அமெரிக்கா : டெஸ்லா தலைவர் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத் திறன் துறை (DOGE), தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் மூலம் அரசாங்க செயல்பாடுகளை நவீனப்படுத்த 19 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆகாஷ் போப்பா உள்ளிட்ட ஆறு தொழில்நுட்ப பொறியாளர்களை நியமித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் மஸ்க் மற்றும் பேபால் இணை நிறுவனர் பீட்டர் தியேலுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு அரசியலில் குறைந்த அனுபவம் இருந்தபோதிலும், DOGE சமீபத்தில் பணியமர்த்திய 19 முதல் […]
மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த வேனில் சென்ற 15 விவசாயிகள் உடல் சிதறி பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் 5 பேர் தற்போது உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. துருக்கிய எல்லையிலிருந்து சுமார் 30 கிமீ (19 மைல்) தொலைவில் அமைந்துள்ள மன்பிஜில் நடந்த இந்த குண்டுவெடிப்புக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. […]
பிலடெல்பியா : அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஃபிலாடெல்பியா நகரில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று மிசோரிக்கு புறப்பட்டது. அப்போது, புறப்பட சில நொடிகளில் திடீரென அவ்விமானம் விமான நிலையத்திற்கு அருகே இருந்த குடியிருப்புக் கட்டடங்கள் மீது, மோதி வெடித்து சிதறியது. வடகிழக்கு பிலடெல்பியாவில் உள்ள ரூஸ்வெல்ட் மால் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவில், பிலடெல்பியா நகரில் விமானம் வெடித்து சிதறியபோது, வீடுகள் […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார். ஏற்கனவே அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போதே, அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற பிரச்சாரத்தை முன்வைத்து தான் தேர்தலில் வெற்றி பெற்றார். அதனை செயல்படுத்தும் வகையில் தற்போது பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தும் வருகிறார். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், அதன் மூலம் அமெரிக்க அரசுக்கு வருவாயை ஈட்டும் நோக்கிலும், தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு […]
வாஷிங்டன் : அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ரீகன் விமான நிலையத்தில் பயணிகள் விமானம், ராணுவ ஹெலிகாப்டர் மீது மோதிய விபத்தில் வெடித்து சிதறியது. ரொனால்டு ரீகன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோது நடுவானில் ஹெலிகாப்டர் மீது மோதி ஆற்றில் விழுந்தது. பயணிகள் விமானம் மீது மோதிய ஹெலிகாப்டர் அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. மேலும், விமானத்தில் 60 பேர் இருந்தனர். கன்சாஸ் மாகாணத்தில் உள்ள விசிட்டாவில் இருந்து நாட்டின் தலைநகர் வாஷிங்டன் நோக்கி சுமார் […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவியை தற்காலிகமாக நிறுத்துவதாக உத்தரவு அறிவித்தார். அவர் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதாக குற்றம்சாட்டி இதனை அறிவித்திருக்கிறார். அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கும் உதவியை தற்காலிகமாக நிறுத்தி, அதனை மறுபரிசீலனை செய்ய முடிவெடுத்துள்ளது பாகிஸ்தானில் அமெரிக்க சர்வதேச உதவி முகமை (USAID) மூலம் நடைபெறும் பல முக்கிய திட்டங்கள் நிறுத்த ஒரு காரணமாவும் அமைந்துள்ளது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வருடத்திற்கு சுமார் 1.5 பில்லியன் […]
