திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் பூட்டியிருந்த பள்ளியை திறந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர் செல்வம் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். ஆசிரியர்கள் போராட்டத்தால், ஜவ்வாதுமலை ஒன்றிய மலையடிவாரத்தில் உள்ள அரசு பள்ளி, பூட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதனையறிந்த கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வம், தற்காலிக ஆசிரியர்களுடன் அங்கு சென்று பள்ளியை திறந்தார். பின்னர் மாணவர்களுக்கு அவரே ஆங்கில பாடம் நடத்தினார். தற்காலிக ஆசிரியர்கள் மூலம் பள்ளி தொடர்ந்து இயங்கும் என்றும் பள்ளிக்கு சரியாக வர வேண்டும் என்றும் மாணவர்களுக்கு எம்.எல்.ஏ […]
திருவண்ணாமலை மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பருவ மழை இல்லாததால் காரணத்தால் குறைந்த அளவு நீர் தேவைப்படும் பயிர்களை விவசாயிகள் பயிரிட்டனர்.அந்த வகையில் விவசாயிகள் பயிரிட்ட பச்சை மிளகாய் பனியின் தாக்கத்தால் மகசூல் குறைவாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ 20 முதல் 25 ரூபாய் வரை விற்பனையாவதால் தங்களுக்கு போதிய வருமானம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ வழிபாடு வெகுவிமரிசையாக நடைபெற்றது. மார்கழி மாதத்தில் வரும் பிரதோஷம், மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமாவாசைக்கு, முன் தினத்தன்று வரும் பிரதோஷ திருவிழா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, பெரிய நந்தி பகவானுக்கு விபூதி அபிஷேகம், சந்தன அபிஷேகம், பால், தயிர் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நந்தி பகவானின் அருளைப் பெறுவதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மகாபாரத பிரசங்கம் செய்யும் மேல்பள்ளிப்பட்டு கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு திருப்பாவை, திருவெம்பாவையின் கருத்துகளை எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பலர் பங்கேற்று திருப்பாவை, திருவெம்பாவையை சரளமாக ஒப்பித்து அசத்தினார்கள். ராமகிருஷ்ண மடம் மற்றும் செங்கம் தமிழ்ச்சங்கம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
யோகி ராம் சுரத்குமாரின் 100வது ஜெயந்தி விழா அவரது பக்தர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலையில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் யோகி ராம்சுரத்குமாரின் திருவுருவம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தில் யானை, குதிரைகள் அணிவகுக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள், யோகி ராம்சுரத்குமாரின் ஸ்லோகங்களை கூறியபடியே கிரிவாலப் பாதையை சுற்றி வந்தனர்.
வாழ்வாதார கோரிக்கையை வீடியோ மூலம் பதிவிட்டு அனுப்பிய மாணவியின் தேவையை நிறைவேற்றிய, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் செல்போனுக்கு, கடந்த 13-ம் தேதி வாட்ஸ் அப் மூலமாக ஒரு வீடியோ வந்தது. அதில் செய்யாறைச் சேர்ந்த பள்ளி மாணவி ரூபிகா, தனது அப்பா வேலையின்றி தவித்து வருவதாகவும், தங்களது வாழ்வாதார தேவைக்காக சொந்தமாக ஆடுகள் வழங்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த மாவட்ட […]
திருவண்ணாமலையில் பரணி தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது.இன்று கார்த்திக்கை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக கருதப்படும் சிவத்தலம் இதுவாகும்.இங்கு எம்பிரான் ஜோதி ரூபமாக எழுந்தருளும் அற்புதக்காட்சி கார்த்திகை மாதம் மகாதீபம் என்றழைக்கப்படுகிறது.இங்கு அண்ணாமலையாராக சிவபெருமானும், உண்ணாமுலையம்மையாக பார்வதிதேவியும் காட்சி தருகின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது.அதிகாலை 4 மணிக்கு கோவிலின் கருவறை முன்பு பூஜைகளுடன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் […]
கார்த்திகை திருநாளையொட்டி திருவண்ணாமலையில் 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் நாளை மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் நாளை மாலை ஏற்றப்படுகிறது. அதையொட்டி நாளை அதிகாலை முதலே கோயில் நடை திறக்கப்பட்டு பஞ்சாமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் […]
திருவண்ணாமலை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அறிவித்த ஆட்சியர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக திருவண்ணாமலையில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார். DINASUVADU
திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, பரணி, மகா தீப தரிசனத்துக்கான டிக்கெட்டுகள், இன்று முதல் இணையதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு, 2 ஆயிரத்து 668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.இதையொட்டி, பக்தர்கள் கோயிலுக்குள் செல்வதற்கான டிக்கெட்டுகள், இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த டிக்கெட்டுகள் […]
