நெல்லை மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தால் நேற்று குற்றாலத்தின் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதித்து காவல்துறையினர் உத்தரவிட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால், இன்று […]
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் உலக பாரம்பரிய தினத்தையொட்டி பழங்கால நாணய கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் சங்க காலம் தொட்டு வழங்கி வந்த மூவேந்தர் முத்திரைக் காசுகளும், பெருவழுதி நாணயம், செழியன் காசு போன்ற பாண்டிய மன்னர்களின் நாணயங்கள் உள்பட பல்வேறு வகையான நாணயங்கள், காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் கண்காட்சியை கண்டு பயன் பெற அனைத்து பள்ளிகளுக்கும் அரசு அருங்காட்சியம் சார்பில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.ஆங்கிலேயர் காலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துறை ஆங்கிலேயரால் […]
நெல்லையில் 48 பள்ளிகளுக்கு தூய்மைக்கான விருதுகளை கலெக்டர் ஷில்பா வழங்கினார். நெல்லையில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் சார்பில், சுகாதாரத்தின் முக்கிய அங்கங்களான சுகாதாரமான குடிநீர், சுகாதாரமான கழிவறை வசதி, சோப்புகளுடன் கூடிய கை கழுவும் வசதி, பராமரித்தல், நடத்தை மாற்றம் மற்றும் திறன் உயர்த்துதல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு, ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 48 பள்ளிகள் துமைக்கான விருதுகளை பெருவகற்குமாக தேர்வு செய்யப்பட்டு, இந்த விருதினை கலெக்டர் ஷில்பா அவர்கள் வழங்கினார்.
நெல்லை மாவட்டத்தில் அணைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மலை பெய்து வந்த நிலையில், இதனையடுத்து ம்,சாத்தியம் 3 மணியளவில் மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மக்கள் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்டுகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதலாவது அணு உலையில் டர்பைன் பழுது காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பின் 109 நாட்களுக்கு பின் மீண்டும் உற்பத்தி தொடங்கிய நிலையில், மீண்டும் மின்உற்பத்தி நிருதப்பட்டிருப்பதால் 1000 மெகாவாட் மின்னுற்பத்தி பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
நெல்லையில் அரசு ஊழியர் வீட்டில் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன். இவர் சுகாதாரத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று இரவுஇ வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த இவர், வீட்டிற்குள் சென்று பார்த்த போது 42 பவுன் நகை மற்றும் 42 ஆயிரம் பணம் திருப்பட்டிருந்தது. இதனையடுத்து, பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை […]
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்று வீசியுள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குலை தள்ளிய வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. இதனையடுத்து அப்பகுதி விவசாயிகள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மொத்தத்தில் 70 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இந்நிலையில், ஒரு வாழைக்கு ரூ.100 வீதம் இழப்பீடு வழங்குபடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிலை கடத்தல் வழக்கில் திருச்சி கலால் துறை டி.எஸ்.பி. ஜீவானந்தம் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி கலால் துறை டி.எஸ்.பி. ஜீவானந்தம் ஆவார்.இவர் மீது சிலை கடத்தல் வழக்கு உள்ளது.இந்நிலையில் சென்னையில் சிலை கடத்தல் வழக்கில் திருச்சி கலால் துறை டி.எஸ்.பி. ஜீவானந்தத்தை போலீசார் கைது செய்தனர்.நெல்லை மாவட்டம் பழவூரில் சிலை கொள்ளை வழக்கில் ஜீவானந்தம் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் நெல்லை திட்ட கிளை சார்பில் பாளையங்கோட்டை மகாராஜர் மின்வாரிய மேற்பார்வையாளர் அலுவலகம் முன் நேற்று கிளை தலைவர் பீர்முகமது ஷா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பனி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லையில் உள்ள அன்னலட்சுமி என்பவர், காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 10 வருடங்கள் கழித்து கர்ப்பமாகியிருக்கிறார். இந்நிலையில் அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட இவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைதொடர்ந்து இவருக்கு அங்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். அரசு மருத்துவமனைக்கு சென்ற அவரை, மருந்து, மாத்திரை தருகிறோம் அவரை வீட்டில் வைத்து பார்க்குமாறு மருத்துவர்கள் அலட்சியம் காட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பு அளிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்யும் தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. DINASUVADU
பெருமணல் பகுதியில் கடலில் குளிக்க சென்ற 2 சிறுவர்களின் உயிரை வாரிக்கொண்டு சென்றது கடல் அலை. ரீசோ (10) மற்றும் சந்தியாகு ராயப்பன் (11) இவர்கள் இரண்டு பெரும் கடலில் குளிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் கடலில் குளித்துக்கொண்டு இருக்கும் போது கடலலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து சிறுவர்களின் சடலத்தை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில் கட்டுப்பாட்டை மீறி வெடி வெடித்தவர்கள் 6 பேர் போலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.அனுமதியின்றி பட்டாசு வெடித்தது, பட்டாசு பொருள் வைத்திருந்தது, விற்பனை செய்தது உள்ளிட்ட 3 வழக்குகளின் சிறுவர்களின் தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை அருகே, கோவையிலிருந்து நாகர்கோவில் சென்ற அரசு பேருந்து நின்றுகொண்டிருந்த லாரி மீதி மோது விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுமி ஷிவானியா நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர். இவருக்கு 3 வயது ஆகிறது. சிறுமி ஷிவானியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நெல்லை, வள்ளியூர் அருகே பெற்ற குழந்தைக்கு தாய் மஹாலக்ஷ்மி சூடு வைத்துள்ளார். இரண்டரை வயதே ஆன ஒன்றும் அறியாத குழந்தைக்கு பெற்ற தாய் சூடு வைத்து இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து போலீசார் மஹாலக்ஷ்மியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை கோடீஸ்வரன் நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் நெல்லை டவுன் பகுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நகை கடை நடத்தி வருகிறார். இந்த நகை கடை காவல் நிலையத்திற்கு அருகே அமைந்துள்ளது. மணிகண்டன் வழக்கம் போல் அதிகாலை கடையை திறக்க வந்துள்ளார். கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். போலீசார் ஆய்வு செய்ததில் 2 கிலோ தங்க நகை திருட்டு போயிருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மோப்பநாய் உதவியுடன் […]