதல் 1993 வரை அமெரிக்காவின் அதிபராக இருந்துள்ளார் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக அமெரிக்க முன்னாள் அதிபரான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார்.