சென்னை : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தொடர்ச்சியாக வானிலை தொடர்பான தகவலை மக்களுக்கு கொடுத்து வரும் நிலையில், அவரைப்போலவே டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தரும் தொடர்ச்சியாக அப்டேட்டுகளை கொடுத்துக்கொண்டு வருகிறார். அந்த வகையில், ஜனவரி 10-ஆம் தேதி தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த தகவலின் படி,.. லா நினா ஜனவரி நடுப்பகுதியில் இந்தியப் பெருங்கடலை வந்தடையும் என்பதால் பசிபிக் பெருங்கடலில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு ஜனவரி 10, 2024 முதல் தென் இந்திய […]
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் மற்றும் மீனவர்களுக்காக எச்சரிக்கை என்பது பற்றிய தகவலையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 10-01-2025 கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், […]
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,இன்று 02-ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். நீலகிரி மற்றும் கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. அதைப்போல, நாளை 03-01-2025 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். […]
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (01-01-2025) சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி […]
சென்னை: பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 மாவட்டங்களில் கனமழை தமிழகத்தில் […]
சென்னை: வடகிழக்கு பருவமழை 2024 ஆம் ஆண்டில் இயல்பைவிட 33% கூடுதலாக பதிவாகியுள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை எந்த மாவட்டத்திலும் இயல்பைவிடக் குறைவாக பெய்யவில்லை. இந்த ஆண்டு கடந்தாண்டைவிட 27 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது. 6 மாவட்டங்களில் மிக அதிகம், 23 மாவட்டங்களில் அதிக மழையும், 11 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் […]
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் ஆட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது, ஏற்கனவே நேற்று (30,12.24) ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்றிலிருந்தே ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த சூழலில், தமிழகத்தில் நாளை முதல் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என தமிழ்நாடு […]
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ” தூத்துக்குடி, திருநெல்வேலி ராமநாதபுரம், மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் […]
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர் பகுதியின் பல்வேறு பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் அச்சத்தை ஏற்படுத்தியது. கனமழை மெது மெதுவாக குறைந்த நிலையில், குளிர் அளவும் டெல்லியில் அதிகமானது. பகல் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், அடுத்ததாக குளிர் அளவு அதிகமானதால் மக்கள் […]
சென்னை : தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் வரும் நாட்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, 27-12-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28-12-2024 மற்றும் 29-12-2024: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை […]
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28,30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்திருந்தது. இந்த சூழலில், தமிழகத்தில் ஜனவரி முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழைக்கு […]
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர – வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக படிப்படியாக வழுவிழக்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. இதன் காரணாமாக, இன்று முதல் வரும் 31-ஆம் தேதி வரை வடதமிழக […]
சென்னை: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர – வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக படிப்படியாக வழுவிழக்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. இதன் காரணாமாக, இன்று முதல் வரும் 31-ஆம் தேதி வரை வடதமிழக […]
சென்னை: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தெற்கு ஆந்திர – வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், தெற்கு ஆந்திர வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. மேலும் இது, மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் வழுவிழக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய […]
சென்னை: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழந்து, நேற்றைய தினப்படி ஒரே இடத்தில் நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து, நாளை (டிச,24) தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை ஒட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த நிலையில், நேற்றைய தின வானிலை கணிப்பின் படி, நாளை […]
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும், கடல் பகுதியில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் துறைமுகத்தில் கப்பல்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் மீன் பிடி துறைமுகத்தில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. தற்போது, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்ததை தொடர்ந்து, பலத்த மழை மற்றும் காற்று இல்லை […]
சென்னை: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மாலை ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று காலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், விசாகபட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கு – தென்கிழக்கே சுமார் 430 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு – வடகிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும், கோபல்பூரிற்கு (ஒடிசா) தெற்கே […]
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், சென்னைக்கு கிழக்கு – வடகிழக்கே சுமார் 450 கி.மீ-இல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. மேலும், வங்கக் கடலில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ., வேகத்தில் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு மண்டலம் மெதுவாக கிழக்கு – வடகிழக்கு நோக்கி நகர்ந்து, அடுத்த […]
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னையில் இருந்து வடக்கு வடகிழக்கு திசையில் 370 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வடகிழக்கு திசையில் நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா? என்பது பற்றிய தகவலை டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தனது […]
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தகவல் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மாண்டலமானது வடக்கு வடகிழக்கில் நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னையில் இருந்து வடக்கு வடகிழக்கு திசையில் 370 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு […]