பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் புனித நீராடினார்கள். நேற்று தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 18 பேரையும் குற்றாலத்தில் தங்கியிருக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்தார். எம்எல்ஏக்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஓரிரு நாளில் தீர்ப்பு வர வாய்ப்பு உள்ள நிலையில் 18 பேரையும் அ.தி.மு.க. கடத்தக் கூடும் என்று டி.டி.வி. தினகரன் சந்தேகம் அடைந்ததாக கூறப்படுகிறது.இதனால் தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 18 பேரையும் குற்றாலத்தில் தங்கியிருக்க அறிவுரை வழங்கி உள்ளார் […]
டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் குற்றாலத்திலிருந்து புனித நீராட பாபநாசம் புறப்பட்டு சென்றனர். நேற்று தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 18 பேரையும் குற்றாலத்தில் தங்கியிருக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்தார். எம்எல்ஏக்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஓரிரு நாளில் தீர்ப்பு வர வாய்ப்பு உள்ள நிலையில் 18 பேரையும் அ.தி.மு.க. கடத்தக் கூடும் என்று டி.டி.வி. தினகரன் சந்தேகம் அடைந்ததாக கூறப்படுகிறது.இதனால் தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 18 பேரையும் குற்றாலத்தில் தங்கியிருக்க அறிவுரை வழங்கி […]
டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நான்கு பேர் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நான்கு பெரும் அந்த பகுதியில் உள்ள சொகுசு பங்களா ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கூடங்குளம் அணுஉலையில் கடந்த 18-ம் தேதி முதல் பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று அதிகாலை முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. 2வது அணு உலையில் 350 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை – தென்காசி சென்ற அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 30 பேர் காயமடைந்த நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநாத சுவாமி கோவிலில் திருட்டுப் போய் மீட்கப்பட்ட 13 சிலைகளின் உண்மைத் தன்மையை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர்கள் 5 பேர் ஆய்வு செய்தனர். நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநாத சுவாமி கோவிலில் இருந்து கடந்த 2005-ஆம் ஆண்டு மர்ம நபர்களால் கொள்ளையடிக்கபட்டது. அந்த 13 சிலைகளான சுப்பிரமணியர், சிவகாமி அம்பாள், வெயிலுகந்தம்மன், கிருஷ்ணர், அஷ்டதேவர், நடராஜர், அம்மன், மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், வள்ளி, […]
மக்கள் தங்களது விடுமுறை தினங்களை கழிக்க குற்றால அருவிகளை நோக்கி படையெடுத்துள்ளனர். குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது. இதனையடுத்து போலீஸ் பாதுகாப்பு அதிகரித்துள்ளது.
நெல்லை மற்றும் குமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட உத்தரவில்,நெல்லை மற்றும் குமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.அதேபோல் மாவட்ட கல்வி அலுவலர்கள் 4 பேருக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை குறைக்க கோரியும் , தமிழில் தேர்வு எழுதும் நடைமுறையை மாற்றம் செய்ததை கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை தடியடி.நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் துணை வேந்தர் பாஸ்கர் தொடர்ந்து மாணவர்கள் விரோத போக்குகளை கடைப்பிடித்து வருவதாக இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றம்சாட்டினார்.பருவ தேர்வு வரும் 6 மாதங்களுக்கு ஒருமுறை எதாவது ஒரு பெயரை சொல்லி கட்டணத்தை உயர்த்தி வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.இந்நிலையில் இந்த பருவத்தேர்வுக்கு வருகைப்பதிவேடு குறைந்தால் தனித்தனியே பாடங்கள் அடிப்படையில் […]
ம.தி.தா இந்து கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை ம.சு பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் திருநெல்வேலி , கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட கல்லூரிகளில் சமீபத்தில் உயர்த்திய கட்டண உயர்வு மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு எழுத வேண்டும் என்ற நடைமுறையை மாற்றியமைத்திட இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இன்று நெல்லையில் உள்ள ம.தி.தா இந்து கல்லூரி மாணவர்கள் காலை வகுப்புக்கு செல்லாமலே கல்லூரி வளாகத்தில் நின்று கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தி வந்தார்.அப்போது […]
