ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 49 ஆம் நாளாக போராடும் குமரெட்டியாபுர மக்களுடன் மக்களாக அமர்ந்து கமல்ஹாசன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தூத்துக்குடியில் ஒலிக்கும் குரல் மத்திய அரசிற்க்கு கேட்க வேண்டும். இங்கு இருக்கும் அரசுக்கு கேட்ட மாதிரியே தெரியவில்லை.நான் நடிகன் என்பதைவிட மனிதன் எனக்கு கட்சி இருந்தாலும் தனி மனிதனாகவே வந்திருக்கிறேன். ஸ்டெர்லைட் போராட்ட களத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மக்கள் உயிரை பற்றி கவலைப்படாத எந்த தொழிலும் தேவையில்லை மக்களின் குரல் தமிழக அரசுக்கு கேட்கவில்லை; மத்தியில் இருப்போருக்கு கேட்கவேண்டும் குற்றத்தை அரசு கண்டிக்கவில்லை என்றால் மக்கள் செய்வார்கள் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க தூத்துக்குடி வருகை தந்துள்ளார். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 48 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு […]
புள்ளிவிவரங்களோடு களத்தில் சந்திப்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க தூத்துக்குடி வருகிறார். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 48 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், மக்கள் விரும்பினால் […]
தூத்துக்குடி மாநகர் 48 வார்டுஇந்திரா நகர் பகுதி மக்களுக்கு மூன்று ஆண்டுகாலமாக இலவசவேட்டி சேலை வழங்காததை கண்டித்தும் புழுங்கல்அரிக்கு பதிலாக பச்சை அரிசி வழங்குவதை கண்டித்தும் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநகர துணைதலைவர் காந்திமதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி.பூமயில் மாவட்டதுணைத் தலைவர் மு கமலம், மாநகரதலைவர் காளியம்மாள், உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது கோரிக்கை களை உடணடியாக நிறைவேற்ற உறுதியளித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்துக்கு, தமிழகத்தில் பல்வேறு பகுதிக்கு சென்ற ராம ராஜ்ஜிய ரதம் வியாழக்கிழமை(நேற்று) வந்தது. இதற்கிடையே ரதத்துக்கு எதிர்ப்பு தெரிவிததாக 7 பேரை போலீஸார் கைது செய்தனர். விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை கடந்த 13 ஆம் தேதி அயோத்தியில் தொடங்கி நாடு முழுவதும் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் வழியாக சென்ற ரதம் திருநெல்வேலி மாவட்டத்துக்கு 20 ஆம் தேதி வந்தது.தொடர்ந்து […]
கோவில்பட்டியில் மதிமுக கட்சி நிர்வாகி ஒருவர் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார், தொடர்ந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் மதநல்லிணக்கமும், ஒற்றுமையும் உள்ளது. தமிழகத்தில் மதசார்பின்மையை சிதைக்கும் வகையிலும், சீர்குலைக்கும் வகையிலும் சதி நோக்கத்தோடு, ராம ராஜ்ய ரத யாத்திரை என்ற பெயரில், வடநாட்டில் தொடங்கி இங்கு வந்துள்ளனர். இதற்கு முழுபாதுகாப்பு தமிழக அரசு கொடுக்கிறது.அண்ணா திமுக என்ற அண்ணா பெயரை சொல்ல […]
தென்மாவட்டத்தில் புகழ்பெற்ற குடவரை கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் இருக்கும் கழுகசாலமூர்த்தி திருக்கோவிலாகும், இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவானது வருட வருடம் வெகுவிமரிசையாக நடைபெறும். 13நாள் நடைபெறும் இத்திருவிழா நடைபெறும். இந்தாண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள மூலவர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே உள்ள சுபாநகாில் அடையாளம் தொியாத 80 வயது மூதாட்டி சடலத்தினை கைப்பற்றி கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாா் தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர்..
குலசேகரப்பட்டினத்தில் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் ஐசுவர்யா நகரைச் சேர்ந்த கொடிமுத்து. இவருடைய மகன்கள் விஜயகுமார் (வயது 31), ரமேஷ் (29). விஜயகுமார், நெல்லை கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் விஜயகுமார் தன்னுடைய தம்பி ரமேஷ் மற்றும் உறவினர்கள் 4 பேருடன் ஒரு காரில் திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், மணப்பாடு ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்றார். பின்னர் அவர்கள் அனைவரும் இரவில் குலசேகரன்பட்டினம்- உடன்குடி ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது பாரில் வாங்கிய […]
நேற்று விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பினர் ராமராஜ்யம் அமைக்க கோரி ரதயாத்திரை வந்தனர். உத்திரபிரதேசம் என தொடக்கி 6 மாநிலங்கள் வழியாக கேரளா கடந்து தமிழக எல்லைக்குள் வந்தது. ரதயாத்திரை அனுமதி அளிக்க கூடாது என பல்வேறு கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தி கைது செய்ய பட்ட வேளையில் சட்ட மன்றத்தில் எதிர் கட்சிகள் கடும் புயலை கிளப்பினார்.. திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் வெளிநடப்பு செய்து மறியல் போராட்டம் செய்தனர்.திமுக செயல் தலைவர் முக. […]
தமிழகம் வந்த விஷ்வ ஹிந்து பரிசித் அமைப்பின் சார்பில் ராம ராஜ்ய யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமை செயலகம் முன் சாலைமறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து திமுகவினர் தமிழகம் முழுவதும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று கோவில்பட்டியில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா பஸ்நிலையம் அருகே நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்திற்கு நகரசெயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இந்த சாலை […]
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா, வேல்முருகன்,திருமாவளவன்,சீமான்,திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும்,சாலை மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட திமுக வினர் […]
கழுகுமலை அருகேயுள்ள லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சரஸ்வதி(45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையான சங்கர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி, குழந்தைகளை அடித்து உதைத்தார். இந்நிலையில் நேற்று குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்தார். அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர் அங்கிருந்த இரும்பு கம்பியால் சரஸ்வதியின் தலையில் தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் கழுகுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் […]
கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய டாக்டர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். உயரதிகாரி, ஆய்வு செய்யாமல் சென்றது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இம்மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகளும், 500க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் அடிக்கடி விபத்துக்களில் படுகாயமடைவோருக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் போதிய டாக்டர், செவிலியர் மற்றும் பணியாளர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். சிகிச்சைக்கு […]
திருச்செந்தூரில் கூரை கொட்டகையில் இயங்கிவரும், செந்தில்முருகன் மேல்நிலைப் பள்ளிக்கு, நபார்டு திட்டத்தின் கீழ், புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் தமிழக சட்டமன்ற பேரவையில் பதில் அளித்துள்ளார். அதேபோல் பர்கூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு, வரும் 26ம் தேதி மறுமணம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரான சசிகலா புஷ்பா,தூத்துக்குடி முன்னாள் மேயரான இவர் தற்போது டில்லியில் வசித்து வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, அவரும், சசிகலாவும் தன்னை சேர்ந்து தாக்கியதாக கூறி, மாநிலங்களவையில் பெரும் பரபரப்பை அவர் ஏற்படுத்தினார். இதன் காரணமாக அவர் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் இன்றைய தேதி வரை, அது தொடர்பாக எந்த அறிக்கையும் மாநிலங்களவையில் […]
துத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் அனுமதியின்றி செயல் படும் கல்குவாரியல் அப்பகுதி மக்கள் செவித்திறன் இழக்கும் அளவிற்கு பாதிப்பு அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தின் வடகோடி எல்லையில் அமைந்துள்ள நரசிம்மபுரம், பாறைப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு முக்கிய தொழிலாக விளங்குவது விவசாயமும் ,கால்நடைகள் வளர்ப்பதும் ஆகும். இந்த கிராமங்கள் முழுவதும் வானம் பார்த்த பூமி. இந்த நிலையில் சிப்பிப்பாறையை என்ற இடத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் நரசிம்மபுரத்தில் 2013ம் ஆண்டு ஒரு ஏக்கர் 25 சென்ட் நிலப்பகுதியில் குவாரி அமைக்க அனுமதி பெற்றதாகவும், […]
கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது. இன்று காலையில் பலத்த வெயில் அடித்தாலும், மதியத்திற்கு மேலாக வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. தொடர்ந்து பலத்த இடி,மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.தொடர்ந்து சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததது. இந்த மழையினால் கோவில்பட்டி புதுரோடு, மார்க்கெட் சாலைகளில் மழைநீர் வெள்ளபோன்று போனதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.
கோவில்பட்டியில் கிருஷ்ணன் கோவில் திடலில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசுகையில் சிலர் முதல்வராக வேண்டும் என்று கட்சி தொடங்குகின்றனர். கொள்கை கோட்பாடு கிடையாது, தமிழகத்தில் வெற்றிடம் இல்லை அதிமுகவில் தான் வெற்றிடம் உள்ளது.ஊழல் குற்றச்சாட்டுக்களை வைத்து பிரதமர் மோடி ஆட்டுவிப்பதால் முதல்வர், துணைமுதல்வர் மற்றும் அமைச்சர்கள் தலையாட்டி பொம்மைகளாக, அடிமைகளாக செயல்படுகின்றனர். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டுள்ளது, […]
தூத்துக்குடி மாநகரத்தில் உள்ள கிராம தேவதை மேலூர் அருள்மிகு பத்திரகாளி அம்பாள் திருக்கோவிலில், 48 வது மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு 1008 சங்குகளை வைத்து சங்காபிஷேகம் மற்றும் 1008 கலசங்களை வைத்து சலசாபிஷேகம் நடைபெற்றது.