நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் மற்றும் அவர் வீட்டு பணிப்பெண் ஆகியோர் ஜூலை 23ஆம் தேதி உமா மகேஸ்வரி அவர்களின் வீட்டிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக பலகட்ட விசாரணை, தடையங்கள், சிசிடிவி காட்சிகள் போன்றவற்றை ஆராய்ந்து திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் மகனான கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். இவர் கொடுத்த வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருந்ததாலும், நீங்க பொலிஸ்தானே முடிந்தால் கண்டுபிடியுங்கள் என கூறியதும் போலீஸ்காரர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. […]
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சேர்ந்த சுரேஷ்குமார் இவர் மனைவி காளீஸ்வரி (20) . இவர் தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் குற்றாலத்தில் குளிக்க சென்றன. மாலையில் சிற்றருவியில் இருவரும் குளித்து கொண்டிருந்த போது காளீஸ்வரி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் காளீஸ்வரி மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் காளீஸ்வரியை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். […]
நெல்லையில் சில நாட்கள் முன்பு முன்னாள் ஆளுநர் உமா மஹேஸ்வரி, அவரது கணவர் மற்றும் வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண் ஆகியோர் அவர்கள் வீட்டிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீஸ் தீவிர விசாரணை செய்து வருகிறது. இதில், முக்கிய தகவலாக கொலை நடந்த நேரத்தில் சென்ற வாகனங்களை ஆய்வு செய்தது தொடர்பாக திமுக பெண் பிரமுகரின் மகனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், கொலை செய்தவர்கள் தங்கள் ஆயுதங்களை […]
நெல்லை மாவட்டம் சிவகிரி மேற்கு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான பெரிய ஆவுடைப்பேரி கண்மாய்க்கு அருகே காட்டு விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் திருமால் உத்தரவு படி வனவர் முருகன் மற்றும் வனவர்கள், வேட்டை தடுப்பு காவலர்களும் அதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் உத்தரவின்படி சிவகிரி போலீசார் சப் இன்ஸ்பெக்டர் துரை சிங்கம் தலைமையில் போலீசாரும் இணைந்து ஒரு பெரிய ஆவுடைப்பேரி கண்மாய் […]
மன்னார் வளைகுடா கடற்பகுதியில் சூறைக்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.அதன் படி திருநெல்வேலி மாவட்ட கடற்பகுதியில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் சூறைக்காற்று வீசியது. இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி ,பெருமணல் ,இடிந்தகரை,கூந்தன் குழி ஆகிய 10 மீனவர் கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.மேலும் மீன்பிடி படகுகள் கடற்கரையில் நிறுத்தி […]
இன்று சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி , தமிழக சட்டப்பேரவை விதி 110-கீழ் செங்கல்பட்டு , தென்காசி புதிய மாவட்டங்களாக அறிவித்தார். நெல்லையில் இருந்து தென்காசியையும் , காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டையும் பிரித்து புதிய இரண்டு மாவட்டங்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். தமிழகத்தில் ஏற்கனவே புதியதாக கள்ளக்குறிச்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது செங்கல்பட்டு ,தென்காசி இரண்டு புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டதால் தற்போது தமிழகத்தில் 35 மாவட்டங்களாக மாறி உள்ளது.மேலும் புதிய இரண்டு […]
நெல்லை மாவட்டத்தில் உள்ள சுரண்டை பகுதியில் காமராஜர் விழாவை கோலாகலமாக கொண்டாட எண்ணி காமராஜர் ரத்ததான கழகம் சார்பில் நேற்று இரவு பேனர் மற்றும் கட் அவுட் அமைக்கும் பணியில் அதே பகுதியை சேர்ந்த மணி, சரவணன் , அரவிந்தன் உட்பட சில வாலிபர்கள் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது அவர்கள் மேலே ஏறி கட்டிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீச பட்டுள்ளனர்.இதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்த மக்கள் அவர்களை மீட்டு தென்காசி மருத்துவமனைக்கு […]
நெல்லை மாவட்டம் தென்காசியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளதாக கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய இசக்கி சுப்பையா கூறுகையில் , ” என்னை கட்சியில் அறிமுகப் படுத்தியது நான் தான் என கூறுகிறார் தினகரன். ஆனால் 2011-ம் ஆண்டு முதல்வர் அம்மா அவர்கள் என்னை அறிமுகப்படுத்தினார். மேலும் என்னை வெற்றி பெற செய்தது நெல்லை மாவட்ட மக்கள்.அவர்களுக்கு விஸ்வசமாக இருப்பேன் என கூறினார்.மேலும் 2009-ம் ஆண்டு அதிமுகவில் […]
நெல்லை மாவட்டம், கரையிருப்பு பகுதியை சேர்ந்த அசோக் .இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் மாவட்ட பொருளாளராக பதவி வகித்தவர். இந்நிலையில், இவரது தாயார் சாலையில் நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த வேறொரு சமூகத்தை சேர்ந்தவர்கள், அவரை மோதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அசோக்கிற்கும், அவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இருப்பினும் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து, அமைதி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இந்நிலையில், பணிக்கு சென்றுவிட்டு, பேருந்துக்காக காத்திருந்த அசோக்கை சுற்றி வளைத்த மர்ம […]