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் 56 புள்ளி 5 அடியாக உயர்ந்துள்ளது. நெல்லையில் கனமழை-அணைகளின் நீர்மட்டம் உயர்வு: நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அதிகபட்சமாக 33 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக பாபநாசம், […]
மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் இணைந்து ஆண்டுதோறும் மீனவக்கூட்டுறவு சங்க கடல் மற்றும் உள்நாட்டு மீனவ சமுதாயத்தை சேர்ந்த படித்த மாணவர்களில் 20 பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து தனிக்குழுவாக அமைத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணி போட்டி தேர்வுக்கான பயிற்சி திட்டத்தை செயல்படுத்திட அரசு ஆணை வழங்கியுள்ளது. இதில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் சேர்ந்து பயிற்சி பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் கருப்பையா, பொருளாளர் சங்காரவேலு, நிர்வாக செயலாளர் ஸ்டீபன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : ஆன்-லைன் மருந்து விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், ஆன்-லைன் மூலம் மருந்துகள் வாங்கினால் மரத்தின் தரத்தை அறிய முடியாது. முறையான உரிமம் பெற்று மருந்து கடை நடத்தி வரும் வணிகர்கள் தொழில் நசுக்கப்படும். மேலும் போலி மருந்துகள் விற்பனைக்கு வரும் என்பதால், இதனை இம்மாதம் 28ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த […]
நெல்லை ஏர்வாடியில் ஆட்டோ ஓட்டுனரை கடத்திக் கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது . இது தொடர்பான வழக்கை விசாரித்த நெல்லை நீதிமன்றம்,நெல்லை ஏர்வாடியில் ஆட்டோ ஓட்டுனரை கடத்திக் கொலை செய்த வழக்கை விசாரித்தது.இதன் பின்னர் ஷேக்முகமது காஜாமொய்தீன் கொலை வழக்கில் மகேஷ், கதிர்வேல்சாமிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அதேபோல் இருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செங்கோட்டையில் விநாயர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த 13-ந் தேதி இரவு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பிரனிடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியது. இதையடுத்து செங்கோட்டையில் ஒருநாள் 144 தடை உத்தரவு போடப்பட்டு விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துவரபட்டது. அப்போது மீண்டும் மோதல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கும்பலை விரட்டியடித்தையடுத்து ஊர்வலம் […]
நவம்பர் 27-ந் தேதி முதல் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் என்று அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நெல்லையில் அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் கூறுகையில்,புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 27-ந் தேதி முதல் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் தெரிவித்துள்ளார்.
நெல்லை அருகே களக்காடு, மஞ்சங்குளம், கீழபத்தை உள்ளிட்ட 10 கிராமங்களில் கால்நடை மருத்துவர் குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆந்த்ராக்ஸ் நோயால் 20க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்ததையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டு அணு உலைகளிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 1-ஆம் தேதி பராமரிப்புப் பணிகளுக்காக முதல் அணு உலையிலும் 2-ஆம் தேதி வால்வு பழுது காரணமாக 2-வது அணு உலையிலும் உற்பத்திப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. 2-வது அணு உலையில் கடந்த மாதம் 11-ஆம் தேதி மீண்டும் மின் உற்பத்தி தொடங்கிய நிலையில், தற்போது மீண்டும் வால்வில் பழுது காரணமாக மின் உற்பத்தி […]
நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயர் அதிகாரிகள் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காவலர்கள் தற்போது அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பாளையங்கோட்டை உதவி ஆணையர் விஜயகுமார் தலைமையில் மாநகர காவல்துறையினர் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என அவர்கள் சோதனையிட்டனர். DINASUVADU
நெல்லையில் பிஸ்கெட் நிறுவனத்திற்கு சொந்தமான லாரியை மடக்கி ரூ.3லட்சம் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். நெல்லையில் இருந்து சென்னை நோக்கி சென்ற பிஸ்கெட் நிறுவனத்திற்கு சொந்தமான லாரியை கீழ நத்தத்தில் நான்கு வழிச்சாலையில் பயணிக்கும்போது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொள்ளை அடித்து சென்றனர். இது பற்றி பாளையம்கோட்டை காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.