காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி இறந்த ராணுவ வீரர் உடல் இன்று அவரது சொந்த ஊரான தூத்துக்குடியில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது பனிச் சரிவில் சிக்கி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் இறந்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சாத்தூரப்ப நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகன் ராஜேஷ் கண்ணன்(33). இவர் கடந்த 14 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வந்தார். கடந்த 3 […]
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் வாங்கும் பிரசாத பொருட்களில் கெட்டுப்போன நிலையில் விற்பனை செய்யப்படுவதாக பக்தர்கள் புகார் அளித்துள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும் மார்கழி மாதம் என்பதாலும் இங்கு தினத்தோரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் அரிசிமாவுடன் சர்க்கரை வெள்ளம் கலந்து செய்யப்படும் ‘புட்டமுது’ என்னும் பிரசாத பொருளினை விரும்பி வாங்கி செல்வது வழக்கம். அவ்வாறு வாங்கும் அந்த மாவு பொருளில் […]
கோவில்பட்டி : திமுகவின் ஆர்கே நகர் தேர்தல் குறித்த மு.க.அழகிாி மற்றும் அதிமுக,எடப்பாடி பழனிச்சாமி,ஓ.பன்னீர்செல்வம் குறித்த ஆடிட்டா் குரூமுா்த்தி விமா்சனங்கள் குறித்து நான் ஏதும் கருத்து கூறவிரும்பவில்லை எனத் தெரிவித்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. அப்போது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் “நடிகா் ரஜினிகாந்த் என் நண்பா் அவரது அரசியல் முடிவு குறித்து அவா் அறிவிக்கட்டும் அதன் பின்பு நான் எனது கருத்தை தெரிவிக்கிறேன் .ஆகையால் தற்போது நான் அது கருத்து […]
தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் தங்கு கடலுக்கு செல்ல வேண்டி கடந்த 98 நாட்களாக கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.இந்த நிலையில் மீனவர்களுக்ம்,விசைப்படகு உரிமையாளர்களுக்கு நடந்த பேச்சுவார்த்தையொட்டி இன்று 150க்கு மேற்பட்ட விசைப்படகுகள் இன்று கடலுக்கு சென்றன.
தூத்துக்குடி : கடலோர சுனாமி தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்க்கரையில் ஆழி பேரலையால் உயிர் நீத்தவர்களுக்கு 13ம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது.
ஆத்தூர் குளம் பராமரிக்கப்படாததால் நீர் சேமிக்கும் திறன் 20 முதல் 30 சதவீதமே உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குளத்திற்கு வரும் தண்ணீர் குளத்திற்கு செல்ல முடியாமல் தண்ணீர் வரும் கால்வாயில் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு மேல் கழுத்தளவு தேங்கி உள்ளதாக விவாசாயிகள் தெரிவிக்கின்றனர்.இதனால் விவசாயம் வெயில் காலங்களில் கடும் பதிப்படைகின்றனர் . source: dinasuvadu.com
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் இருந்து தட்டப்பாறை செல்லும் ரோட்டில் கல்லூரணி என்னும் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் தண்ணீர் இன்றி காணப்படுகிறது. கண்மாயின் நடுப்பகுதியில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. இதனை அந்த பகுதியில் சென்ற மக்கள் பார்த்தனர். அவர்கள் சந்தேகத்தின் பேரில் புதியம்புத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் அந்த சாக்கு மூட்டையை திறந்து பார்த்தனர். அந்த மூட்டையில், 1½ அடி உயரமும், 50 கிலோ எடையும் கொண்ட சிவலிங்கம் […]
தூத்துக்குடி; லூர்தம்மாள்புரத்தில் இருந்து கடந்த 12–ந்தேதி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர். தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த சேசுராஜிக்கு சொந்தமான நாட்டுப்படகில் லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த கென்னடி வயது 43 பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த பிரதீப் 32 வயது,மற்றும் சதன், வெனிலாஸ், லைஸ்டன் ஆகிய 5 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கடலில் மீன்பிடித்து விட்டு, நேற்று முன்தினம் இரவில் நாட்டுப்படகில் கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். திடீரென்று படகில் ஓட்டை விழுந்தது.இதனால் படகு முழுவதும் தண்ணீர் நிரம்பியதால், […]
திருச்செந்தூர் சுப்பிரமணிசுவாமி கோவில் பிரகாரம் இடிந்து விழுந்ததில் பலியானவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 108 பேர் மீது வழக்குப்பதிவு!
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு அருகில் உள்ள நா.முத்தையாபுரம் என்னும் கிராம பகுதியில் உள்ள எல்லப்பன் நாயகன் குளத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருக்கின்றது.இதனால் அக்குளம் பராமரிப்பு இன்றி மிகவும் அசுத்தமாக காட்சியளிக்கிறது.மேலும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் அப்பகுதியில் வாழும் மக்களும்,வாலிபர்களும்,மாணவர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
திருச்செந்தூர் கோயில் பிரகாரம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ5 லட்சம் நிவாரணம் . காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம், திருசெந்தூரில் உள்ள முருகன் கோயிலில் மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் பலியானார். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோயில் மிகவும் பிரபலம். இங்கு எல்ல நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் இருக்கும். இங்குள்ள சுற்று புறத்தில் பொது தரிசனத்திற்கு செல்லும் வழியில் தான் மேற்கூரை இடிந்துள்ளது. இந்த மேற்கூரை மிகவும் மோசமாக இருந்து வந்துள்ளது. இதனை கோயில் நிர்வாகம் கவனிக்காமல் விட்டதால், தற்போது இந்த கூரை இடிந்து விழுந்துள்ளது.