கூடன்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக வரும் 10-ம் தேதி நடைபெறும் கருத்துக்கேட்பு கூட்டம் தொடர்பாக நெல்லை ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. கூடன்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக வரும் 10-ம் தேதி நடைபெறும் கருத்துக்கேட்பு கூட்டம் தொடர்பாக நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில், கூடன்குளம் வளாக இயக்குனர் சஞ்சய்குமார், எஸ்.பி அருண் சக்திகுமார் உள்ளிடோர் பங்கேற்பு பாதுகாப்பு காரணங்களுக்காக ராதாபுரத்தில் நடக்கும் கருத்துக்கேட்பு கூட்டத்தை வேறு இடம், தேதிக்கு […]
பிரபல எழுத்தாளரான தோப்பில் முகமது மீரான் (வயது 74) நெல்லையில் வசித்து வருகிறார். இவர் 5 புதினங்கள், 6 சிறுகதைகள், தொகுப்புகள் மற்றும் மொழிபெயர்ப்புகள் போன்றவற்றை எழுதியுள்ளார். 1997-ல் இவர் எழுதிய சாய்வு நாற்காலி என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதினை பெற்றுள்ளார். இந்நிலையில், நெல்லை மாவட்டம், பேட்டை பகுதியில், தோப்பில் முகமது மீரான் உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதம மந்திரியின் தூய்மை திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாநகராட்சி மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் மின்கலத்திலான சிறிய 54 குப்பை அள்ளும் வண்டிகள் கொண்டு வரப்பட்டு விரைவில் மண்டலங்களுக்கு வழங்கப்பட உள்ளன. திருநெல்வேலி மாநகராட்சி ‘ஸ்மார்ட்’ திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.திருநெல்வேலி மாநகராட்சி காலம் மாற்றம் ஏற்படுவதற்கு தகுந்து மாற்றம் அடைந்து வருகிறது. அதற்கு ஏற்ப குப்பைகள், கழிவுகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே இதை உடனடியாக அப்புறப்படுத்த ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு […]
நெல்லையில் இந்து அறநிலையத் துறைக்கு, இந்து அறநிலைய கோயில்களில் மோசடி நடைபெற்றதாக புகார் வந்தது. இதனையடுத்து, இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் அப்புகாரின் பெயரில் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சத்தியசீலன், தங்கபாண்டியன், முனுசாமி ஆக்கிய மூன்று பெரும் கோவில்களில் பல லட்சம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து பொதுமக்களும் உற்சாகமாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், நெல்லை பணகுடி வாக்குச்சாவடியில் மணிகண்டன் என்பவர், தனது ஓட்டை மற்றோரு நபர் போட்டுவிட்டதாக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார். இதனையடுத்து, நெல்லை பணகுடி வாக்குச்சாவடி எண் 49A விதிப்படி மணிகண்டன் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
மக்களவை தேர்தல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டம், கலிங்கப்பட்டி வாக்குச்சாவடியில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாக்களித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ, மத்திய, மாநில அரசுகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், தேர்தல் ஆணையம் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், வேலூர் தேர்தலை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை என்றும் வைகோ […]
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது நாட்டிற்கு அழகு மக்களவை தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளின் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி தலைவியும், வக்பு வாரிய உறுப்பினருமான பாத்திமா முஸப்பர் அவர்கள் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், ” பெண்கள் வாழ்வதற்கு அபாயகரமான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பிரதமர் மோடி, பொய்களை […]
தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை அருகே 1.40 லட்சம் பறிமுதல். வரும் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும், மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பல விதிமுறைகளை விதித்துள்ளது. இந்நிலையில், காவல்துறையினர் இந்த விதிமுறைகளை கைக்கொள்ளும் வண்ணம், அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இன்று நெல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1.40 லட்சம் பறிமுதல் செய்தனர். நெல்லை […]
நெல்லை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்தில் ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். நெல்லை மாவட்டம் அருகே உள்ள வரகனூரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டிருப்பதால் மீட்பு பணி தாமதகின்றது.மேலும் தீயை அணைக்கும் பணியில் […]
கடந்த 2018-ஆம் ஆண்டு திரிபுராவில் நடந்து முடிந்த மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்றவுடன் தெற்கு திரிபுரா மாநிலத்தில் உள்ள பெலோனியா நகரில் மார்க்சிஸ்ட் கட்சியால் 2013-ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பின் நிறுவப்பட்டிருந்த மாமேதை லெனின் சிலை உடைதெறியப்பட்டது. பாசிச சக்திகளுக்கு எதிரான சிம்மசொப்பனமாக புரட்சியாளர் லெனின் இன்றும் திகழ்வதால் அவர்கள் பதட்டம் கொள்கிறார்கள்! யார் லெனின்? முதலாளித்துவத்தை வீழ்த்தி பாட்டாளி வர்க்கத்தை அரியணையில் ஏற்றிய மகத்தான வரலாற்று நாயகன் அவர். மார்க்சியத்துக்கு உலக அரங்கில் முதன்முதலாக செயல் […]
நெல்லையில் லெனினின் 12 அடி உயர வெண்கலச் சிலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி திறந்து வைத்தார். பாஜக ஆட்சிக்கு வந்த பின் திரிபுராவில் லெனின் சிலையை அடித்து நொறுக்கினார்கள். இதற்கு பதிலடியாக திரிபுராவில் வீழ்ந்தது , நெல்லையில் எழுகிறது என்ற வாசகத்துடன் நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 12 அடி உயர வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இன்று மாலை இந்தச் சிலையை திறந்து […]