சென்னை: கடந்த வாரம் முழுக்க ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் தொடர்ந்து இரண்டு நாளாக இறக்கம் கண்டது. இந்நிலையில், விலை இன்று திடீரென மீண்டும் உயரத் தொடங்கியிருப்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640க்கு விற்பனை, கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை இன்று மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.98க்கும் கிலோவுக்கு ரூ.98.000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், […]
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் வாகன ஒட்டுநராக பணிபுரிந்துவந்த காங்கேயம், சத்யா நகரைச் சேர்ந்த மலையப்பன் (வயது 49) என்பவர் நேற்று முன்தினம் (ஜூலை 24) மாலை பள்ளி முடிந்தவுடன் பள்ளிக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கோவை திருச்சி நெடுஞ்சாலை வெள்ளக்கோவில் பழைய காவலர் குடியிருப்பு அருகே வந்துகொண்டிருந்தபோது மலையப்பனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக தான் ஒட்டிவந்த பள்ளி வாகனத்தில் இருந்த பள்ளிக் குழந்தைகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் பத்திரமாக நிறுத்தி ஸ்டியரிங்கில் மயங்கி […]
காங்கேயம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் 10 ஆயிரம் அபராதம் விதித்ததால் போலீசார் வாகனத்துக்கு ஒருவர் தீ வைத்த சம்பவம் அங்கு பரபரப்பை உண்டாக்கியுள்ளது. தற்போது தமிழகத்தில் புதிய வாகன சட்டம் அமலில் இருப்பதால், அதன் அபராத தொகை முன்பை விட அதிகமாக இருந்து வருகிறது. இதனை நாம் அவ்வப்போது செய்திகளில் பார்த்து வருகிறோம். அண்மையில், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாம்பவலசை பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் மதுபோதையில் […]
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர். இதுதொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருப்பூர் மாவட்டத்தில் மஜரா திருமுருகன்பூண்டியில் செயல்பட்டுவரும் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி கல்வி பயின்று வந்த மாணவர்களில் மாதேஷ் (15), பாபு (13) மற்றும் ஆதிஷ் (8) ஆகிய மூன்று சிறுவர்களும் காப்பகத்தில் உணவு உட்கொண்ட பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும்போது வழியிலேயே […]
3 குழந்தைகள் உயிரிழப்புக்கான காரணம் பரிசோதனைகளுக்கு பின்பே தெரியவரும் என திருப்பூர் ஆட்சியர் விளக்கம். திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்ததாகவும். மேலும் சில குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது. இதுகுறித்து, திருப்பூர் ஆட்சியர் 3 குழந்தைகள் உயிரிழப்புக்கான காரணம் பரிசோதனைகளுக்கு பின்பே தெரியவரும். சிகிச்சை பெற்று வரும்சிறுவர்களின் சிறுநீர், மலம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக காவல்துறை […]
திருப்பூரில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் மனைவி உயிரிழப்பு, கணவர் படுகாயம். திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே பைக் மீது அரசு பேருந்து மோதியதில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் ஓட்டுநர் முத்துமாணிக்கத்திடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,தமிழகத்தில் நீலகிரி,கோயம்புத்தூர்,திருப்பூர்,தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.. மேலும்,தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். […]
ஆம்பூரில் அரசு சார்பில் நாளை நடைபெறவிருந்த பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பு. திருப்பூர் மாவட்ட நிர்வாக சார்பில் ஆம்பூரில் நாளை முதல் 15-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பிரியாணி திருவிழா நடைபெறும் என்று அம்மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சர்ச்சை எழுந்த நிலையில், ஆம்பூர் பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, தலித், இஸ்லாமிய கூட்டமைப்புகள் மற்றும் விசிக உள்ளிட்ட […]
மாட்டிறைச்சி பிரியாணியை இலவசமாக வழங்குவோம் என இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு. ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியை அனுமதிக்காவிட்டால், இலவசமாக வழங்குவோம் என தலித் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்புகள் அறிவித்துள்ளது. பிரியாணி திருவிழா நடைபெறும் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, திருப்பூர் மாவட்ட நிர்வாக சார்பில் ஆம்பூரில் நாளை முதல் 15-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பிரியாணி திருவிழா நடைபெறுகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கான பணிகள் ஆம்பூர் வர்த்தக […]
