மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய வளாகம் மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸிற்கு உலக நாடுகளில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 10 பேர் இந்த கொலைக்கார வைரஸிற்கு பலியாகிய நிலையில் 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இந்த வைரஸால் முதல் உயிர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக […]
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதியம்மன் கோயிலில் மார்ச்., 8ஆம் தேதி தெப்பத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது. பண்டைய காலத்தில் சைவ மதத்திற்கும் சமண மதத்திற்கும் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டதை அனைவரும் அறிவோம்.இந்த கருத்து வேறுபாடு காரணமாக சைவசமயக் குரவா்களில் ஒருவரான அப்பா் என்று அழைக்கப்படுகின்ற திருநாவுகரசரின் ஆழ்ந்த பக்தியினை பரிசோதிக்கும் விதமாக கல்லில் கட்டி கடலில் போட்டாா்கள் சமண மதத்தினர். சற்றும் அஞ்சாமல் ஆண்டவனையே நினைத்து அப்பா் “கற்றுணை பூட்டியோா் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே” […]
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் இம்மாதம் 21, 22ஆம் தேதிகளில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இது குறித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ள செய்திக்குறிப்பில் சிவராத்திரி விழாவையொட்டி நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலின் நடை பிப்.,21ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முழுவதும் நடை திறந்தே இருக்கும்.அன்று இரவு இரவு 10 மணிக்கு முதல் கால சிவராத்திரி சிறப்பு பூஜை தொடங்கும்.நள்ளிரவு 12 மணிக்கு இரண்டாம் கால பூஜையும் , அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், […]
தமிழகத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்லாம் என தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தின்படி எந்த மாநிலத்திலும் எந்த ரேசன் கடைகளிலும் பொருட்களை வாங்கி கொள்ள முடியும் என்று அறிவித்தார். இதனை நாடு முழுவதும் இத்திட்டதை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய நுகர்வோர் நலன் […]
திருநெல்வேலியில் அமிர்தம் தனியார் மதுபான பாரில் குடித்த பீருக்கு கூடுதலாக 240 ரூபாய் வசூலித்ததால், வெங்கடேஷ் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். விசாரித்த நீதிமன்றம் மதுபான விற்ற பாருக்கு ரூ.15,000 அபராதம் விடுத்தத, வாடிக்கையாளருக்கு நஷ்ட ஈடாக ரூ.10,000 பணமும், வழக்கு செலவாக ரூ.5,000 தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் அமிர்தம் என்ற பெயரில் தனியார் மதுபான கடை ( பார்) ஒன்று இயங்கி வருகிறது. அங்கு வழக்கமாக வரும் வெங்கடேஷ் என்பவர் பீர் […]
குளத்திற்குள் அரிவாளுடன் 3 மணிநேரமாக போலீசாருக்கு தண்ணிக் காட்டிய கொள்ளையன் தீயணைப்புதுறையின் உதவியுடன் கொள்ளையனை கைது செய்தது காவல்துறை. திருநெல்வேலி மாவட்டத்தில் கோபாலசமுத்திரம் அருகே குளத்திற்குள் குதித்த கொள்ளையன் அரிவாளுடன் 3 மணி நேரமாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துள்ளான்.கொள்ளையனை பிடிக்க சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. குளத்திற்குள் அரிவாளுடன் 3 மணி நேரமாக போலீசாருக்கு டிமிக்கு கொடுத்தவனை தீயணைப்பு வீரா்கள் மற்றும் பிளாஸ்டிக் படகு உதவியோடு போலீசாா் கைது செய்தனர்.அவனிடம் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் பச்சையாறு அணை வேகமாக உயர தொடங்கிய அணையின் நீர்மட்டம், இன்று முழு கொள்ளவை எட்டியுள்ளது. 110-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் 10,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த வாரங்களில் பருவ மழை பெய்து வந்தது, ஆங்காங்கே இருந்த அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. தற்போது நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பச்சையாறு அணையின் மொத்த […]
