திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோட்டமங்கலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மிதுன் என்ற மூன்று வயது சிறுவன் உயிரிழப்பு.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குழியில் உள்ள மொரட்டுபாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வரும் நாகராஜ், மணிகண்டன் ஆகியோரை நான்கு இளைஞர்கள் வந்து தாக்கினர். வெளியாட்கள் வந்து பள்ளிமானவர்களை தாக்கும் காட்சிகள் சமூகவளைதலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை அறிந்து போலீசார் வந்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளியில் வைத்து மாணவர்களை தாக்குவது அந்த பகுதி மக்களிடம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.