திருவண்ணாமலை

தி.மலை நிலச்சரிவு : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

திருவண்ணாமலை : ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக, வ.உ.சி. நகர் 11-வது தெருவில் வசித்து வந்த திரு.ராஜ்குமார் என்பவரது வீட்டின் மீது டிசம்பர் 1-ஆம் தேதி மரம் விழுந்ததை அறிந்து அவர் வீட்டின் கதவினை திறக்க முற்பட்டபோது மலையிலிருந்து பெரிய பாறை உருண்டு வந்து வீட்டின் மேல் விழுந்தது. இதன் காரணமாக, அவரது வீடு மண் மற்றும் பாறையால் மூடப்பட்டு இடிந்துள்ளது. […]

Cyclone Fengal 6 Min Read
tiruvannamalai landslide cm stalin

திடீரென உயர தொடங்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: கடந்த வாரம் முழுக்க ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் தொடர்ந்து இரண்டு நாளாக இறக்கம் கண்டது. இந்நிலையில், விலை இன்று திடீரென மீண்டும்  உயரத் தொடங்கியிருப்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640க்கு விற்பனை, கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை இன்று மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.98க்கும் கிலோவுக்கு ரூ.98.000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், […]

GOLD PRICE 2 Min Read
gold price

திருவண்ணாமலை அரசு பள்ளியில் பல்லிவிழுந்த உணவை சாப்பிட்ட 50 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!

திருவண்ணாமலை மாவட்டம் தண்டரை அரசு பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நிலை குறைவு. திருவண்ணாமலை மாவட்டம் தண்டரை அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. அங்கு மதிய உணவு கொண்ட ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பல்லி விழுந்த உணவை உட்கொண்டதால் மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 50 மாணவர்களுக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் […]

2 Min Read
lizard

திருவண்ணாமலை – சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட்!

திருவண்ணாமலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய புகாரில் 5 காவலர்கள் பணியிடை நீக்கம். திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உட்பட 5 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய புகாரில் 5 காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்து அம்மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கண்ணமங்கலம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அருள்நாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், சேத்துப்பட்டு காவல் நிலைய காவலர் ஹரிஹர ராஜநாராயணன், செங்கம் காவல் […]

2 Min Read
SI suspended

திருவண்ணாமலை ATM கொள்ளை வழக்கில் மேலும் இருவர் கைது!

ஹரியானாவில் மேலும் 3 கொள்ளையர்கள் பதுங்கிய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என எஸ்பி கார்த்திகேயன் தகவல். மேலும் இருவர் கைது: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கு தொடர்பாக மேலும் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கர்நாடகா, கோலாரியில் பதுங்கி இருந்த குர்திஷ் பாஷா மற்றும் அஷ்ரப் உசேன் ஆகியோர் தனிடையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஹரியானவை சேர்ந்த கொள்ளை கும்பலின் தலைவன் ஆரிப், கூட்டாளி ஆசாத் ஆகிய இருவர் கைதான நிலையில், […]

4 Min Read
Default Image

ஏடிஎம் கொள்ளை – கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேர் நீதிபதி தெய்வீகன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.  நீதிமன்றத்தில் ஆஜரான கொள்ளையர்கள்: திருவண்ணாமலை ஏடிஎம்களில் கொள்ளையடித்த வழக்கில் கைதான ஹரியானவை சேர்ந்த 2 பேரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். திருவண்ணாமலை நடுவர் நீதிமன்ற நீதிபதி தெய்வீகன் முன்னிலையில் ஹரியானாவில் பிடிபட்ட ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிப், அவனது கூட்டாளி ஆசாத் ஆகியோரை தனிப்படை காவல்துறை ஆஜர்படுத்தியுள்ளது. காவலில் எடுக்க தனிப்படை தீவிரம்: அதிகாலையில் திருவண்ணாமலைக்கு அழைத்து வரப்பட்ட இருவரிடமும் போலீசார் […]

