கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் கோவில் கருவறையில் சென்று அம்மன் நகையை திருடிய பெண் – கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புகழ்பெற்ற செண்பகவள்ளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து அறநிலையதுறையின் கீழ் செயல்படுகிறது. இக்கோவிலுக்கு தினதோறும் ஆயிரணகணக்கான பக்தாகள் வந்த சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இக்கோவிலில் இன்று வழக்கம் போல் நடைதிறக்கப்பட்டது அதனை தொடர்ந்து அதிகாலை பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து செண்பக வள்ளியம்மனுக்கு பூஜை முடிந்தது அருகில் உள்ள […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புது தாப்பாத்தி பகுதியை சேர்ந்த முகேஷ்குமார் என்பவர், நேற்று மாலை அதே பகுதியில் உடலில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்து சென்ற மாசார்பட்டி போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]
தூத்துக்குடியில் வெள்ளம் வருவதை மதிப்பீடு செய்ய சென்னை அண்ணா பல்கலைகழக மாணவர்களின் உதவியுடன் ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்தார் .இதனால் வெள்ளம் வரும் முன்னரே அது குறித்த ஆபத்துகளை கண்டறியலாம் . நீர்நிலை பகுதிகளில் வெள்ளம் வருவதை மதிப்பீடு செய்யவும், வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகளை கண்டறியவும் உதவும் ஆள்லில்லா விமானம் மூலம் ஆய்வு செய்யும் பணியை இன்று தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் இருந்து உபரியாக கடலுக்கு செல்லும் […]
தூத்துக்குடி அண்ணாநகர் 9 வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தரராஜ். இவரது மனைவி மாரியம்மாள் (51). இவர், கடந்த பல ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமடையவில்லை. இதற்காக ஏராளமான பணத்தை செலவழித்து மனமுடைந்த மாரியம்மாள், கடைசியாக கடந்த 5ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரியம்மாளின் கர்பப்பையில் 7 கிலோ அளவுள்ள கட்டி இருந்தது தெரியவந்தது. […]
தூத்துக்குடி : வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் தக்ஷின் பாரத் சரக்கு பெட்டக தளத்தில் இருந்து 1000 சரக்கு பெட்டக கொள்ளவு கொண்ட புதிய கப்பல் சேவையை துறைமுகசபை துணைத்தலைவர் நட்ராஜன் துவக்கி வைத்தார். பின்பு தூத்துக்குடி, இராமேஷ்வரம், கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் இடையே நீர்வழி பாதையில் பயணிகள் படகு போக்குவரத்து திட்டம் துவங்கப்படவுள்ளது என துறைமுகசபை துணைத்தலைவர் நட்ராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
தூத்துக்குடி : பிஅன்டி காலனியில் உள்ள ஶ்ரீ ராதா கிருஷ்ண பொருமாள் ஆலயத்தில் ஆண்டாளுக்கு கூடாரை வல்லி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
தூத்துக்குடி : ஒக்கிபுயலில் சிக்கி பலியான மீனவர் கெனிஸ்டன் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் நிவாரணம் ரூபாய் 20 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் வழங்கினார்.இதேபோல் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மொத்தம் 5 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் ஜூடு மற்றும் கேனிஷ்டன் ஆகியோரது உடல்கள் மட்டுமே DNA டெஸ்ட்டில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற மீனவர்களின் உடல்கள் இன்னும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் பசுபதி பாண்டியனின் 6ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நடைபெற்று வருகிறது.இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி அலங்காரத் தட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் சகோதரி பார்வதி சண்முகசாமி உட்பட ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்கள்.