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவண்ணாமலைக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் மகா தீபத்தையொட்டி வரும் நவ.23ம் தேதியும் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளையும் நவ.23 தேதியும் அம்மாவட்டத்திற்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார். DINASUVADU
திருவண்ணாமலையில் சந்திரசேகரர் தங்க சூரியபிரபை வாகனத்தில் வீதி உலா நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முன்தினம் வெகுச்சிறப்பாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் தனித்தனி வெள்ளி மற்றும் கண்ணாடி விமானத்தில் மாடவீதியில் பவனி வர பக்தர்கள் பக்தி கோஷத்துடன் சுவாமி தரிசனம் பெற்றனர்.இந்நிலையில் இரவு 10 மணியளவில் வாணவேடிக்கையுடன் சாமி வீதி உலா நடந்தது. கார்த்திகை திருவிழாவின் 2-ம் நாளான நேற்று திருவண்ணாமலையில் காலை 11 மணியளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், […]
கடந்தாண்டை விட நடப்பாண்டில் காய்ச்சல் பாதிப்பு குறைவாக உள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.ஆய்வு செய்த பின் அவர் கூறுகையில்,கடந்தாண்டை விட நடப்பாண்டில் காய்ச்சல் பாதிப்பு குறைவாக உள்ளது.நடப்பாண்டில் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 3,000பேரில் 12பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் 16 தற்காலிக பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தபின், திருவண்ணாமலை கிரிவலப் பாதை முழுவதும் புதிதாக 400 எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்படும் என்றும், அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல்தொந்தரவு கொடுத்த புகாரில்திருவண்ணாமலை கணித ஆசிரியர்கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கம் அருகேயுள்ள கண்ணக்குருக்கை மேல்நாச்சிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் கண்ணன். கணித ஆசிரியரான இவர், அப்பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள மாணவியின் தந்தை தனது கட்சிக்காரர்களுடன் சென்று ஆசிரியர் கண்ணனை நேற்று கடுமையாகத் தாக்கினார். இதில் அவரின் மண்டை உடைந்தது. அத்துமீறி தாக்கியவர்கள் மீது பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் சங்கத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். கணித […]
தமிழ்நாட்டில் அமைந்துள்ள திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது. இது சிவாத்தலங்களில் ஒன்றாகவும் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும் விளங்குகிறது. திருவண்ணாமலை ரகசியமாக சொல்லப்படுவது பிரம்மாவும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டையிட்டனர் அப்போது சிவபெருமான் அக்னி தூணாக நின்ற நிலையில் அவருடைய அடியைத் தேடி திருமால் வராக அவதாரம் எடுத்துப் பூமியைக் குடைந்துச் சென்றார். மூம்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மா சிவபெருமானின் முடியைத் தேடி அன்ன வாகனத்தில் பறந்து சென்றார். இவர்கள் இருவராலும் சிவபெருமானின் அடிமுடியைக் காண முடியவில்லை என்பது இத்தலத்தின் தலப் புராணமாகும். […]
திருவண்ணாமலை: ஆரணியில் பேருந்து நிலையத்திற்குள் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் திமிரி என்ற பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் திங்களன்று தனது மனைவி மற்றும் பேரனுடன் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று பாலகிருஷ்ணன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் […]
திருவண்ணாமலை: திருவண்ணாமலை செங்கம் பகுதியில் வட்டாட்சியர் ரேணுகா லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். லஞ்சம் பெற்ற புகாரில் வட்டாட்சியரை கைது செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்க ரூ.2000 லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றது. DINASUVADU
கந்துவட்டி காரணமாக பெண்ணின் 3 மாத கைக்குழந்தை மற்றும் மூதாட்டியை கடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்னாமலை அருகே கந்துவட்டி விவகாரத்தில் பெண்ணின் 3 மாத கைக்குழந்தை மற்றும் மூதாட்டியை கடத்தி தனியறையில் அடைத்து வைத்ததாக கூறப்படும் சம்பவத்தில் ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர். கந்துவேட்டிக்கு ஆளான இச்சம்பவம் திருவண்ணாமலை பே – கோபுரம் 4வது தெருவைச் சேர்ந்தவர் பாரதி இந்நிலையில் அதே தெருவில் வசிக்கும் மணிகண்டன் என்பவரிடம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 38 ஆயிரம் ரூபாய் […]
கருப்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் நிலுவை தொகை வழங்காவிட்டால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமை தாங்கினார்.இக்கூட்டத்திற்கு அம்மாவட்ட கரும்பு விவசாயிகள் தங்களுக்கு தனியார் கரும்பு ஆலை கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட்னர்.அப்போது மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறுகையில் தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகைகளை வருகின்ற அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் […]