சீனா : இன்றயை காலத்தில் AI நுண்ணறிவு வளர்ச்சி என்பது எந்த அளவுக்கு இருக்கிறது என சொல்லியே தெரியவேண்டாம். பலரும் OpenAI, Google மற்றும் Meta, உள்ளிட்டவற்றை பயன்படுத்தி தங்களுடைய வேலைகளை சுலபமாக செய்துகொண்டு வருகிறார்கள். இதனுடைய பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. ஏஐ (AI) துறையில் அமெரிக்க நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், சாட்ஜிபிடி, ஜெமினி என்று அமெரிக்க நிறுவனங்கள் தான் தங்களுடைய கை வசத்தில் வைத்திருக்கிறது. எனவே, அவர்களை முறியடித்து அவர்களை […]
மலேசியா : சினிமாவில் ஹீரோ எப்படி தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் வில்லனிடமிருந்து காப்பாற்றுகிறார். அதேபோல், திரைப்படங்களில் வருவதுபோல் வில்லனாக நடிக்க, பணம் வசூலிக்கிறார் மலேசியாவைச் சேர்ந்த பெசகிட் சிகார் ககார் மோன்யெட் என்ற நபர். அட ஆமாங்க… சினிமாவைப் போல வாழ்க்கையிலும் ஹீரோவாக வாய்ப்பு கிடைத்தால்? எப்படி இருக்கும். 28 வயதுடைய மலேசிய இளைஞர் ஒருவர் இப்படியொரு விளம்பரம் செய்துள்ளார். அதில், காதலியின் முன் தன்னை ஹீரோவாக காட்டிக்கொள்ள விரும்பும் நபர்கள் தன்னை தொடர்பு கொள்ளலாம் எனவும், […]
உக்ரைன்-ரஷ்யா போர் என்பது 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் தொடங்கியது. இன்னும் இந்த போர் முடியாமல் இருப்பதன் காரணமாக பரபரப்பான சூழலே நிலவி வருகிறது. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த போருக்கு ஒரு தீர்வை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தோடு ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியுள்ளார். கடந்த, சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த டொனால்ட் டிரம்ப், […]
காசா : 2023 அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போரால் பெரும் பாதிப்புக்கு உள்ளான காசா நகரில் உள்ள பாலஸ்தீன நாட்டு மக்களுக்கு தற்போது இடைக்கால நிவாரணமாக 6 வார கால போர் நிறுத்தம் சற்று ஆறுதலை தந்துள்ளது. இந்த இடைக்கால நிவாரணம் நிரந்தர தீர்வாக இருக்க வேண்டும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த 6 வார கால போர் நிறுத்தத்தை அடுத்து காசா நகரத்து மக்கள் நீண்ட மாதங்களுக்கு பிறகு தாங்கள் வசித்த […]
சியாட் : அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார். அதில் பிரதானமானது சட்டவிரோதமாக குடியுரிமை பெறுவதை தடுப்பது மற்றும் ஏற்கனவே சட்ட விரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றுவதாகும். அதில் முக்கிய நகர்வாக, அமெரிக்காவில் பிறப்பால் ஒரு குழந்தை அமெரிக்vvக குடிமகனாக மாறும் நடைமுறையை டிரம்ப் மாற்ற கையெழுத்திட்டுளளார். அதாவது, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் தாய் அல்லது தந்தை இருவரும் அமெரிக்க குடிமகன்களாகவோ அல்லது அமெரிக்காவில் […]
நைபியிடவ் : இன்று (ஜனவரி 24) அதிகாலை 12.53 மணியளவில் மியான்மர் (பர்மா) நாட்டின் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய அரசின் தேசிய நில அதிர்வு மையமான NCS தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. NCS வெளியிட்டுள்ள தகவலின்படி, மியான்மர் நாட்டில் 24 ஜனவரி (இன்று) அதிகாலை 12.53 மணியளவில் 4.8 ரிக்டர் எனும் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், இந்த நில அதிர்வு கடல் மட்டத்தில் இருந்து 106 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது […]
ஜாவா : இந்தோனேஷியா 17,000 தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டமாகும். அதில், மத்திய ஜாவா மாகாணத்தில் பெக்கலோங்கன் நகருக்கு அருகில் உள்ள மலைப் பகுதியில் கடந்த ஜனவரி 20 அன்று பெய்த கனமழையால் நிலச்சரிவு, பாலங்கள் இடிந்து, கார்கள் மற்றும் வீடுகள் புதைந்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது, 8 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடல் மற்றும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மோசமான வானிலை மாற்றத்தால் கனமழை, […]
