தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு. திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு வரும் டிசம்பர் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. பக்தர்களின் வருகையை பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்க தயாராக உள்ளதாகவும் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை தீபத் திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6ம் தேதி தீபத்திருவிழா […]
திருவண்ணாமலையில் பேனர் விழுந்து விபத்து ஏற்பட்டால், அதற்கு அனுமதி கொடுத்த அணைத்து அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் அம்மாவட்ட ஆட்சியர் முருகேஷ் இன்று தனது ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலை துறையினர், நகராட்சி ஊழியர்கள் என அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். அதில் பேசுகையில், ‘ திருவண்ணமலை ஓர் ஆன்மீக நகரம். நாள் தோறும் இங்கு வெவ்வேறு ஊர்களில் […]
திருவண்ணாமலையில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.அதன்படி,திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் உட்பட ரூ.340.21 கோடி மதிப்பிலான 246 திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.இதனைத் தொடர்ந்து,ரூ.70.27 கோடி செலவில் 91 முடிவுற்ற திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்த நிலையில்,1,71,169 பயனாளிகளுக்கு ரூ.693.03 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார். திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு விழாவில், 1,71,169 பயனாளிகளுக்கு ரூ. 693.03 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கினார். […]
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று திருவண்ணாமலை சென்றுள்ள நிலையில், அம்மாவட்டத்தில் இன்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டுள்ளார். அப்போது,விழா நடைபெறும் இடத்திற்கு சென்ற முதல்வருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்நிலையில்,திருவண்ணாமலையில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். அதன்படி,திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் உட்பட ரூ.340.21 கோடி மதிப்பிலான 246 திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து,ரூ.70.27 […]
மாற்றுதிறனாளிகளின் அமைச்சராக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உள்ள நிலையில்,ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும் முதல்வர் அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.அந்த வகையில்,திருவண்ணாமலை சென்றுள்ள முதல்வர் கீழ்பெண்ணத்தூர் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி சிறுவன் சிவானந்தத்தின் வீட்டிற்கு நேரில் சென்று உரையாடி,அச்சிறுவனுக்கு தேவையான உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து,சற்று நேரத்தில் திருவண்ணமலையில், மாற்றுதிறனாளிகளுக்கான இல்லப் பராமரிப்பு திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.அதன்படி,இத்திட்டத்தின் மூலம் 52 மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.87 லட்சம் செலவில் இணைப்பு சக்கரங்களுடன் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள்,முதுகு […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்றது முதல், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று,புதிய அரசு திட்டங்களை தொடங்கி வைத்து,மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். இந்த நிலையில்,அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக வருகின்ற ஜூலை 7 மற்றும் 8 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருவண்ணாமலை செல்கிறார்.அப்போது, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே,அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக கடந்த ஜூலை 2 […]
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் சிலையை திருவண்ணமலையில் வேங்கைக்கால் பகுதியில் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாக தற்காலிக தடை விதித்திருந்தது.பட்டா நிலத்துடன் பொது இடத்தை ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல் கிரிவலப்பாதை மற்றும் நெடுஞ்சாலையை இணைக்கும் இடத்தில் கருணாநிதி சிலை வைக்க ஏற்பாடு செய்யப்படுவதால் அதனை அனுமதிக்க கூடாது என்று கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில்,வேங்கைக்கால் பகுதியில் கருணாநிதி சிலை வைக்க தற்காலிக தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்திருந்தது. மேலும்,சிலை வைக்கும் இடத்தை ஆய்வு செய்து […]
12-ஆம் வகுப்பு இறுதித்தேர்வு முடித்துவிட்டு சக நண்பர்களுடன் அசைவ உணவகத்தில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட மாணவன் உயிரிழப்பு. கடந்த மாதம் கேரளாவின் காசர்கோட்டில் பேருந்து நிலையம் அருகே உள்ள IDEAL என்ற ஒரு உணவகத்தில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட 15 பள்ளி மாணவர்கள் உட்பட 30 -க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி மட்டும் சிகிச்சை […]
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் சிலையை திருவண்ணமலையில் வேங்கைக்கால் பகுதியில் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. பட்டா நிலத்துடன் பொது இடத்தை ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல் கிரிவலப்பாதை மற்றும் நெடுஞ்சாலையை இணைக்கும் இடத்தில் கருணாநிதி சிலை வைக்க ஏற்பாடு செய்யப்படுவதால் அதனை அனுமதிக்க கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில்,வேங்கைக்கால் பகுதியில் அமைக்க கருணாநிதி விலை வைக்க தற்காலிக தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,சிலை வைக்கும் இடத்தை ஆய்வு செய்து திருவண்ணாமலை மாவட்ட […]
