நெல்லை:பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து இரண்டு மாணவர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் இருந்த நிலையில்,தற்போது கடந்த சில மாதங்களாகத்தான் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்கின்றனர். இதற்கிடையில்,பழமையான பள்ளிகளின் கட்டடம் குறித்து முறையாக ஆய்வு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில்,நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டடம் இடிந்து விழுந்ததில் எட்டாம் வகுப்பு […]
ரெட்டியாா்பட்டியில் 4 வழிசாலையில் நிகழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் 2 பேர் உட்பட 3 பேர் உயிரிழப்பு. திருநெல்வேலி ரெட்டியாா்பட்டி நான்கு வழிச்சாலையில் நாகர்கோவிலிருந்து மதுரை நோக்கி சென்ற காரின் டயர் வெடித்து எதிர்புறம் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவிகள் 2 மற்றும் கார் டிரைவர் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 39 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 41 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமல் படுத்தபட்டிருந்த ஊரடங்கு மேலும் 1 வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு விதிகள் மீறியவர்கள் மீது […]
நெல்லையில் வீட்டில் வைத்து கள்ள சாராயம் காய்ச்சிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு தளர்வுகளற்ற ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஊரடங்கின் பொழுது அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் முதற்கொண்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மதுபான கடைகளும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி கேட்டு பல […]
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு மணி நேரம் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 18 கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில், திருநெல்வேலியிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் சூழலில் பொதுமக்கள் […]
சங்கரன்கோவில் கோமதியாபுரம் சேர்ந்த திருவுடையான் மகள் அன்பரசி வயது (23).பிஎஸ்சி பட்டதாரியான இவர் அழகியபாண்டியபுரத்தில் உள்ள தபால் நிலையத்தில் போஸ்டவுமனாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று தனது வழக்கமான பணிக்கு அழகிய பாண்டியபுரத்தில் இருந்து மானூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் வியாழக்கிழமை வந்துகொண்டிருந்தார். சிற்றாற்று பாலம் அடுத்து கட்டாரங்குளம் விலக்கு அருகே சென்றபொழுது பின்னாடி வந்த லாரி மோதி சம்பவ இடத்திலே உயிரிழிந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த மானூர் காவல்துறையினர் அன்பரசி உடலைகைப்பற்றி நெல்லை […]
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் உள்ள தூய திரித்துவ தேவாலயத்தில் குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக கோவில் மணி ஓசையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. நேற்று நாடு முழுவதும் 72 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களிலும் கொடியேறறப்பட்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், குடியரசு தின விழாவுக்காக பல்வேறு இடங்களிலும் பலநிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் கோவில் மணி மூலமாக தேசிய கீதம் […]
நெல்லை ஆட்சியரிடம் நற்சான்றிதழ் பெற்ற கடமை தவறாமல் பணியாற்றிய காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரி. நெல்லை மாவட்ட ஆயுதப்படையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மகேஸ்வரி. இவர் இந்த ஆண்டு பாளையங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் நடைபெற்ற காவல்துறையினரின் அணிவகுப்பு இவருடைய தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில், இவரது தந்தை திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் நாள் இரவே உயிரிழந்தார். இது தெரிந்தும் அதிகாரிகள் யாரிடமும் இந்த தகவலை தெரிவிக்காமல், கடமை தவறாமல் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் […]
இன்று முதலமைச்சர் பழனிசாமி நெல்லை பயணம் மேற்கொள்கிறார். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் . திண்டுக்கல்லை தொடர்ந்து மதுரைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை […]
நெல்லை இருட்டுக்கடை பொறுப்பை கையிலெடுத்த பேரன். தமிழகத்தின் புகழ்பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளரான, ஹரிசிங்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இவர் மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது தற்கொலைக்கு பின், இருட்டுக்கடை 20 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது. இக்கடையை நான்காம் தலைமுறை வாரிசான சூரத்சிங் திறந்து, வியாபாரத்தை தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தாத்தா ஹரிசிங் […]
ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடைக்கு நெல்லை மாநகராட்சி நிர்வாகம் சீல் வைப்பு. நெல்லை டவுணில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை ஊழியர்கள் 6 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நகைக்கடையில் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை. கலவியில் ஈடுபடும்போது மனைவி செய்யும் இந்த தவறுகள் கணவனை அப்செட் ஆக செய்கிறதாம் இதனால், வாடிக்கையாளர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் என்பதால் கடைக்கு நெல்லை மாநகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக சீல் வைத்தனர்.