4 Min Read
Default Image

ஏடிஎம் கொள்ளையர்கள்கைது.! திருவண்ணாமலை காவல் நிலையத்தில் ஐஜி விசாரணை.! மற்றவர்களுக்கு வலைவீச்சு.!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் சென்னையில் இருந்து திருவண்ணாமலை கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருவண்ணாமலையில் தொடர் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட வெளிமாநில கொள்ளையர்கள் ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரை திருவண்ணாமலை காவல்துறை தனிப்படை பிரிவினரின் தீவிர விசாரணைக்கு பின்னர் நேற்று கைது செய்தனர். அவர்களை ஹரியானா மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வந்தனர். ஐஜி விசாரணை : ஏடிஎம் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட ஆரிஃப்  மற்றும் ஆசாத் ஆகிய […]

3 Min Read
Default Image

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்களை சென்னை கொண்டு வந்த காவல்துறையினர்.!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரையும் தமிழக காவல்துறை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது ஒரே இரவில் திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு 75 லட்ச ரூபாயை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது என்ற செய்தி தான். தனிப்படை : கொள்ளையடித்து விட்டு அந்த ஏடிஎம்-ஐ  சேதப்படுத்தி விட்டு, மேலும், அங்குள்ள […]

6 Min Read
Default Image

புகைப்படம்.. வீடியோ ஆதாரங்கள் சிக்கியுள்ளன.! ஏடிஎம் கொள்ளை குறித்து ஐஜி கண்ணன் விளக்கம்.!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் அரியானா மாநிலத்தவர்கள். ஆதாரங்கள் கிடைத்துள்ளன . தற்போது அவர்களை அடையாளப்படுத்துவது மட்டுமே இறுதி வேலை. என் ஐஜி கண்ணன் விளக்கம் அளித்துள்ளார். அண்மையில் திருவண்ணாமலை பகுதியில் ஒரே இரவில் தொடர்ந்து நான்கு ஏடிஎம்களின் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த கொள்ளை சம்பவத்தில் 75 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும், அந்த ஏடிஎம் இயந்திரங்கள சேதப்படுத்தப்பட்டன. இதில் குற்றவாளிகளை பிடிக்க திருவண்ணாமலை காவல்துறையின்ர் சார்பில் ஏழு தனிப்படைகள் அமைத்து பல்வேறு மாநிலங்களில் காவல்துறையினர் […]

6 Min Read
Default Image

திருவண்ணாமலை தொடர் ஏடிஎம் கொள்ளை.! ஒருவரை கைது செய்த காவல்துறை.!

திருவண்ணாமலை தொடர் ஏடிஎம் கொள்ளையில் சம்பந்தப்பட்ட ஒரு நபரை காவல்துறையினர் பெங்களூருவில் கைது செய்துள்ளனர்.   கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது ஒரே இரவில் திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு 75 லட்ச ரூபாயை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது. கொள்ளையடித்து அந்த ஏடிஎம்-ஐ  எரித்து விட்டு, மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளிலும் சிக்காத வண்ணம் தப்பித்து விட்டனர். இந்த கொள்ளை சம்பவத்தை அடுத்து திருவண்ணாமலை எஸ்பி […]

3 Min Read
Default Image

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் கைது.? மறுப்பு தெரிவித்த காவல்துறை.!

திருவண்ணாமலை தொடர் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததாக வந்த செய்தி முழுக்க முழுக்க பொய் என திருவண்ணாமலை காவல்துறை தெரிவித்துள்ளது .  அண்மையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து ஏடிஎம்களில் கொள்ளை நடைபெற்று சுமார் 72 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. அடுத்தடுத்து ஒரே நிறுவனத்தை சேர்ந்த ஏடிஎம் கொள்ளையடிக்கப்பட்டதால் பெரும் பதட்டம் உருவானது. உடனடியாக மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் கீழ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை தமிழகத்தை தாண்டியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், […]

4 Min Read
Default Image

“கொள்ளையர்களை அடையாளம் கண்டுவிட்டோம்” – டிஜிபி

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் விவரங்கள் கிடைத்துவிட்டது என டிஜிபி தகவல். டிஜிபி செய்தியாளர் சந்திப்பு: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது ஹரியானவை சேர்ந்தவர்கள் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிஜிபி, கொள்ளையர்களை அடையாளம் கண்டுவிட்டோம். அவர்களின் முழு விவரம் கிடைத்துள்ளது. விரைவில் பிடித்து கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தை மீட்டுவிடுவோம் என கூறினார். ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முதல்நாள் நள்ளிரவு ஏடிஎம் […]

5 Min Read
Default Image

80 ஆண்டு போராட்டம்.! எனது வாழ்வின் திருப்திகாரமான நாள்.! திருவண்ணாமலை எஸ்பி நெகிழ்ச்சி.!