திருவண்ணாமலை மாவட்டம் சொரகொளத்தூர் கிராமத்தில் மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற போது 2 பேர் உயிரிழந்துள்ளனர்.சரண்ராஜ் என்பவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றபோது ஏழுமலை என்பவரும்,சரண்ராஜைக் காப்பாற்ற வந்த ரேணுகோபால் என்பவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சரண்ராஜ் மீதான நிலத்தகராறு முன்விரோதம் காரணமாக அவரை மின்சாரம் பாய்ச்சி ஏழுமலை கொலை செய்ய முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறபபடுகிறது. இதனையடுத்து,சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு […]
திருவண்ணாமலை:இன்று முதல் அண்ணாமலையாரை தரிசிக்க 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில்,திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு செல்ல 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம் என மாவட்ட […]
கொரோனா கட்டுப்பாடுகளால் திருவண்ணாமலை கோயிலில் மார்கழி மாத பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை. திருவண்ணாமலையில் வரும் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் மார்கழி மாத பௌர்ணமி கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு திருவண்ணாமலையில் வரும் 18, 19ம் தேதிகளில் பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வர வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களின் சிரமங்களை அறிந்து ஆங்காங்கு உள்ள நிலவரப்படி மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் முன்னதாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தொடர் மழை காரணமாக தற்பொழுது திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான புகாரில் சிக்கிய அக்கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம்பட்டியில் செயல்பட்டு வரும் சுரபி நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன்,அங்கு பயிலும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவ,மாணவிகள் சில தினங்களுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது,ஜோதி முருகனை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதன்காரணமாக,அவர் மீது போலீசார் போக்சோ உள்பட 14 பிரிவுகளின் கீழ் போலீசார் அடுத்தடுத்து […]
திருவண்ணாமலை கிரிவலத்துக்கு 15,000 வெளியூர் பக்தர்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மலையில் ஏறி சென்று மகா தீபத்தை தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்வதற்கும் தடையை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி 17ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிற்கு தமிழக அரசு பதிலளித்துள்ளது. அதன்படி இன்று மற்றும் […]
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 19-ஆம் தேதி ஒருநாள் உள்ளூர் விடுமுறை. திண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழாவைஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் 19ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வரும் திங்கள் அன்று திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிசம்பர் […]
ஆரணி கூட்டுறவு நகர வங்கியில் போலி நகைகள் வைத்து ரூ.2.39 கோடி அளவில் கடன் பெற்று மோசடி என கூட்டுறவுத்துறை தகவல். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கூட்டுறவு நகர வங்கியில் சுமார் ரூ.2.39 கோடி அளவில் 77 நபர்களுக்கு போலி நகைக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. போலி நகைக்கடன் வழங்க உறுதுணையாக இருந்த வாங்கி பணியாளர், நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 3 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்காலிக நீக்கம் செய்து கூட்டுறவுத்துறை […]
தமிழக அரசால் போராடி பெறப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் உள்ளது என சந்திப் நந்தூரி அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்று உள்ளது. இந்த பாராட்டு விழாவில் 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் […]
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த திமுக கவுன்சிலர் அதிமுக பிரமுகரை ஏற்கனவே கொலை செய்ததற்காக பட்ட பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு திருவண்ணாமலையை சேர்ந்த அதிமுக பிரமுகர் கனகராஜ் என்பவரை திமுக கவுன்சிலர் பங்க் பாபு கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது முன் விரோதமாக இருந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் பங்க் பாபுவை திருவண்ணாமலை பைபாஸ் ரோட்டில் வைத்து மூன்று பேர் கொண்ட கும்பல் அதிமுக பிரமுகரின் மரணத்திற்கு […]
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த திருவண்ணாமலை ஆரணி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய மாவட்ட ஆட்சியர். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அடுத்த பத்தியவரம் எனும் கிராமத்தில் உள்ள அமலாக்கராணி என்ற பார்வையற்றோர் பள்ளி இயங்கி வருகிறது, இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையற்றோர் தங்கி பயின்று வருகின்றனர். அண்மையில் வெளியாகிய பிளஸ் டூ தேர்வில் சீனிவாசன் என்ற மாணவன் 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதன்மையாக வந்துள்ளார். இதனை அறிந்த திருவண்ணாமலை மாவட்ட […]