அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா மற்றும் ஆக்சியம்-4 (Ax-4) பயணக் குழுவினர், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) ஜூலை 14 அன்று பூமிக்கு திரும்ப உள்ளனர். “ஆக்சியம்-4 பயணத்தை கவனமாக கண்காணித்து வருகிறோம். தற்போதைய இலக்கு, ஜூலை 14 அன்று விண்கலம் பிரிந்து பயணத்தைத் தொடங்குவது,” என்று நாசாவின் வணிக விண்வெளி திட்ட மேலாளர் ஸ்டீவ் ஸ்டிட்ச் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஜூன் 25 அன்று புளோரிடாவில் உள்ள கென்னடி […]
வாஷிங்டன் : அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், “அமெரிக்கா கட்சி” (America Party) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்ததையடுத்து, அவரது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 7.6% வரை சரிந்தன. இதனால், டெஸ்லாவின் சந்தை மூலதனத்தில் 68 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. இந்த சரிவு, எலான் மஸ்க்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பில் 15.3 பில்லியன் டாலர் குறைவை ஏற்படுத்தியது, அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 400 பில்லியன் டாலராக இருந்தாலும், இது குறிப்பிடத்தக்க […]
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில் ஹிட்லரைப் புகழ்ந்து, யூத எதிர்ப்பு கருத்துகளை வெளியிட்டதற்கு, போலாந்தின் டிஜிட்டல் அமைச்சரும் துணைப் பிரதமருமான கிறிஸ்டோஃப் கவ்கோவ்ஸ்கி (Krzysztof Gawkowski) கடும் கண்டனம் தெரிவித்தார். போலிஷ் வானொலி RMF FM-இல் பேசிய அவர், “பேச்சு சுதந்திரம் மனிதர்களுக்கு மட்டுமே உரியது, செயற்கை நுண்ணறிவுக்கு அல்ல,” என்று காட்டமாகக் கூறினார். Grok-இன் ஆபத்தான கருத்துகளை அடுத்து, X […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப் பற்றி தான் கவலைப்படவில்லை என்று தைரியமாக பதிலளித்தார். நேற்று (2025 ஜூலை 9) ஈரானின் முக்கிய அதிகாரி முகமது-ஜவாத் லாரிஜானி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை அவரது மார்-எ-லாகோ விடுதியில் ட்ரோன் மூலம் கொல்ல முடியும் என்று ஈரான் தொலைக்காட்சியில் மிரட்டியதாக செய்தி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு இருந்தது. இந்த மிரட்டலுக்கு, அதே நாளில் வாஷிங்டனில் […]
நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார். நமீபிய தலைநகர் விண்டோக்-கில், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர், விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்றார் 5 நாடுகள் பயணத்தின் நமீபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி நேற்று அந்நாட்டு அதிபருடன் பிரதிநிதிகள் நிலையில் பேச்சு வார்த்தை நடத்தினார். அதிபர் நெடும்போ நந்தி – நதைத்வா முன்னிலையில், இந்தியா – நமீபியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்தார். ஜூலை 8, 2025 அன்று வெள்ளை மாளிகையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், உக்ரைன்-ரஷ்யா போரில் அதிகரித்து வரும் உயிரிழப்புகளுக்கு புடினை குற்றம் சாட்டினார். “புடின் மக்களைக் கொல்கிறார், அவர்களை மனிதாபிமானமாக நடத்தவில்லை. அவர் நாகரிகமாகப் பேசுவது வெறும் நாடகம்,” என்று டிரம்ப் கூறினார். தனது தேர்தல் பிரச்சாரத்தில், இந்தப் போரை […]
ஏமன் : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, ஏமனில் 2017-ம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மெஹதியைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டவர். இவருக்கு வருகின்ற ஜூலை 16, 2025 அன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அந்நாட்டு சிறைத்துறையினர் தகவல் தெரிவித்துள்னர். இந்தியாவின் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த நிமிஷா தனது நர்சிங் படிப்பை முடித்துவிட்டு 2011 இல் […]
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ மெக்சிகோவில் உள்ள ருய்டோசோ கிராமத்தில் நேற்றைய தினம் பிற்பகல் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. பலத்த நீரோட்டத்துடன் கூடிய வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதை வீடியோக்கள் காட்டுகின்றன. நியூ மெக்சிகோவின் செனட்டர் மார்ட்டின் ஹென்ரிச், ருய்டோசோவில் தாழ்வான பகுதிகளை விட்டு மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும், உயரமான பகுதிகளுக்கு வெளியேறுமாறு எச்சரிக்கை […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1, 2025 முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி, ஜப்பான், தென்கொரியா, மியான்மர், லாவோஸ், தென்னாப்பிரிக்கா, கஜகஸ்தான், மலேசியா, துனிசியா, இந்தோனேசியா, போஸ்னியா, வங்கதேசம், செர்பியா, கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய 14 நாடுகளுக்கு 25% என்கிற அதிக வரிகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியா உட்பட அனைத்து BRICS நாடுகளுக்கும் ஏற்கனவே நடைமுறையில் […]
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம் எளிதாக்கியுள்ளது. ரூ.23 லட்சம் (1 லட்சம் திர்ஹாம்) செலுத்தினால், குடும்பத்துடன் நிரந்தரமாக தங்குவதற்கு வழிவகை செய்யும் கோல்டன் விசாவைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசா மூலம் இந்தியர்கள் அமீரகத்தில் வேலை செய்யவும், தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும் முடியும். முன்பு இந்த விசாவுக்கு 48 லட்சம் ரூபாய் (10 மில்லியன் திர்ஹாம்) முதலீடு தேவைப்பட்ட […]
