திருநெல்வேலியில் தனியாருக்கு சொந்தமான பெண் யானை சுந்தரி சிகிச்சை பலனின்றி பலியானது. திருநெல்வேலியில் ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவமனையில் கண் தெரியாமல் தனியாருக்கு சொந்தமான பெண் யானை சுந்தரி சிகிச்சை பெற்று வந்தது.பின்னர் சிகிச்சை பலனின்றி பெண் யானை சுந்தரி மரணமடைந்தது .
பிளாஸ்டிக் இல்லா நெல்லை மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பதற்காக துணி பையுடன் செல்ஃபி எடுத்து அனுப்பினால், அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவித்துள்ளார். மேலும் அவர் இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது எனவும் தெரிவித்தார். இந்த IDக்கு துணி பையுடன் செல்பி எடுத்து அனுப்பியவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. DINASUVADU DINASUVADU
திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம் , அபிஷேகப்பட்டியில் உள்ளது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இது திருநெல்வேலி , தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி என 3 மாவட்டத்தில் உள்ள 70 க்கும் மேற்பட்ட கல்லூரிகளை கட்டுப்படுத்தி வருகின்றது. இப்பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டு சுமார் ஒண்டரை லட்சம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பாஸ்கர் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு அறிக்கை வெளியிடடார். அவ்வறிக்கையில் பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படும் கல்லூரிகள் இதுவரை தமிழில் தேர்வு எழுதிக் கொண்டு இருந்தது தற்போது […]
நெல்லை: தினகரன் தான் வெற்றி பெறுவோம் என்று பகல் கனவு காண்கின்றார் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம், நெற்கட்டும்செவலில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்த நாளான இன்று நெற்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவன் சிலைக்கு மரியாதையை செலுத்த தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகை புரிந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதல்வர் கூறியதாவது.., டிடிவி தினகரன் பகலில் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு, பகல் கனவு […]
பாளையங்கோட்டையில் ரோடு விபத்தில் வாலிபர் இறந்தார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கே.டி.சி., நகர், அய்யப்பா நகரைச் சேர்ந்த தாமஸ் மகன் ஆன்டோ(24) என்பவர் நேற்று மாலை முருகன்குறிச்சியில் உள்ள தனது நண்பரை சந்திக்க பைக்கில் வந்து கொண்டிருந்தார். பாளை., மார்க்கெட் ரோடு, போலீஸ் குடியிருப்புக்கு தென் பகுதியில் பைக் வந்த போது அவர் சாலையில் வந்த அரசு பஸ்சை முந்திச் செல்ல முயன்றார். அப்போது அங்கே வந்து கொண்டு இருந்த ஒரு காரில் மீது பைக் மோதியது. இதனால் தூக்கி எறியப்பட்ட ஆன்டோ பஸ்சின் பின் […]
திருநெல்வேலி: சாலை போக்குவரத்தக்த்தை மேம்படுத்துவதற்கு ,சாலை விபத்தை போக்குவதற்கும் சில நடவடிக்கைகளையும் , கட்டுப்பாடுகளையும் வாகன ஓட்டிகள் மீது விதிக்கப்பட்டு வருகினறது. நெல்லை மாநகரில் சாலை விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமலும் ஹெல்மெட் அணியாமலும் இரு சக்கரவாகனங்களை ஓட்டியதாக 15 ஆயிரம் பேர் மீது இந்த ஆண்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் சொல்லப்படுகிறதது.அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு இதுவரையிலும் தலைக்கவசம் அணியாததால் சாலை விபத்து களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு கூட வாகனத்தில் பின் […]
சமீபத்தில் கேரளாவில் கனமழை பெய்து அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றது.குற்றாலம் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.கனமழை இப்படி கொட்டியும் , வெள்ளம் அருவிகளில் பெருக்கெடுத்து ஓடியும் மேற்குதொடர்ச்சி மலைக்கு சம்பந்தமான தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்தானது அப்படி பேசும்படி இல்லை என்பது மக்களின் கவலையாக இருக்கின்றது. தாமிரபரணி ஆற்றில் வரும் நீரின் அளவுக்கு கரணம் மணல் கொள்ளையாக இருக்கும் என்று மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.அண்டை மாநிலம் கேரளத்தில் அவ்வளவு மழை பொழிந்து தண்ணீரை காணோம் என்ற தவிப்பில் […]
திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகே கழிவறை கட்டும் பணியை ஒரு வாரத்திற்குள் தொடங்காவிட்டால் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என பாஜக எச்சரித்துள்ளது. வண்ணார்பேட்டையில் செல்லப்பாண்டியன் சிலை அருகே இருபுறமும் உள்ள பேருந்து நிறுத்தங்களில் கழிப்பிட வசதி கோரி, பாஜக சார்பில் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் இடம் இருந்தபோதிலும், கழிவறைக்கு இடம் ஒதுக்காத நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்தும், நிதி ஒதுக்கியதோடு […]
திருநெல்வேலி – சென்னை எழும்பூர் நெல்லை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை – சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களும் எல்.எச்.பி., பெட்டிகள் கொண்ட ரயில்களாக மாற்றம் செய்யப்பட இருக்கிறது.இந்த இரண்டு இரயில்களும் இனிமேல் ஜெர்மன் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட எல்.எச்.பி. பெட்டிகள் கொண்ட ரயிலாக மாற்றம் செய்யப்பட இருக்கிறது. ஜெர்மன் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த வகை பெட்டிகளின் எடை 52 டன்னுக்கும் குறைவானது என்பதால், மணிக்கு 160 கிமீ வேகத்துடன் இந்த ரயில் பெட்டிகளை எளிதாக […]
நெல்லை மாவட்டம் மேலபாளையத்தை அடுத்த பிராஞ்சேரி வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்தவர் பேச்சி (72). மதுரை மத்திய சிறையில் கைதியாக இருந்து தண்டனை பெற்றுக் கொண்டு இருந்தார்.இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சிறை அதிகாரிகள் இவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கே மருத்துவ சிகிச்சை பெற்று வந்த பேச்சி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்… DINASUVADU
நெல்லை : திருநெல்வேலி பாளையம்கோட்டை சாலை ஓரங்களில் விற்பனைக்கு தயார் நிலையில் பிள்ளையார் சிலைகள் உள்ளன.விநாயகர் சதூர்த்தி நெருங்கி வருவதால் அதற்காக சிலை தயாரிப்பு மும்மரமாக நடந்து வருகின்றது.குறிப்பாக நெல்லை பாளையங்கோட்டையில் பெரிய பெரிய அளவிலான விநாயகர் சிலை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது..