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே போடிபட்டி பகுதியை சேர்ந்த 7 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு,கடந்த 2020 ஆம் ஆண்டில் நவரசன் என்ற இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்தும்,அதனை செல்போனில் வீடியோவாக எடுத்ததும் வந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,சிறுமி தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது சிறையில் அடைத்தனர். இந்நிலையில்,இது தொடர்பான வழக்கு, மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்,சிறுமிக்கு பாலியல் […]
திருப்பூர் மாவட்டம் பள்ள பாளையத்தில் உள்ள கருப்பராயசுவாமி கோயில் மற்றும் வடுக பாளையத்தில் உள்ள கருவந்தராய சுவாமி கோயில் ஆகிய 2 கோயில்களையும் இடிக்க உயர்நீதிமன்றம் இடைக்கால தடை. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பள்ள பாளையத்தில் உள்ள கருப்பராயசுவாமி கோயில் மற்றும் வடுக பாளையத்தில் உள்ள கருவந்தராய சுவாமி கோயில் ஆகிய 2 கோயில்களும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக கூறி, இரண்டு கோயில்களையும் இடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாளையத்தை சேர்ந்த […]
திருப்பூர்:மாநகராட்சி துணை மேயர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக வழங்கியுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 பிப்.ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில்,அதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 ஆம் தேதி நடைபெற்றது.இதனையடுத்து,தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.இதனைத் தொடர்ந்து,மேயர்,துணை மேயர்,சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்ய வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை. திருப்பூர் மாநகராட்சி 36-ஆவது வார்டில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மணி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கூறப்படுகிறது. தேர்தல் செலவுக்காக ரூ.50 ஆயிரம் கடன் வாங்கிய நிலையில், 44 ஓட்டுகள் மட்டும் வாங்கியதால் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியிலும் கூட வெற்றி பெறவில்லை என்பது […]
அதிமுகவினர் வசம் உள்ள காங்கேயம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளை கைப்பற்றும் முயற்சியில் திமுக எம்எல்ஏக்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் வருகின்ற பிப்.19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.இதனால்,அரசியல் கட்சிகள் வாக்குச் சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில்,திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கயம்,வெள்ளகோவில் நகராட்சிகள்,மூலனுார் பேரூராட்சி ஆகியவற்றை கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் காங்கயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும்,தமிழக செய்தித்துறை அமைச்சருமான சாமிநாதன் ஈடுபட்டு வருகிறார். ஏனெனில்,கடந்த, 2011 ஆம் […]
நூல் விலை கிலோவுக்கு மேலும் 10 ரூபாய் அதிகரித்துள்ளதால் திருப்பூர் பின்னலாடை தயாரிப்பாளர்கள் கவலை. நூல் விலை மேலும் உயர்ந்திருப்பதால் பின்னலாடை வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. நூல் விலை கிலோவுக்கு மேலும் 10 ரூபாய் அதிகரித்துள்ளதால் திருப்பூர் பின்னலாடை தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர். நூல் விலையை குறைக்க மத்திய நிதிநிலை அறிக்கையில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதுதொடர்பாக எந்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது ஏமாற்றமாக அமைந்துள்ளது. மூலப்பொருள் உயர்வால் ஏற்கனவே ஜவுளிதுறையில் […]
திருப்பூர் அம்மாபாளையத்தில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சறுத்திய சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. திருப்பூரில் 7 பேரை தாக்கி கடந்த கடந்த 4 நாட்களாக திணறடித்து வந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இன்று திருப்பூர் நகரப்பகுதியில் புகுந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. முட்புதரில் பதுங்கியிருந்த சிறுத்தைக்கு முதல் மயக்க ஊசியை வனத்துறையினர் செலுத்தினர். மயக்க ஊசி செலுத்தியத்திலிருந்து மயக்கமடைய அரை மணி நேரம் வரை ஆகும் அல்லது மருத்தின் வீரியத்தை […]
7 ஆண்டுகளாக கூலி உயர்வு முழுமையாக வழங்கப்படாததைக் கண்டித்து 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் என விசைத்தறியாளர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு 7 ஆண்டுகளாக விசைத்தறிகளுக்கான கூலி உயர்வு முழுமையாகக் கிடைக்கவேயில்லை வெகுவாக உயர்ந்துவிட்ட விலைவாசி உயர்வால் இத்தொழிலை கைவிட்டுவிட்டு பலபேர் வேறு வழிகளைத் தேடியும் இத்தொழிலுக்காக வாங்கிய கடனைச் செலுத்த வழியின்றி மூதாதையர் சேர்த்து வைத்த சொத்துக்களை இழந்து […]