விழுப்புரம் அருகே வீட்டில் தீப்பிடித்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கீழகொண்டூரில் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது .வீட்டில் தீப்பிடித்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வீட்டில் தீப்பிடித்ததில் தாய் தனலெட்சுமி, 9 மாத குழந்தை ருத்ரன், கமலேஸ்வரன்(7), விஷ்ணுப்ரியன்(4) ஆகியோர் உயிரிழந்தனர்.சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி 20 அடி பள்ளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர் பலியானார். வெள்ளிமலையில் இருந்து கருமந்துரை நோக்கி, பிரபாவதி பள்ளிக்குச் சொந்தமான வேன் மாணவர்களை ஏற்றி கொண்டு சென்றது. வேனை வெங்கடேசன் என்ற ஓட்டுனர் இயக்கி வந்தார். மொட்டையனூர் கிராமம் அருகே சென்றபோது, வேனின் முன் பக்க அச்சு முறிந்து, சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு 20 அடி பள்ளத்தில் 3 முறை உருண்டு கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனின் ஓட்டுனர் வெங்கடேசன் […]
விழுப்புரம் அருகே லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் அருகே கள்ளக்குறிச்சியில் ரூ. 25 000 லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.அதேபோல் மோட்டர் வாகன ஆய்வாளரின் உதவியாளர் செந்தில்குமாரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் கைது செய்தனர். வாகனத் தகுதிச் சான்று பெற முத்துகுமாரிடம் ரூ. 25000 லஞ்சம் பெற்றபோது மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு மற்றும் ஆய்வாளரின் உதவியாளர் செந்தில்குமர் சிக்கினார்கள்.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மீது, முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் கூறிய குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என சட்டத்துறைஅமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் பனையபுரம், சிறுவள்ளிகுப்பம், வாக்கூர் உள்ளிட்ட 10 இடங்களில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்களை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்து பேசினார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், குட்கா விசாரணை தொடர்பாக முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜின் குற்றச்சாட்டுக்கு ஏற்கனவே விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார், அது மட்டுமில்லாமல் முன்னாள் காவல் ஜார்ஜின் […]
| சிவகாசி: அரசியலுக்கு வரத்துடிக்கும் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நாடி ஜோசியத்தை நம்பாமல்; மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அரசியலுக்கு வரவேண்டும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கிண்டலாக தெரிவித்துள்ளார் . விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் உதயகுமார் பேசினார் அப்போது அவர் கூறியது, அரசியல் எனபது ஒரு மக்கள் சேவைக்கான அர்ப்பணிப்பு ,மக்களுக்காக களத்தில் நிற்பது , சேவை செய்வது ,மக்களின் வாழ்வாதாரம் சம்மந்தபட்டது என்று கூறிய அமைச்சர் தற்போது அரசியலுக்கு வருவது அவளோ எளிதாககிவிட்டது என்றும் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் […]
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம் என்ற செய்தியை டி.வி யில் பார்த்த அதிர்ச்சியில் விழுப்புரம் திமுக நிர்வாகி பன்னீர்செல்வம் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
முதலமைச்சர் பழனிசாமி விழுப்புரம் மாவட்டம், திருநாவலூரில் வேளாண்மைத் துறை சார்பில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
விழுப்புரத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் சி.வி. சண்முகத்தின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசியதில் கண்ணாடி உடைந்தது.இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெருவளுரை சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது தந்தைக்கு எழுதிய 2 பக்கம் கொண்ட உருக்கமான கடிதம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- ‘உங்க அம்மு உங்க கிட்ட சொல்ல விரும்புவது இதுவே கடைசி. அப்பா சாரி பா. என்னால ஜெயிக்க முடியல. நீங்க என்மேல வச்சிருந்த நம்பிக்கையை என்னால காப்பாத்த […]
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைபெய்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்ததால் பகல் நேரத்தில் கடும் வெப்பம் நிலவியது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து சாலைகளில் மழைநீர் வழிந்தோடியது. உளுந்தூர்ப்பேட்டை, எலவனாசூர் கோட்டை, ஆசனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒருமணி நேரத்துக்கு மேலாக மழை பெய்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சு காரணமாக, வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். விழுப்புரத்திலிருந்து சென்னை வந்த அரசுப் பேருந்தை, வழுதரெட்டி என்ற இடத்தில் மர்ம நபர்கள் தாக்கியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது. கும்பகோணத்தில் இருந்து வந்த அரசு பேருந்தும், பண்ருட்டிக்கு சென்ற தனியார் பேருந்தும் கல்வீச்சில் சேதமடைந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 7 பேருந்துகள் கல்வீச்சில் சேதமடைந்தன. கல்வீச்சுச் சம்பவங்கள் தொடர்ந்ததால் அரசுப் பேருந்துகள் அனைத்தும் பணிமனைக்குத் திரும்பிச் சென்றன. விழுப்புரத்தில் […]
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா அத்தியூர் திருக்கை கிராமத்தில் தலித் இளைஞன் பிரபு பிற்படுத்தப்பட்ட வன்னிய சமூகத்தை சேர்ந்த சரண்யா காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 .2.2018 அன்று இரவு வன்னிய சமூகத்தைச் சேர்ந்த சுமார்200பேர் கொண்ட கும்பல் தலித் மக்களின் சுமார் 60 வீடுகளில் தாக்குதல் நடத்தி தலித் மக்களின் பொருட்களை நாசப்படுத்தி யுள்ளனர். கண்ணில் கண்டவர்களை எல்லாம் அடித்து உததைத் துள்ளனர். டிவி, கேஸ் அடுப்பு, பீரோ, கட்டில் உள்ளிட்ட பண்ட பாத்திரங் களை […]
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ். கள்ளக்குறிச்சியில் இருந்து தென்கீரனூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை, அண்ணாநகர் புறவழிச்சாலை மேம்பாலம் அருகே வழிமறித்த கும்பல், சரமாரியாக வெட்டிக்கொன்றுவிட்டு தப்பியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கள்ளக்குறிச்சி போலீசார், வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் கொலை செய்யப்பட்ட இடத்தில் தடயங்களைச் சேகரித்து வரும் போலீசார், அவரது கொலைக்கான காரணம் குறித்தும், […]
விழுப்புரம் மாவட்டம் பொம்மையார் பாளையம் கிராமத்தில் கடல்சீற்றத்தின் காரணமாக 3 வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் அப்பகுதி கிராம மக்கள் கடற்கரையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாகவும் கடல் சீற்றத்தின் காரணமாகவும் 3 வீடுகள் இடிந்து விழுந்தன.வீடுகளின் உள்ளே யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுக்க கோரியும், அப்பகுதியில் துண்டில் வளைவு ஏற்படுத்தி தரவும் கடற்கரையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட வாக்காளர்களை செல்போன் புதிய செயலி மூலம் குடும்ப உறுபினர்களை ஒருங்கிணைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணி உளுந்தூர்பேட்டை தொகிதியில் உள்ள பேரூராட்சி, ஊராட்சி பகுதியி உள்ள வாக்காளர்களுக்காக நடைபெறுகிறது. இந்த பணியை வருவாய் கோட்டாட்சியர் சாரு நேற்றுதுவக்கி வைத்தார். மேலும் பணி நடைபெற்ற இடமான உ.கீரனூர், உளுந்துர்பேட்டை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இதனுடன் தாசில்தார் பாலசுப்ரமணியன், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சற்குணம், வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் […]