10-ம் வகுப்பு மாணவர்களை கேலி செய்ய வேண்டாம் என நெல்லை மாவட்ட துணை கமிஷனர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து, இந்த மாணவர்களை கேலி செய்யும் விதமாக, இணையத்தில், மீம்ஸ்கள் உலா வந்தது. இந்நிலையில், இதுகுறித்து திருநெல்வேலி துணை கமிஷினர் அர்ஜுன் சரவணன் அவர்கள் கூறுகையில், 10-ம் வகுப்பு மாணவர்களை கேலி செய்ய […]
முகக்கவசம் முக்கியம் என்பதை இதைவிட எப்படி சொல்ல முடியும். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால், 36,841 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 326 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பொது மக்கள் வெளியே வரும் போது, கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. இதனையடுத்து நெல்லை துணை ஆணையர், அர்ஜுன் […]
லாரி ஓட்டுனரிடம் 50 லட்சம் ரூபாய் மிரட்டி வாங்கிய நெல்லை காவலர் பணியிடை நீக்கம். கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதியன்று ராணி அண்ணா கல்லூரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தவர் தான் நெல்லை மாநகர ஆயுதப்படை போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவலர் செல்வகுமார். அப்போது அந்த வழியே நெல் மூட்டைகளை ஏற்றிவந்த லாரி டிரைவரான சபாபதியிடம் 50 லட்சம் ரூபாயை காவலர் செல்வகுமார் மிரட்டி பெற்றதாக அண்மையில் வீடியோ வெளியாகியது. இந்த வீடியோ தொடர்பான […]
நெல்லையில் ஏழை மக்களின் பசியாற்ற, கடையில் வாழைத்தார்களை கட்டி தொங்கவிட்ட இளைஞர்கள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணாமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தெருவோரங்களில் ஆதரவின்றி திரிவோர் அதிகமானோர் ஒருவேளை உணவுக்கு கூட திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நெல்லையில், கொங்கந்தான்பாறை கிராமத்தில் உள்ள இளைஞர்கள், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பசியாற வாழைப்பழ தார்களை ஒரு கடை முன்பு கட்டி வைத்திருக்கின்றனர். ஏழை மக்கள், முதியவர்கள் தினமும் கடைக்கு வந்து பசியாறி […]
நெல்லை மாநகரில் ஏப்ரல் 26, மற்றும் மே 03 ஆகிய இரண்டு தினங்கள் முழு ஊரடங்கு என ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில், இன்று வரை 1596 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 635 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா அதிகம் பாதித்த மாவட்டமாக சென்னை உள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பில் நெல்லை 6-வது மாவட்டமாக உள்ளது.இந்நிலையில், நெல்லை மாநகரில் ஏப்ரல் 26, மற்றும் மே 03 […]
நெல்லை மாவட்டம் பணக்குடி பகுதியை சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை காவலராக பெங்களூரில் பணியாற்றி வந்தவர் தான் உதயகுமார். இவருக்கு மீனா என்ற மனைவியும் ஐஸ்வர்யா, முரளிதரன் ஆகிய இரு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு பணியில் இருந்த உதயகுமார் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான பணகுடிக்கு இன்று காலை ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் கொண்டுவரப்பட்டது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பணகுடியில் […]
நெல்லை மேலப்பாளையத்தில் 60க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மேலப்பாளையத்தில் 60க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் என எதுவும் தரவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நெல்லை மேலப்பாளையத்தில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளதால் தற்போது இப்பகுதி முழுவதுமே தனிமைப்படுத்தப்பட்டு காவல்துறையின் வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது.இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் அங்கு […]
கொரோனா வைரஸ் மிக வேகமாக மக்களுக்கு பரவி வருகின்ற நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் இதனால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது நெல்லை மாவட்டத்தில் 2114 பேரை தனிமைப்படுத்தி மாவட்ட நிர்வாகம் தீவிரமாக அவர்களை கண்காணித்து வருகிறது. மேலும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தென்காசிக்கு வந்துள்ள 1086 பேரையும் மிகவும் கண்காணித்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்க்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கடைகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், நெல்லையில், தியாகராஜநகர் உழவர் சந்தையில், சமூக விலகல் கடைபிடிக்கும் வகையில் மூன்று அடிக்கு வட்டம் வரைந்து காய்கறி வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்தைக்கு வந்த ஒவ்வொருவரும் கடைக்கு முன்பாக போடப்பட்ட வட்டத்திற்குள் நின்று பொருட்களை […]