கடையம் அருகே நள்ளிரவில் பயங்கரம். திருநெல்வேலி மாவட்டம் கீழ கடையம் ஆழி புதத்தான் கோவில் தெருவை சேர்ந்த பொன்னுசாமி மகன் நரசிம்மன்(55) நரசிம்மன் கடையம் ரயில் நிலையம் அருகே அவருக்கு சொந்தமான இடத்தில் பொட்டிக்கடையுடன் கூடிய டீ கடையும் நடத்தி வந்தார்.கூடவே வட்டி தொழிலும் செய்து வந்தார்.இவரும் மனைவி விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றார்.இவர் இரவு சாப்பிட்டு விட்டு கடையில் உள்ள கீழ் தளத்தில் தூங்குவார்.சம்பவத்தன்று இரவு சாப்பிட்டு கடையில் தூங்கிய நரசிம்மன் காலை கடையை […]
சாதிய மோதல்களை தடுக்க பள்ளிகளுக்கு காவல்துறை சார்பில் புகார் பெட்டி வைப்பதற்கு கல்வி அலுவலர்களோடு சேர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நெல்லை SP அருண் சக்திகுமார் தெரிவித்தார் மேலும் நெல்லை மாவட்டத்தில் இதுவரை 89 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார். DINASUVADU
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் மகாபுஷ்கா விழா தொடர்பாக பதிலளிக்க மத்திய மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை. புஷ்கா விழாவிற்கு முன் தாமிரபரணியில் உள்ள மண்டபங்கள், படித்துறைகளை புதுப்பிக்கக் கோரி வழக்கு ஓன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமிரபரணி ஆற்றில் மகாபுஷ்கா விழா தொடர்பாக பதிலளிக்க மத்திய மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் மனுவை செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. DINASUVADU
தூத்துக்குடி பராக்கிரமபாண்டியன் பகுதியில் விவசாய நிலத்தில் காற்றாலை அமைக்கும் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை. கயத்தாறு கீழப்பாறைப்பட்டியைச் சேர்ந்த எஸ்.கே.அருமைராஜ் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில்வழக்கு தொடர்ந்தார். இதனை வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளைவிதிகளை மீறி நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் காற்றாலைகள் அமைக்கப்படுவதாக மனுவில் குற்றச்சாட்டுப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவிட்டுட்டும் இடைக்கால தடை விதித்தும் வழக்கை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற கிளை. DINASUVADU
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே சாலையை கடக்க முயன்ற ஒருவர் அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார் .காவல்துறையினர் விசாரணையில் அவர் முனைஞ்சிப்பட்டி ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பூலையா என்பது தெரிய வந்துள்ளது. DINASUVADU
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெருஞ்சாணி அணையிலிருந்து உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணி ஆறு , பரளியாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை 76 அடியைத் தாண்டியதால், அணையில் இருந்து நேற்று காலை ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.இதன் காரணமாக கோதையாறு, தாமிரபரணி ஆறு , பரளியாறு ஆகிய ஆறுகளின் கரையோரம் வசிப்போருக்கு வெள்ள […]
நெல்லை மாவட்டம் அருகே பாபநாசத்தில் அமைந்துள்ள அகஸ்தியர் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. நெல்லை காரையாறு அய்யனார் கோயில் விழாவினையொட்டி அங்கு எற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நேற்று முதல் வரும் 15ஆம் தேதி வரை குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
நெல்லை மாவட்டம் அருகே பாபநாசத்தில் அமைந்துள்ள அகஸ்தியர் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. நெல்லை காரையாறு அய்யனார் கோயில் விழாவினையொட்டி அங்கு எற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாபநாசம் அகஸ்தியர் அருவியில் இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தாவாய்புரத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெல்லை விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தமிழ்செல்வன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜபாளையம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.