தூத்துக்குடியில் மத்திய அரசையும், மாநில அரசுகளையும் கண்டித்து மீனவர்களுக்கு ஆதரவாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தரவேண்டும். மத்திய, மாநில அரசுகள் மீனவர்களை தேட துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஓகி புயலின் கோர தாண்டவத்தால், கன்னியாகுமரி, தூத்துக்குடி மீனவர்கள் பலர் காணாமல் போயினர். இவர்கள் பலர் இன்னும் வீடுதிரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். சிலர் இறந்தும் அவர்களின் உடல்கள் கிடைக்காமல் உள்ளன. […]
வீரபாண்டியன்பட்டணத்தில் டிவி பார்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் வீடுபுகுந்து ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணம், மெடனா தெருவைச் சேர்ந்தவர் சேசைய்யா (80). இவரது மனைவி எல்ஜின் அகாட்டார் (76). இவர்களுக்கு 2மகன், 2மகள் உள்ளனர். இதில் இளைய மகன் விக்னேசியஸ்(40)காயல்பட்டினத்தில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். அவருடன் சேசைய்யா, எல்ஜின் அகாட்டார் ஆகியோர் வசித்து வருகின்றனர். இரவில் எல்ஜின் அகாட்டார் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். கணவர் […]
துாத்துக்குடியில் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்லும் இளைஞர்களை சிசிடிவி மூலம் கண்டறிந்து அவர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. துாத்துக்குடி நகரில் வேகமாக இருசக்கர வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் அதிகரித்து விட்டனர்.இதனால் மற்றவர்களுக்கு இடையூ றாகவும் விபத்து ஏற்படுத்தும் விதமாக இருந்தது.இது குறித்து மாவட்ட எஸ்பி.மகேந்திரன் அறிவுரையின்படி ஏஎஸ்பி செல்வன் நாகரத்தினம் நகரில் வேகமாக செல்லும் இளைஞர்களை சிசிடிவி மூலம் கண்டறிந்து அவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடத்தினார்.இதில் 30 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.வேகமாக செல்வது […]
ஓகி புயலில் சிக்கி தென் மாவட்ட மீனவர்கள் பலர் வீடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் சிலர் உயிரிழந்தனர். அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாண தொகை அறிவித்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த மீனவர் ஜூடு என்பவர் இந்த புயலில் சிக்கி உயிரிழந்தார். தற்போது உயரிழந்த மீனவருக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி:ஒகி புயலில் சிக்கி உயிழந்த தூத்துக்குடி மீனவர் காலனியை சேர்ந்த மீனவர் ஜூடு(வயது 40) என்பவரது உடல் மட்டும் DNA பரிசோதனை மூலம் மட்டும் அடையாளம் காணப்பட்டு,பின்பு பிரேத பரிசோதனை செய்யபட்டுள்ளார்.இறந்த அந்த மீனவரது உடலானது நாளை காலை தூத்துக்குடி வந்தடையும் பின்பு அவருக்கான இறுதிசடங்கு நடைபெறும் அங்குள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மீனவர்களின் குடும்பத்தினரால் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜியனிடம் போனில் பேச்சுவார்த்தை: இறந்து போன தூத்துக்குடி மீனவர் உடலை கொண்டு […]
ஒக்கி புயலில் உயிரிழந்த தூத்துக்குடி மீனவர்களின் உறவுகளுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தந்த கேரன முதல்வர் பினராய் விஜயன். ஒகி புயல் வருவதற்கு முன்பு மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களை மீட்கவும் புயலில் சீக்கி உயிரிழந்த தூத்துக்குடி மீனவர்கள் உடலை பெறுவது தொடர்பாக தமிழக அரசு செய்ய வேண்டிய வேலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) தூத்துக்குடி மாவட்ட குழு செய்து வருகிறது. இறந்து போன தூத்துக்குடி மீனவர் உடலை கொண்டு வர கேரளா முதல்வர் பினரயி விஜயன் அவர்களோடு CPIM […]
ஒகி புயல் வருவதற்கு முன்பு மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களை மீட்கவும் புயலில் சீக்கி உயிரிழந்த தூத்துக்குடி மீனவர்கள் உடலை பெறுவது தொடர்பாக தமிழக அரசு செய்ய வேண்டிய வேலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) தூத்துக்குடி மாவட்ட குழு செய்து வருகிறது. முதல்வர் பினராயி விஜியனிடம் போனில் பேச்சுவார்த்தை: இறந்து போன தூத்துக்குடி மீனவர் உடலை கொண்டு வர கேரளா முதல்வர் பினரயி விஜயன் அவர்களோடு CPIM மாநிலசெயலாளர் G.ராமகிருஷ்ணன் தொலைபேசியில் பேசினார் அனைத்து உதவியும் கேரளா அரசு […]
விளாத்திகுளம் தாலுகா சித்தவநாயக்கன்பட்டி கிராம எல்லையிலா போலி ஆவணம் மூலம் லாரியில் மணல் அள்ளியபோது லாரி மற்றும் கிடாச்சியை சிறைபிடித்து காவல்துறையில் ஒப்படைத்தும்,லாரி மற்றும் கிடாச்சி உரிமையாளர் மீது புகார் கொடுக்க மறுத்த வட்டாச்சியரை கண்டித்தும்,மணல் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வட்டாடசியர அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர் .இதில் பல்வேறு கட்சி மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் இடுபட்டனர் போராட்டத்தில் இடுபட்டவர்களை தரதரவென இழுத்து வலுக்கட்டாயமாக நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் உட்பட அனைவரையும் செய்தனர் ஆளுங்கட்சி மந்திரி […]