தூத்துக்குடி:கோவில்பட்டியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காட்டு நாயக்கர் சமூக மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. பின்னர்,நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது கோட்டாட்சியர் அனிதா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா, நகரச் செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தையின் போது பிரட்சனைக்கு தீர்வு காணாமல் கோட்டாட்சியர் அனிதா கைப்பேசியில் வாட்ஸ்அப் பயன்படுத்தியுள்ளார்.இது அங்கிருந்த அனைவரையும் அலட்சியம் படுத்தியதை காட்டுகிறது.கோட்டாட்சியரின் இச்செயலை அரசியல் கட்சியினர், பொதுமக்கள் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் 9ம் தேதி மாலை 6 மணியில் இருந்து 11ம் தேதி காலை 6 மணி வரை 2 நாட்களுக்கு 144 தடை பிறப்பிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் அறிவித்தார். தூத்துக்குடி மாநகரத்தில் உள்ள அலங்காரதட்டு கிராமத்தில், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் சி.பசுபதி பாண்டியன் நினைவு தினம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வருடாவருடம் அவரது ஆதரவாளர்களால் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 58,000 டன் மணல் தூத்துக்குடியிலிருந்து கேரளா மாநிலம் மங்களூருவுக்கு கொண்டுச் செல்லப்பட்டது. மணல் இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு,இதனை தொடர்ந்து நேற்று அரசாணை வெளியிட்ட நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட மணலானது மங்களூருவுக்கு இடமாற்றம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் முத்தலாக் மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவும் கடும் எதிர்ப்பும் பல அமைப்புகள் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் இந்த முதலாக் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடந்து வருகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தூத்துக்குடி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை நடத்தி வருகிறது. இந்த ஆர்பாட்டம் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் நடைபெற்றுகொண்டு இருக்கிறது. source : dinasuvadu.com
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் உள்ள தங்கம்மாள்புரம் அரசு மேல்நிலை பள்ளியில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஆய்வு வசதிகள் கொண்ட கட்டிடம் கட்டபட்டது.இந்த புதிய ஆய்வக கட்டிடத்தை திமுக வடக்கு மாவட்ட செயலாளரும்,தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஆத்தூரில் பிரபல மாதவன் காய்கறிகடையில் இன்று விற்பனைக்கு வைத்திருந்த காய்கறிகளில் விநாயகர் தோற்றம் கொண்ட கத்தரிக்காய் ஒன்று அதிசயமாக காணப்பட்டது. விநாயகரின் தோற்றம் இயற்கையாக அமைந்ததை வாடிக்கையாளர்கள் வியப்பாக பார்த்து செல்கின்றனர்.அதிசய விநாயகரை பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருப்பதாக மாதவன் கூறியுள்ளார்.ஏற்கனவே இவர் விநாயகர் பக்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
ஒகி புயலில் சிக்கி இன்னும் கரை திரும்ப முடியாமலும், கடலில் காணமல் போனவர்களின் உடலை கண்டுபிடிக்க முடியாமலும் மீனவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒகி புயலில் சிக்கியவர்களில் தூத்துக்குடியை சேர்ந்தவர்களில் 6 மீனவர்கள் காணவில்லை. இதில் மீனவர் ஜூடுவின் உடல் விழிஞ்சம் கடலில் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு கேரள அரசின் துணையோடு மார்க்சிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தலைமையிலான குழுவின் உதவியால் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டு டிச 9. ல் அடக்கம் செய்யப்பட்டது. அடுத்ததாக […]
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் மற்றும் புன்னக்காயல் பகுதியில் 46 லட்சம் மதிப்பில் இரண்டு திட்டங்களின் பணியை திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்…. ஆத்தூரில் உள்ள தைக்காதெருவில் 20இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை மற்றும் 4இலட்சம் மதிப்பில் சின்டெக்ஸ் டேங்க் அமைப்பு .புன்னக்காயல் பகுதியில் 22 இலட்சம் மதிப்பில் 5 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆகிய பணிகள் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி – திருச்செந்தூர் ரோடு சத்யாநகரில் அரசு பேருந்து மோதிய விபத்தில் ஸ்வதிக்கா என்ற 3 வயது குழந்தை பலியாகியுள்ளது.மேலும் இந்த விபத்து குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.
தூத்துக்குடி : கோவில்பட்டி அருகேயுள்ள எட்டையாபுரத்தில் ஆசிரியர் வேலை தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்துள்ளனர்.ஆகவே சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஹரிணிகாஸ்ரீ பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஒக்கி புயலில் கேரள கடலில் சிக்கிய 6 தூத்துக்குடி மீனவர்களில் மீனவர் ஜெகன் மட்டும் 2 நாட்கள் ஆழ்கடலில் மரண போராட்டம நடத்திய நிலையில் மீட்கப்பட்டு கேரள அரசின் சிறப்பான சிகிச்சையால் மீட்கப்பட்டார். தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த ஜுடு உடல் விழிஞ்சம் கடலில் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு கேரள அரசின் துணையோடு மார்க்சிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தலைமையிலான குழுவின் உதவியால் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டு டிச 9. ல் அடக்கம் செய்யப்பட்டது. நேற்று இரவு […]
நம் வீட்டை சுற்றியுள்ள குப்பைகளை அகற்றி தெருவில் உள்ள குப்பை தொட்டியில் கொட்டுவோம். மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அவற்றை சேகரித்து மக்கும் குப்பை மக்கா குப்பை என பிரித்து அவற்றை அப்புறபடுத்துவர். இதேபோல் தூத்துக்குடி மாநகராட்சியிலும் குப்பைகளை அகற்றி குப்பை கிடங்குகளில் கொட்டி அகற்றி வருகிறது. இதனை மக்கும் மக்கா குப்பை என பிரிக்க தூத்துக்குடியில் குப்பை கிடங்கு அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், தூத்துக்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான கீதாஜீவன் இதனை எதிர்த்துள்ளார். […]