சபரி மலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பிய பக்தர்கள். சென்னையை சேர்ந்த 6 ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்கு சென்று சாமி தரிசனத்தை முடித்தவர்கள் கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியே வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அவர்கள் வந்த கடையநல்லூர் மெயின் பஜாரில் எதிரே வந்த மற்றொரு காரின் மீது மோதி நிற்காமல் கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனம் […]
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஒத்திவைத்த தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலை. பதிவாளர் சந்தோஷ் பாபு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். உள்ளாட்சி தேர்தல்,கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு கல்லூரிகளுக்கு ஜன.,1தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதனால் அந்நாட்களில் நடக்க இருந்த பல்கலை கழகத்தேர்வுகள் அனைத்தும் வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் விடுமுறையை முன்னிட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.மேலும் ஒத்திவைக்கப்படும் தேர்வுகளுக்கான மாற்று தேதியையும் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார்.அதன் படி […]
கேரளாவில் கொலை செய்யப்பட்டு நெல்லை மாவட்டத்தில் வீசி எரியப்பட்ட உடல் கொலையை செய்த கொடூர கணவன் கேரள போலீசிடம் சிக்கினான் புதைக்கபட்ட உடல் மீண்டும் மறுபரிசோதனை கேரளவில் கொலைச்செய்யபட்டு நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வீசப்பட்ட பெண்ணின் உடல் மீண்டும் கேரள போலீசார் முன்னிலையில் மறுபரிசோதனைச் செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதத்தில் முகம் சிதைந்த ஒரு பெண்ணின் சடலம் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கிடந்தது.இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் இறந்த பெண்ணின் பெயர் வித்யா என்பதும் அவர் […]
வள்ளியூரை சேர்ந்த கந்தன் மகளும், சண்முகம் மகளும் 10ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இதில் கந்தன் மகள் தன் அண்ணனுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் கந்தன். இவரது மகள் பவித்ரா 10ஆம் வகுப்பு படிக்கிறார். அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் சிந்துவும், பவித்ராவும் தோழிகள். இந்நிலையில் பவித்ரா தினமும் டியூசன் போவது வழக்கம். ஆனால் அன்று டியூசன் செல்லவில்லை. இதனால், பவித்ரா அண்ணன் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் […]
அண்மையில் திருநெல்வேலியை பரபரப்பாகிய ஒரு கொலை சம்பவம் அரங்கேறியது. திருநெல்வேலி நாங்குநேரியை சேர்ந்த நம்பிராஜன் அவரது சமூகத்தை சேர்ந்த தங்கபாண்டி மகள் வான்மதியை காதலித்து, பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இதன் பின்னர் காதல் திருமண ஜோடி திருநெல்வேலி டவுனில் தனி குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர், வான்மதி சகோதரர் சமாதானம் பேச அழைத்து வர சொன்னதாக முத்துபாண்டியன் என்பவர் நம்பிராஜனை அழைத்து சென்றார். இதனை அடுத்து அங்கு முத்துபாண்டியனுடன் நம்பிராஜன் […]
நெல்லை மாவட்டம் அறுமுகம்பட்டியைசேர்ந்த ஏசு இருதயராஜ் – புஷ்பலதா தம்பதிக்கு அண்மையில் இரட்டை குழந்தை பிறந்துள்ள்து. அதில் ஒன்று ஆண் குழந்தை, இன்னொன்று பெண் குழந்தை. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது இந்த இரட்டை குழந்தைங்களை சேர்த்து தற்போது 5 குழந்தைகள் ஆகிவிட்டது. இதனால் இருதயராஜ் அந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை விற்க முடிவு செய்துள்ளார். அதில் ஒரு பெண் குழந்தையை நெல்லை மாவட்டம் […]