இன்று போலீஸ் அதிகாரியான என் வாழ்க்கையில் மிகவும் திருப்திகரமான நாள். – பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற பின்னர் திருவண்ணாமலை எஸ்.பி கார்த்திகேயன் நெகிழ்ச்சியாக கூறினார். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள தென்முடியனூரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் நீண்ட வருடங்களாக பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல் ஒரு சமூகத்தினர் தீண்டாமை கடைபிடித்து வந்துள்ளனர். அதுவும் கடந்த 80 ஆண்டுகளாக இந்த வேதனைக்குரிய நடைமுறை இருந்து வந்துள்ளது. தீண்டாமை : இதனை, அறிந்த திருவண்ணாமலை மாவட்ட […]

5 Min Read
Default Image

பரபரப்பு : ஒரே குடும்பத்தை சேர்த்த 6 பேர் கொலை..!

ஒரே குடும்பத்தை சேர்த்த 6 பேர் கொலை செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு.  திருவண்ணாமலை மாவட்டம்  ஒரேவந்தவாடி அருகே குடும்ப தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். மனைவி மகன் மற்றும் நான்கு மகள்களை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

#Murder 1 Min Read
Default Image

ஆட்டுக்கொட்டகையின் மீது விழுந்த மரம்..! 10 ஆடுகள் பலி..!

விழுப்புரத்தில் ஆட்டு கொட்டகையின் மீது புளியமரம் விழுந்ததால், 10 ஆடுகள் உயிரிழப்பு.  நேற்று மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. மேலும் அதிக காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே ஆலந்தூரில் பச்சையப்பன் என்பருக்கு சொந்தமான ஆட்டு கொட்டகையின் மீது புளியமரம் ஒன்று விழுந்துள்ளது. இதனால் 10 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது.

- 2 Min Read
Default Image

உலகப்புகழ்பெற்ற திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்பட்டது.! பல லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் தரிசனம்.!

2,668 அடி உயர மலை உச்சியில் திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்பட்டது.  இன்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் பிரதான கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  அதிலும் மிக முக்கியமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா பிரசித்திபெற்ற ஒன்றாகும். இன்று மாலை 6 மணிக்கு இங்கு மகாதீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும். அதே போல சரியாக 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த தீப தரிசனத்தை நேரில் காண திருவண்ணாமலைக்கு […]

- 2 Min Read
Default Image

2,668 அடி உயர திருவண்ணாமலை தீபமலை தயார்.! இன்னும் சில மணிநேரத்தில் மகாதீபம்.!

திருவண்ணாமலையில் மகாதீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் இன்னும் சில மணிநேரத்தில் ஏற்றப்பட உள்ளது. இன்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் பிரதான கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  அதிலும் மிக முக்கியமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா பிரசித்திபெற்ற ஒன்றாகும். இன்று மாலை 6 மணிக்கு இங்கு மகாதீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது. இதனை காண தமிழகமெங்கிலும் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் […]

- 2 Min Read
Default Image

இன்று முதல் 6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்..! எங்கு? எதற்கு?

திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் 6 நாட்கள் விடுமுறை.  திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27-ஆம் தேதி   கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. இ  10 நாட்கள் இந்த விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சியர் முருகேஷ் உள்ளூர் விடுமுறை அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து, திருவண்ணாமலை நகரில் காமராஜர் சிலை, வேங்கிக்கால் ஏரிக்கரை, […]

- 3 Min Read
Default Image

திருவண்ணாமலை தீப திருவிழா – உள்ளூர் விடுமுறை அறிவித்த ஆட்சியர்..!

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சியர் முருகேஷ் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27-ஆம் தேதி   கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. இ  10 நாட்கள் இந்த விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சியர் முருகேஷ் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

- 2 Min Read
Default Image

திருவண்ணாமலை தீபத்திருவிழா – 14 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 14 சிறப்பு ரயில்கள் இயக்கம். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6ம் தேதி மகாதீப பெருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்த திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது, கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து […]

- 2 Min Read
Default Image