இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு இது வரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும், விசாரித்து வருவதாகவும் இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானத்தில் இருந்து வேகமாக வந்த குண்டுகள் தோட்டத்தில் விழுந்ததால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று பாதுகாப்புப் படை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் போது, அந்த நேரத்தில் […]
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது என்பதற்காக ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய போன்ற நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவிகள் அளித்து வருவதால் உக்ரைனும் ரஷ்யாவை எதிர்த்து பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக தற்போது வரை கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த […]
இலங்கை : இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி, தேசிய மக்கள் சக்தி கட்சி 3-ல் 2 பங்கு இடங்களில் வென்று பெரும்பான்மையைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 196 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு, மீதமுள்ள 29 பேர் தேசிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் நடந்த 196 இடங்களில், பெரும்பான்மையைப் பெற குறைந்தது […]
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க பதவி ஏற்றார். அதன் பிறகு நாட்டில் சட்டதிருத்தங்களை விரைவாக கொண்டு வர நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து கடந்த செப்டம்பர் மாதமே இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தார் இலங்கை புதிய அதிபர். அதன் பிறகு இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நேற்று (நவம்பர் 14) முடிந்து இன்று […]
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது உலக அளவில் அவர் மீது கவனத்தை ஈர்க்க செய்துள்ளது. மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த அந்த பெண் பார்லிமென்டில் ஹக்கா எனப்படும் மாவோரிகளின் நடனம் ஆடி எதிர்ப்பை தெரிவித்தார். நியூசிலாந்து அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வைதாங்கி உடன்படிக்கையில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வருவதற்காக நியூஸிலாந்தின் ஆளும் கூட்டணியான ACT கட்சி […]
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை ‘மெட்டா’ நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க் ஜுக்கர்பர்க் நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில், முறையற்ற வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் எனும் பெயரில் பல முறை ஒரு சில நாடுகளால் குறிப்பாக பிரேசில் நாடு புகார் தெரிவித்தது. அதாவது மெட்டா நிறுவனம், மார்க்கெட்பிளேஸ் எனும் விளம்பரத் தொழில் ஈடுபட்டு வருகிறது. இந்தத் தொழிலை ஃபேஸ்புக்கில் புகுத்திய மெட்டா, பயனர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மார்க்கெட்பிளேஸ்ஸை கட்டாயம் […]
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும் இடத்தில் மக்கள் வெளியேறவும் இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக இஸ்ரேல் ராணுவம், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது இஸ்ரேல் ராணுவம் பெய்ரூட் விமான நிலையத்தின் அருகாமையில் வான்வெளித் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதன் விளைவாக அங்கிருந்த கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகி இருக்கிறது. […]
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது சர்ச்சையில் சிக்கினால் கூட அந்த செய்தியும் ஒரு ட்ரெண்டிங்கான செய்தியாக மாறிவிடுகிறது. அப்படி தான், பாகிஸ்தானில் டிக்டாக் தளத்தில் வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர் இம்ஷா ரஹ்மான். இவருக்கு டிக் டாக் தளத்தில் மட்டும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறலாம். எனவே, ரசிகர்களை மகிழ்விக்க தனது பக்கத்தில் வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டுக்கொண்டே இருந்தார். இந்த […]
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்வாகியுள்ள டோன்லட் டிரம்ப் வரும் 2025-ம் ஆண்டில் அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்க இருக்கிறார். இந்த இடைப்பட்ட நாட்களில் அவர் தனது அமைச்சரவையில் தன்னுடன் பணிபுரிய உள்ளவர்களை தேர்வு செய்து வருகிறார். அதன்படி, முன்னதாக தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமியை அமெரிக்க நாட்டின் செயல்திறன் துறையின் தலைவராக நியமனம் செய்தார் டிரம்ப். அதனைத் தொடர்ந்து தற்போது, அமெரிக்காவின் உளவுத்துறை தலைவராக துளசி கபார்டை […]
அமெரிக்கா : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாகப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக அதிபராகியுள்ளார். அமெரிக்கத் தேர்தல் விதிமுறைப்படி, தேர்தலில் வெற்றி பெற்றாலும் அடுத்தாண்டு ஜனவரி மாதம் அதிபராகப் பொறுப்பேற்கவேண்டும். எனவே, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் தன்னுடைய தொண்டர்கள் முன்னிலையில், அதிபராக டொனால்ட் டிரம்ப் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது. இந்த சூழலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த […]