நெல்லை மாவட்டம், ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் அர்ஜுனன்-காளியம்மாள். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழைந்தைகள் உள்ளது. இதில் முதல் குழந்தை, சுவாச கோளாறு பிரச்சனை காரணமாக 18 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தது. அந்த குழந்தையின் நினைவாக, அவர் மரங்களை நட ஆரமித்தார். மேலும், அதனை முழு நேர பணியாக செய்து வந்தார். இவரும் இவரது மனைவியும் இணைந்து இதுவரை பல இடங்களில் 4 லட்சம் மரங்களை நாட்டினர். இவர்களுடன், இவரின் இரண்டாம் மகளும், தனது 10ஆம் வகுப்பு படிப்பை பாதியிலியே […]
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் ஒரு மாணவருக்கு பிறந்த நாள் என்பதால் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் கேக் வெட்டி கொண்டாடினர்.அப்போது அங்கு வந்த பாளையங்கோட்டை மற்றொரு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் கைகலப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்கு இருந்து இரண்டு பள்ளி மாணவர்களும் சென்று விட்டனர்.பின்னர் நேற்று முன்தினம் ஒரு பள்ளி மாணவர்கள் மற்றோரு பள்ளி மாணவர்களை தாக்க பயங்கரமான ஆயுதங்களுடன் சென்று […]
ஏழை, எளியோருக்கு உதவுவதால் அதிமுக உயிர்ப்புடன் உள்ளது என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் நாளை தேர்தல் நடைபெறுகிறது.அதிமுக சார்பில் நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்.இவரை ஆதரித்து அதிமுகவின் கே.பி.முனுசாமி நாங்குநேரியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஏழை, எளியோருக்கு உதவுவதால் அதிமுக உயிர்ப்புடன் உள்ளது. மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி உள்ளிட்ட திட்டங்களை வகுத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி தொகுதியில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் நாளை (அக்டோபர் 21-ஆம் தேதி )இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில்,நாங்குநேரி தொகுதியில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.பணப்பட்டுவாடா செய்தவர்களிடம் இருந்து ரூ.5.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று நெல்லை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்னர், கடையநல்லூர், கல்யாணிபுரத்தில் வசித்து வரும் சண்முகவேல் – செந்தாமரை எனும் வயதான தம்பதியினரை இரு கொள்ளையர்கள் அரிவாளால் தாக்கி வீட்டில் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த வயதான தம்பதியினர் துணிச்சலுடன் போராடி அவர்களை விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தை பலரும் பாராட்டினர்.மேலும், அவர்களுக்கு சுதந்திர தினத்தன்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீரதீர செயல்களுக்கான தமிழக அரசின் விருதும் வழங்கி கௌரவித்தார். இந்த வழக்கை தீவிரமாக காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் […]
திருநெல்வேலி மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்னர், கடையநல்லூர், கல்யாணிபுரத்தில் வசித்து வரும் சண்முகவேல் – செந்தாமரை எனும் வயதான தம்பதியினரை இரு கொள்ளையர்கள் அரிவாளால் தாக்கி கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த வயதான தம்பதியினர் துணிச்சலுடன் போராடி அவர்களை விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தை பலரும் பாராட்டினர். மேலும், அவர்களுக்கு சுதந்திர தினத்தன்று, முதல்வர் வீரதீர செயல்களுக்காக தமிழக அரசின் விருதையும் வழங்கினார். இந்த வழக்கை தீவிரமாக காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் விசாரித்து வந்தார். இந்த கொள்ளை […]
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோயில் சென்ற அரசு பேருந்தில் கூடங்குளம் வரை செல்ல ஆயுதப்படை காவலர்கள் மகேஷ் மற்றும் தமிழரசன் ஆகியோர் பயணம் செய்தனர். அப்போது அப்பேருந்து நடத்துனர் ரமேஷ்நர் என்பவருக்கும் ஆயுதப்படை காவர்களுக்கும் இடையே பயணசீட்டு விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆயுதப்படைகாவலர்கள் நடத்துனரை தாக்கியதில் அவருக்கு ரத்தம் வந்தது. இதனால், ஆயுதப்படை காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது ஆயுதப்படை காவலர்கள் நடத்துனரை தாக்கியது தொடர்பாக மாவட்ட எஸ்.பி பதிலளிக்க வேண்டும் என மனித உரிமை […]