அமெரிக்கா : மாநிலத்திற்கு என்ன தான் ஆச்சு என்கிற வகையில், இந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொழுந்துவிட்டு தீ ஒரு பக்கம் பரவி வருகிறது. இதுவரை 40,000க்கும் அதிகமான ஏக்கர் நிலம், 12,000க்கும் அதிகமான கட்டடங்கள் தீக்கிரையான நிலையில், 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு பக்கம் தீ பரவி வரும் சூழலில் தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மற்றொரு பக்கம் மிசிகன், நியூயார்க், பின்சில்வேனியா, மற்றும் மற்ற சில மாநிலங்களில் பனிப்புயல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த […]
போலு : துருக்கி ஹோட்டலில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76ஆக அதிகரித்துள்ளது. இஸ்தான்புல்லுக்கு கிழக்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போலு மாகாணத்தின் கொரோக்லு மலைப்பகுதியில் உள்ள கர்தல்காயாவில் உள்ள ஸ்கை ஹோட்டலில் இந்த தீ விபத்து நடந்துள்ளது. நேற்று அதிகாலை 3:27 மணிக்கு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு தங்கியிருந்தோர் பலர் உடல் கருகி உயிரிழந்தனர். தீ விபத்து ஏற்பட்டதும் அதிகாலை 4:15 மணிக்கு […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக நேற்று முன்தினம் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பதவி ஏற்றார். 2வது முறையாக அமெரிக்க அதிபரான டிரம்ப் ஆரம்பம் முதலே பல்வேறு அதிரடி மாற்றங்களுக்கு கையெழுத்திட்டு வருகிறார். எந்த நாட்டு தலைவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தால் என்ன, அமெரிக்காவுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற நோக்கத்தில் அவரது அதிரடி முடிவுகள் அமைaaந்து வருகின்றன. ஏற்கனவே, கொரோனாவில் சரிவர முன்னெச்சரிக்கை நடவடிக்கை அளிக்கவில்லை எனக் கூறி உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக […]
துருக்கி: கடந்த ஜனவரி 13 ஆம் தேதி, தாய் நாய் ஒன்று சுயநினைவு இழந்த தனது குட்டியை வாயில் கவ்விக்கொண்டு அவசரமாக கால்நடை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்ற நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம் துருக்கியில் நடந்துள்ளது. இது தொடர்பான காணொளி காட்சி இணயத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த உருக வைக்கும் காட்சியானது தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான பாசப்பிணைப்பை உணர்த்துகிறது. துருக்கியின் இஸ்தான்புல்லில் மழை பெய்து கொண்டிருக்கும் பொழுது, மழையில் நனைந்த சுயநினைவு இழந்த தனது […]
வாஷிங்டன் : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார். இவருடைய பதவியேற்பு விழாவானது இன்று வாஷிங்டன் டிசி-யில் உள்ள அரங்கிற்குள் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அதிபர்கள் ஜோ பைடன், பாரக் ஒபாமா என எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் , பன்னாட்டு தொழிலதிபர்களான எலான் மஸ்க், சுந்தர்பிச்சை என பலர் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் […]
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்று கொண்டது முதல் பல்வேறு அதிரடியான முடிவுகளில் கையெழுத்திட்டு வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போதே கூறியது போல ‘அமெரிக்கா இனி அமெரிக்கர்களுக்கே’ எனும் கொள்கையை முன்னிறுத்தி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் மிக முக்கியமாக குடியேற்ற கொள்கையில் திருத்தம், சட்டவிரோத குடியேற்றம் தடுத்தல், இருபாலின கொள்கை போன்றவை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதில் சிலவற்றை கிழே […]