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை வாக்குப்பதிவு செய்யப்படும், சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அநுர குமார திசநாயக வெற்றி பெற்றார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் 21 கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி களமிறங்குகிறது. மேலும், ராஜபக்சேக்களின் இலங்கை பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, புதிய […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி-25ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார். இதனால், இந்த இடைப்பட்ட நேரத்தில் டிரம்ப் தனது நிர்வாகத்துக்கு ஏற்ப நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். முன்னதாக தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு தேர்தலுக்கு முன்பே அமைச்சரைவையில் பங்கு இருக்கும் என டிரம்ப் தெரிவித்திருந்தார். முக்கிய பொறுப்பு : அதன்படி, தற்போது அந்த வகையில் டொனால்ட் டிரம்ப் வெற்றிக்கு உதவிய டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் […]
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான் இன்று வழக்கம்போல் 80க்கும் மேற்பட்டோர் மையத்தில் உள்ள சாலையில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். அப்போது, அந்த மையத்திற்குள் ஒரு சிறிய எஸ்யூவியை காரை ஒட்டிக்கொண்டு வேகமாக நபர் வந்தார். அங்குக் கூட்டமாக அவர்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருப்பதைப் பார்த்தும் காரை நிறுத்தாமல் வேண்டுமென்றே சாலையில் உடற்பயிற்சி செய்துகொண்டு இருந்தவர்களை வேகமாகக் காரை வைத்து மோதத் தொடங்கினார். அங்கிருந்தார்கள் தங்களுடைய […]
அமெரிக்கா : இந்திய வம்சாவளியாளரும், அமெரிக்க குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான விவேக் ராமசாமி சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்கர் ஒருவர் விவேக் ராமசாமியிடம், ” உங்களுடைய இந்து மதம் கிறிஸ்தவம் மதத்திற்கு எதிரான மதம் தானே” ? என்று கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு ராமசாமி அளித்த பதில் தான் தற்போதைய அமெரிக்கா மற்றும் இந்திய இணையதளங்களில் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த அவருக்கு விவேக் ராமசாமி அளித்த […]
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேர்காணல் ஒன்றுக்கு பேட்டியளித்த போது தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது அதில் பேசிய, புடின் ” புதிய அதிபராகப் பொறுப்பேற்கும் “துணிச்சலான” டிரம்புடன் பேசத் தான் தயாராக இருப்பதாகவும், அமெரிக்கா-ரஷ்யா உறவுகளை மீண்டும் மேம்படுத்தவும், உக்ரைன் போரை முடிக்கவும் இணைந்து செயல்பட வேண்டிய தேவையை வலியுறுத்தி புடின் பேசியிருந்தார். தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு பேசிய டொனால்ட் டிரம்ப் ” நான் […]
பெயரூட் : ஒரு சில மாதங்களுக்கு முன் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர்கள் வெடித்துச் சிதறி பெரும் பொருட்சேதங்களும், உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஹிஸ்புல்லா அமைப்பினர் குற்றம் சாட்டி வந்த நிலையில், அதற்கு இஸ்ரேல் மௌனம் காத்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்த தாக்குதலுக்கு நாங்கள் தான் காரணம் என வெளிப்படையாகத் தெரிவித்தார். பிரதமர் நெதன்யாகுவின் இந்த பேச்சைத் தொடர்ந்து வடக்கு இஸ்ரேலைக் […]
வாஷிங்டன் :அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். அந்த உரையாடலில் உக்ரைனில் மீண்டும் போர் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாமென டிரம்ப் கேட்டுக்கொண்டார். கடந்த பிப்ரவரி 2022 ஆண்டு முதல் தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் போர், இன்னும் ஓயாமல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போரில், ரஷ்யா உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றிது குறிப்பிடத்தக்கது. இதனால், பல நாடுகள் இந்த இரு நாடுகளுக்குயிடையே போர் நிறுத்தம் குறித்த பேச்சு வார்தையில் ஈடுபட்டு […]
யாழ்ப்பாணம் : இலங்கையில் வரும் நவம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டில் அதிபருக்கு தான் அதிக செல்வாக்கு என்றாலும், நாட்டில் சட்ட திருத்தங்களை கொண்டு வர நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்ற வேண்டியது அவசியம். இலங்கையில் உள்ள 225 இடங்களில் மக்கள் தேர்வு செய்யும் 196 இடங்களில் அதிக இடங்களை புதிய அரசாங்கம் பெற வேண்டும். ஏற்கனவே 4 எம்பிகளை மட்டுமே கொண்டிருந்த தேசிய மக்கள் கட்சி இந்த முறை அதிக தொகுதிகளை […]
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில், சம்பவ நிகழ்ந்த இடத்திலேயே 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரியவந்தது. மேலும், காயமடைந்தோரில் சிலரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாகவும் இதனால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. அதன்படி, தற்போது மேலும் 5 பேர் பரிதமபாக உயிரிழந்துள்ளனர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதிலும், சிகிச்சை பெற்று […]
ரஷ்யா : ரஷ்யாவில் குறைந்து வரும் மக்கள் தொகையை சமாளிக்க புதிய அமைச்சகம் அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது,மூன்று ஆண்டுகளாக உக்ரைனுடன் போரிட்டு வரும் ரஷ்யா, மிகப்பெரிய உயிரிழப்புகளை சந்தித்துள்ளதுடன், அந்நாட்டின் மக்கள் தொகையும் வேகமாக குறைந்து வருகிறது. இந்தியாவை விட 5 மடங்கு பெரிய நாடான ரஷ்யாவில் வெறும் 14 கோடி தான் மக்கள்தொகை. இந்நிலையில், குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக பாலியல் அமைச்சகத்தை (Sex Ministry) கொண்டு வர ரஷ்ய அரசு பரிசீலினை செய்து […]