குளியல் தொட்டியில் குளிக்கும் பொது, சார்ஜ் செய்து வைத்த செல்போன் விழுந்ததால், ரஷ்யாவை சேர்ந்த பெண்மணி உயிரிழந்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த எல்ஜினியா என்ற பெண். இவர் சம்பவத்தன்று, தனது கைபேசியுடன் குளியலறைக்கு சென்றுள்ளார். குளியல் தொட்டிக்கு அருகில் உள்ள மின் இணைப்பில் தனது கைபேசிக்கு சார்ஜ் போட்டுவிட்டு, குளிக்க தொட்டிக்குள் இறங்கினார். அப்பொழுது, எதிர்பாராத விதமாக அவரின் கைபேசி தவறி தொட்டிக்குள் விழுந்தது. இதில், மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். எல்ஜினியாவின் இறப்பு, அந்த […]
பிரதமர் நரேந்திர மோடிக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையில் நடக்கும் சந்திப்பு குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் பேசியுள்ளார். மேலும் அவர் பேசுகையில் “காஷ்மீர் போன்ற விஷயங்களைப் பொறுத்தவரை, இது பேச்சுவார்த்தைகளை ஆக்கிரமிக்கும் ஒரு முக்கிய தலைப்பாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சினைகள் மற்றும் அதிகமான “மூலோபாய சிந்தனையை” உள்ளடக்கிய பிரச்சினைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக அவர் […]
சௌதி அரேபியாவில் எண்ணெய் வயல்களை இரான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகளை வைத்து தாக்கியுள்ளதாக சௌதி அரேபியா இரான் மீது குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலை சௌதி அரேபியாவிற்கு ஆதரவு அளிக்கும் ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா விமானத்தை வைத்து தாக்குதல் நடத்தியதாக கூறியிருந்தார்கள் . ஆனால் இதில் இரானின் பங்கு இருப்பதாகவும் சௌதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சரகம் தெரிவித்துள்ளது. மேலும் சௌதி அரேபியா எந்த இடத்தில் தாக்குதல் நடத்த பட்டது என்ற தகவலை […]
ஆப்ரிக்காவில் தான்சானியாவின் காசாலா என்ற காட்டு பகுதியில் பத்தடி நீலம் கொண்ட மலை பாம்பை ஆப்பிரிக்காவை சேர்ந்த மக்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு பிடித்துள்ளனர். தெய்வீக சக்தி கொண்டது என்று நினைத்து மலை பாம்பை பிடித்து ஆப்பிரிக்காவை சேர்ந்த மக்கள் அதற்கு பூஜை செய்து வழிபட்டுள்ளனர். மேலும் அவர்கள் இந்த மலை பாம்பிற்கு பல உணவுகளை படைத்தும் வழிபட்டுள்ளனர். அந்த மலைப்பாம்புக்கு உணவுகள் கொடுத்து வழிபட்டால் நல்லது நடக்கும் என்று நினைத்து பக்தர்கள் மலைப்பாம்பு திணறும் அளவிற்கு […]
பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளி வழியாக பறக்க அனுமதி மறுத்துவிட்டது பாகிஸ்தான் அரசு. இந்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும்,அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க உள்ளதாகவும் அறிவித்தது.ஆனால் இந்தியாவின் இந்த அறிவிப்புக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 21-ஆம் தேதி அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்லவுள்ளார்.இதனால் இந்தியா சார்பில் பாகிஸ்தானிடம் அந்நாட்டு வான்வழியாக பறக்க அனுமதிகோரியிருந்தது.இந்த […]
தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு புத்தர் கோவிலில் புலிகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வந்தன. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட புலிகள் வளர்ப்பு பிராணிகள் போல அங்குள்ளவர்களால் வளர்க்கப்பட்டு வந்ததால் அந்த குறிப்பிட்ட புத்தர் கோயிலை சுற்றுலாவாசிகள் புலிகள் கோவில் என்றே அழைக்கபடுகின்றன. இந்த காப்பகத்தில் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்க புலிகள் முறைகேடாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. மேலும் அப்புலிகளை தவறான செயலுக்கு பயன்படுத்துகின்றனர் என குற்றம் கூறி தாய்லாந்து அரசு அப்புலிகளை மீட்டு வனக்காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் அந்த நாட்டு அதிபரை குறிவைத்து நடைபெற்ற குண்டு வெடிப்பில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் , 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபராக இருந்து வருபவர் அஸ்ராப் கனி .இன்று பர்வானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றா அதிபர் அஸ்ராப் கனி.ஆனால் அங்கு எதிர்பாராத விதமாக குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.இந்த சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் , 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த தாக்குதல் அதிபரை […]
