கடந்த 2021-22 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது,தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும்,மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும்,விருதுநகர் மாவட்டம் – திருச்சுழி;கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர்;ஈரோடு மாவட்டம் – தாளவாடி;திண்டுக்கல் மாவட்டம் – ஒட்டன்சத்திரம்;திருநெல்வேலி மாவட்டம் – மானூர்;திருப்பூர் மாவட்டம் – தாராபுரம்;தருமபுரி மாவட்டம் – எரியூர்;புதுக்கோட்டை மாவட்டம் -ஆலங்குடி;திருவாரூர் மாவட்டம் – கூத்தா நல்லூர்;வேலூர் மாவட்டம்-சேர்க்காடு ஆகிய இடங்களில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் […]
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து,கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும்,,காவல்துறை மரணங்கள் அதிகரித்துள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜகவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில்,சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலும், கோவையில் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம் பாஜக எம்எல்ஏ […]
நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த உரிமையாளர் மற்றும் அவரது மகன் தனிப்படை போலீசாரால் கைது. திருநெல்வேலி அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்தது. மங்களூரில் பதுங்கியிருந்த செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த விபத்து தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டியிருந்தது. கல்குவாரி உரிமையாளர் தலைமறைவாகிய நிலையில், தனிப்படை […]
திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னீர்பள்ளம் அருகே உள்ள தனியார் கல்குவாரியில் நேற்று இரவு 11.30 மணி பாறை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் 3 ஜேசிபி ஆபரேட்டர்கள் 2 லாரி ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர் ஒருவர் என மொத்தம் 6 ஊழியர்கள் சிக்கினர். இதனைத் தொடர்ந்து,300 அடி ஆழத்தில் இருந்த ஜேசிபி,லாரி மீது பாறை விழுந்து விபத்து ஏற்பட்டதில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்,இரண்டு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு […]
திருநெல்வேலி மாவட்டத்தில் பொன்னாக்குடி அருகே உள்ள தனியார் கல்குவாரியில் நேற்று இரவு 11.30 மணி பாறை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் 3 ஜேசிபி ஆபரேட்டர்கள் 2 லாரி ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர் ஒருவர் என மொத்தம் 6 ஊழியர்கள் சிக்கினர். இதனைத் தொடர்ந்து,300 அடி ஆழத்தில் இருந்த ஜேசிபி,லாரி மீது பாறை விழுந்து விபத்து ஏற்பட்டதில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்,இரண்டு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு, தலா 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் இருந்து திருச்செந்தூர் வரை தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரிவாக்கப் பணிக்காக சாலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணி இன்று காலை தொடங்கியது. அப்போது பத்தமடை அருகே சாலை விரிவாக்கப் பணி நடைபெறும் பொழுது ஜேசிபி இயந்திரத்தின் உதவியைக் கொண்டு மரத்தினை அகற்றினர். அந்த மரம் சரியாக அகற்றப்படாமல் […]
நெல்லையில் அம்பாசமுத்திரம் அருகே பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த செல்வா சூர்யா என்ற மாணவன் உயிரிழப்பு. நெல்லையில் அம்பாசமுத்திரம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பாக பள்ளி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் படுகாயமடைந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் செல்வ சூர்யா, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்ததை அடுத்து, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு […]
பெண்காவலரை தாக்கிய நபருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை சுத்தமல்லி அருகே பழவூரில் நேற்று கோயில் கோடை விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவிடம், முத்துசாமி மகன் ஆறுமுகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆறுமுகம் கடந்த ஒரு மாதத்திற்கு முன் குடிபோதையில் வாகனம் ஒட்டியதாக அபராதம் விதித்தது குறித்து ஆறுமுகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், கையில் […]
கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் தமிழ்நாடு சீர்கெட்டிருப்பதை தெளிவாக்குகிறது என ஈபிஎஸ் ட்வீட். நெல்லை சுத்தமல்லி அருகே பழவூரில் கோயில் கோடை விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவிடம், முத்துசாமி மகன் ஆறுமுகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆறுமுகம் கடந்த ஒரு மாதத்திற்கு முன் குடிபோதையில் வாகனம் ஒட்டியதாக அபராதம் விதித்தது குறித்து ஆறுமுகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது […]
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே நீராவி முருகன் என்ற ரவுடி காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவரை திண்டுக்கல் தனிப்படை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியிருந்தது. வழிப்பறி,கொள்ளை வழக்கு: தூத்துக்குடியை சேர்ந்த நீராவி முருகன் மீது 3 கொலை வழக்கு மற்றும் கடத்தல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.குறிப்பாக,திண்டுக்கல் மாவட்டத்தில் அவர்மீது வழிப்பறி,கொள்ளை வழக்குகள் பதியப்பட்டுள்ளது. தப்ப முயற்சி: இதனையடுத்து,அவரை கைது செய்ய […]
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் மார்ச் 18-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளுக்கு பதிலாக மார்ச் 26-ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார். பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு மார்ச் 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அருகே உள்ள நாரணம்மாள்புரத்தைச் சோ்ந்த பால்துரை என்பவர் அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். நேற்று பணி முடிந்தது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரின் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே இருந்த தடுப்பு வேலியில் மோதியதில் பலத்த காயமடைந்த பால்துரை உயிரிழந்தாா். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
நெல்லை:சாஃப்டர் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக 4 ஆசிரியர்களுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து,தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் […]
நெல்லை:தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தொற்றின் தாக்கம் சற்று குறைந்த பிறகு,கடந்த சில மாதங்களாகவே பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டன.மாணவர்களின் நலன் கருதி கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் […]
பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலை பள்ளியில் உள்ள கட்டிடத்தில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் 4 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட மூவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து […]
சாஃப்டர் பள்ளிச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியான 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு நெல்லை திருமண்டலம் ரூ.3 லட்சம் நிதியுதவி. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலை பள்ளியில் உள்ள கட்டிடத்தில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் 4 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட மூவர் […]
நெல்லை:சாஃப்டர் பள்ளிக்கு தீயணைப்புத்துறை சார்பில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதியன்று தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது என்றும், அதில்,தீயணைப்புத்துறை சார்பில் ஜனவரி 19 ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர் நேற்று முன்தினம் இடிந்து விழுந்ததில்,3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, நெல்லை சாஃப்டர் பள்ளியின் கழிப்பறை சுவர் […]
நெல்லை:சாஃப்டர் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ் மற்றும் ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகியோரை டிச.31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள அரசு உதவி பெரும் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர் நேற்று இடிந்து விழுந்ததில்,3 மாணவர்கள் உயிரிழந்தனர்.மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த […]
நெல்லை:சாஃப்டர் பள்ளி கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள இருப்பதால்,பள்ளிக்கு இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள அரசு உதவி பெரும் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர் நேற்று இடிந்து விழுந்ததில்,3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த விஸ்வரஞ்சன், சதீஷ், அன்பழகன் […]
நெல்லை:பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் எட்டாம் வகுப்பு 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து,தீயணைப்பு துறை அதிகாரிகள்,கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி,கட்டடம் இடிந்து விழுந்ததில் சிக்கி காயம் அடைந்த 3 மாணவர்கள்,அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]