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக (ஜூன் 20, 2025 முதல்) தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமாகியுள்ளது. இந்த செயற்கைக் கோள், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தித் துறைகளில் இருந்து வெளியாகும் மீத்தேன் வாயுவைக் கண்காணிக்கவும், உலகளாவிய பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவவும் 2024 மார்ச் மாதம் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. மீத்தேன்SAT செயற்கைக் கோள், […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1, 2025 முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், இரு நாடுகளின் தலைவர்களுக்கு எழுதிய கடிதங்களைப் பகிர்ந்து தெரிவித்தார். இந்த வரி விதிப்பு, அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட “விடுதலை நாள்” வரி முயற்சியின் ஒரு பகுதியாகும். ஆட்டோமொபைல், […]
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு பூனையான சியான்பாவை பராமரிக்கும் நபருக்கு தனது முழு சொத்தையும், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சேமிப்பு உட்பட, அளிக்க விரும்புவதாக அறிவித்துள்ளார். இந்த செய்தி, கடந்த ஜூலை 3-ஆம் தேதி South China Morning Post இதழில் வெளியாகி உலக அளவில் ட்ரென்டிங் செய்தியாகவும் மாறியுள்ளது. குழந்தைகள் இல்லாத லாங், தனது மனைவி இறந்து பத்து ஆண்டுகளுக்கு […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து கடுமையாக விமர்சித்து, அதை “முட்டாள்தனமானது” என்று கூறினார். ஜூலை 7, 2025 அன்றுதனது Truth Social தளத்தில் பதிவிட்ட அவருடைய நீண்ட பதிவில், மஸ்க்கின் இந்த முயற்சி அமெரிக்காவில் நிலவும் இரு கட்சி அமைப்பை குழப்புவதற்கு மட்டுமே உருவாக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். டிரம்பின் இந்த விமர்சனம், மஸ்க்குடனான அவரது பொது மோதலின் ஒரு பகுதியாக வந்துள்ளது. […]
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் (12,078.93 டாலர்) கிரெடிட் கார்டு கடனை அடைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த சாதனை, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிதி மேலாண்மையில் புதிய புரட்சியை ஏற்படுத்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஜெனிபர், தனது செலவுகளைத் திட்டமிடுவதற்கும், பணத்தை மிச்சப்படுத்துவதற்கும் ChatGPT-யின் அன்றாட ஆலோசனைகளைப் பயன்படுத்தினார். ஜெனிபர் ஆலன், ஒரு முறை […]
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ”அமெரிக்கா பார்ட்டி” என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியதாக அறிவித்ததற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது பேசிய அதிபர் டிரம்ப், ”குடியரசுக் கட்சியுடன் நாங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளோம் என்று கூறினார். அமெரிக்காவில் இரு கட்சி முறைதான் இருந்து வருகிறது, 3வது கட்சியை தொடங்குவது குழப்பத்தை […]
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய தாக்குதலையும், வர்த்தக வரியையும் கண்டித்தன. இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் கோபமடைந்து, பிரிக்ஸ் நாடுகளுக்கு அவர் ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். பிரிக்ஸ் அமைப்பை ஆதரிக்கும் இந்தியா, பிரேசில், சீனா, ரஷ்யாவின் கூட்டு அமைப்பு பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளின் பொருளுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது […]
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த கனமழை, வெள்ளத்திற்கு இதுவரை 80 பேர் பலியாகியுள்ளனர். அதில், 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடங்குவர். பலரும் தங்களது உடைமைகளை இழந்து சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். சான் அன்டோனியோ அருகே உள்ள கெர்கவுண்டியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. […]
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய ‘அமெரிக்கா கட்சி’யில் மூன்று பிரபல அமெரிக்கர்கள் இணையவுள்ளதாக கணித்து பேசியுள்ளார். ஜூலை 6, 2025 அன்று X தளத்தில் பதிவிட்ட பதிவில், லூமர், “டக்கர் கார்ல்சன், மார்ஜோரி டெய்லர் கிரீன் (MTG), மற்றும் தாமஸ் மாஸி ஆகியோர் டிரம்புக்கு எதிராக புதிய ‘அமெரிக்கா கட்சி’யில் இணைவார்கள் என்று நான் கணிக்கிறேன்,” என்று தெரிவித்தார். இந்த கணிப்பு, […]
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க பார்ட்டி’ (The America Party) என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியதாக ஜூலை 5, 2025 அன்று அறிவித்தார். அமெரிக்கர்களின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதே இந்தக் கட்சியின் முக்கிய நோக்கம் என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். “வாக்காளப் பெருமக்களே, நமது நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் வீண் செலவுகளை எதிர்த்து, உங்களுக்கு சுதந்திரத்தை […]