“Howdy Modi” நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்கிறார். ஐ.நா.பொதுசபையின் கூட்டம் வருகின்ற 17-ஆம் தேதி தொடங்குகிறது .இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.இதற்காக அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இதனை தொடர்ந்து 22-ஆம் தேதி டெக்ஸாஸில் உள்ள ஹோஸ்டனில்(Houston) அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள “Howdy Modi” நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி. இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகிவந்தது. […]
ரூ. 8,88,31,000 மதிப்பிலான தங்க கழிவறை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டை சேர்ந்த கலைஞர் மயூரிஜியோ காட்டலன் ( Maurizio Cattelan) தங்க கழிவறை ஒன்றை வடிமைத்தார்.இது 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்டது. கலை நயத்துடன் உருவாக்கப்பட்ட இந்த கழிவறை குக்கேன்ஹெய்ம் மியூசியத்தில் (Guggenheim Museum in New York, United States) கண்காட்சிக்காக வைக்கப்பட்டது.இந்திய மதிப்பில் இந்த தங்கத்தால் ஆன கழிவறையின் மதிப்பு ரூ. 8,88,31,000 ($1.25 million) ஆகும். […]
கனட நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். கனடாவில் அடுத்த மாதம் 21 -ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.இதனால் கனடாவின் பிரதமராக உள்ள ஜஸ்டின் ட்ரூடோ அந்த நாட்டு கவர்னர் ஜெனரலான ஜூலி பயட்டே (Julie Payette) -வை நேரில் சந்தித்து நாடாளுமன்றத்தை கலைக்குமாறு பரிந்துரை செய்தார். இதற்கு பின்னர் கவர்னர் ஜெனரல் ஜூலி பயட்டே (Julie Payette) நாடாளுமன்றத்தை கலைக்க ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலைக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஒரு தனி நபரின் வங்கி கணக்கில் இந்திய மதிப்பில் சுமார் 86 லட்சம்ரூபாய் தவறாக வரவு வைக்கப்பட்டது. ஆனால் அவர் அதனை வங்கியிடம் திரும்ப செலுத்தாமல் செலவு செய்து தற்போது தனது கணவருடன் சேர்ந்து சிறைக்கம்பி எண்ண காத்துக்கொண்டிருக்கிறார். பென்சில்வேனியா மாகாணத்திற்கு உட்பட்ட மாண்டோர் ஸ்வில்லி எனும் பகுதியை சேர்ந்தவர் டிப்பினி வில்லியம்சன் கணக்கில் தான் அமெரிக்க டாலர் 1 லட்சத்து 20 ஆயிரம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டது. அந்த பணம் தவறுதலாக வரவு […]
இந்தியாவின் நீண்ட நாள் கனவான சந்திராயன் -2 விண்வெளியில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.சந்திராயன் -2 விண்கலம் ஒவ்வொரு திட்டமும் வெற்றிகரமாக முடிந்தது.ஆனால் நிலவின் தென் துருவத்தில் ஆர்பிட்டரை களமிறக்கும் திட்டம் மட்டும் தான் சிறிது சறுக்கலில் முடிந்தது.அதாவது நிலவில் இருந்து சரியாக 2.5 கிலோமீட்டர் தூரத்தில் அதன் சிக்னல் கிடைக்காமல் போனது.நாடு முழுவதும் இதனை எதிர்பார்த்து இருந்தவர்கள் இடையேபெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரோவின் இந்த முயற்சிக்கு பல தரப்பு மக்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில்,பாகிஸ்தானின் முதல் […]
மத்திய அமெரிக்காவிலுள்ள, ஹேண்டுராஸ் நாட்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் போர்ஃபிரீ – ஓ – லோபோ அவர்களின் மனைவி பொனிலா, நாட்டு மக்களின் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறி அவருக்கு 58 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. போர்ஃபிரீ – ஓ – லோபோ ஹேண்டுராஸ் நாட்டின் குடியரசு தலைவராக இருந்துள்ளார். நான்காண்டு ஆட்சி காலத்தில் அவர், அந்நாட்டிற்கு வந்த சர்வதேச நன்கொடை மற்றும் மக்கள் வரிப்பணத்திலிருந்து 7,79,000 டாலர் மோசடி செய்ததாக […]
ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரை பாகிஸ்தான் அரசு விடுவித்ததாக இந்திய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த பதற்றம் ஓய்ந்த நிலையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சமீபத்தில் ரத்து செய்து மத்திய […]
சீனாவில், சிச்சுவான் மாகாணத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 6.40 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.4 என ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வினால் 100க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. 1000க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதத்திற்கு உள்ளாகின. இந்த நிலநடுக்கத்தால் ஒரே ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளதாவும், 60க்கும் மேற்பட்டவர்கள் அடிபட்டதாகவும், மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இஸலாமிய கலாச்சாரத்தில் மனைவியை விவாகரத்து செய்ய கணவன்மார்கள் மூன்றுமுறை தலாக் என கூறினால் போதும். கணவன் மனைவியை பிரிந்துவிட்டதாக அர்த்தம் கொள்ளப்படும். இந்த முத்தலாக் நடைமுறைக்கு தடை விதித்து, இந்திய பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வருகிறது. இதேபோல சில இஸ்லாமிய நாடுகளிலும் முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது விரைவில் அண்டை நாடான பாகிஸ்தானும் இணைய உள்ளது. பாகிஸ்தானில் இஸ்லாமிய நெறிமுறைகள் பற்றி அரசுக்கு யோசனை கூறும் இஸ்லாமிய சித்தாந்த கவுன்சிலானது, முத்தலாக் […]
உலகம் முழுவதும் அதிகம் இணையதளவாசிகளால் பயன்படுத்தப்படும் சமூக வலைதள பக்கம் பேஸ்புக். இந்த இணைய தள பக்கத்தை பயன்படுத்தி பல கோடி கணக்கானவர்கள் தங்களது நட்பு வட்டாரத்தை பெருக்கி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த Tech Crunch நிறுவனம் அண்மையில் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. அதாவது பேஸ்புக்கில் பாதுகாப்பு வசதிகள் குறைவாக உள்ளதாகவும், அதன் காரணமாக கோடிகணக்கான பயணர்களின் விவரங்கள் கசிந்து உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதில் அமெரிக்காவை சேர்ந்த 11 கோடி பேரின் தகவல்களும், […]
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து இந்திய காஷ்மீர் எல்லை பகுதியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆய்வு செய்துள்ளார். பாகிஸ்தானில் ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ஆம் தேதி மாவீரர்கள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.அதாவது பாகிஸ்தான் ராணுவத்தில் வேலை செய்து போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் விதமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் மாவீரர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் போரில் […]
பாகிஸ்தானிலும் சுமார் 75 லட்சத்திற்கு மேற்பட்ட ஹிந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் சிந்து மாகாணத்தில் தான் பெரும்பாலானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஒரு இந்து பெண்மணி காவல்துறை உதவி ஆய்வாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார். பாகிஸ்தான் காவல்துறையில் முதல் ஹிந்து பெண் அதிகாரி ஆக இவர் திகழ்ந்துள்ளார். பாகிஸ்தான், சிந்து மாகாணத்தை சேர்ந்த புஷ்பா கோலி என்பவர், காவலர் போட்டித்த தேர்வு எழுதி அதில் வெற்றி கண்டு தற்போது பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் துணை உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு […]
சீனாவில் தற்போது முகத்தை மட்டும் காட்டி அவரவர் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது முன்பு போல ஏடிஎம் கார்டு, டெபிட் கார்ட் போன்ற கார்ட்கள் இல்லாமல் முகத்தை மட்டும் காட்டினால் போதும், உங்கள் கணக்கிலிருந்து நீங்கள் பர்சேஸ் செய்ததற்கான மதிப்பு உங்கள் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும். சீனாவில் கார்ட் உபயோகப்படுத்தி கடவுச்சொல்லை உள்ளீடு செய்து சிலர் நோட்டமிட்டு அந்த வங்கிகளில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி எடுத்துவிடுகின்றனர். அதனை தடுக்கும் […]