தூத்துக்குடி

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற, தூத்துக்குடி சென்றார் நடிகர் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார் . துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்திக்கிறார், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறுகிறார் நடிகர் ரஜினிகாந்த்.அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின்னர் முதல்முறையாக மக்கள் பிரச்னைக்காக களம் இறங்குகிறார் ரஜினிகாந்த். சென்னையிலிருந்து இன்று காலை ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு புறப்பட்டார்  என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது  நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் இருந்து ரசிகர்கள், நோயாளிகளின் பார்வையாளர்களை போலீசார் வெளியேற்றினர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]

#ADMK 2 Min Read
Default Image

ரஜினிகாந்த் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு!ரசிகர்கள், நோயாளிகளின் பார்வையாளர்கள் வெளியேற்றம்!

தூத்துக்குடி செல்லும் முன் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியளார்களுக்கு அளித்த பேட்டி: இது குறித்து அவர் கூறுகையில், நடிகரான என்னை பார்த்தால், தூத்துக்குடி மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என நம்புகிறேன்.மேலும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையுடன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பேச்சு நடத்தி சுமூக தீர்வு காணும் என்றும் ரஜினி கூறினார்.திமுகவை அதிமுகவும், அதிமுகவை திமுகவும் விமர்சிப்பது அரசியல். சட்டப்பேரவை கூட்டத்தொடரை திமுக புறக்கணித்தது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று மறுத்துவிட்டார். இந்நிலையில் […]

#ADMK 5 Min Read
Default Image

என்னை பார்த்தால், தூத்துக்குடி மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள்!நடிகர் ரஜினிகாந்த்

தூத்துக்குடியில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் சொன்னால்தான் எனக்கு மகிழ்ச்சி என்று  சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நடிகரான என்னை பார்த்தால், தூத்துக்குடி மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என நம்புகிறேன்.மேலும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையுடன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பேச்சு நடத்தி சுமூக தீர்வு காணும் என்றும்  ரஜினி கூறினார்.திமுகவை அதிமுகவும், அதிமுகவை திமுகவும் விமர்சிப்பது அரசியல். சட்டப்பேரவை கூட்டத்தொடரை திமுக புறக்கணித்தது குறித்து கருத்து கூற […]

#ADMK 4 Min Read
Default Image

தூத்துக்குடியில் தேசிய மனித உரிமை ஆணையத்தினர் நேரடி ஆய்வு…!

மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய மக்கள் மீது காவல்துறையினர் கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசு அரசாணையின் பேரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் நான்கு பேர் நேரடியாக தூத்துக்குடிக்குச் சென்று ஆய்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் ராஜராஜன் தில்லி உயர்நீதிமன்றத்தில் […]

human rights 4 Min Read
Default Image

செய்தியாளரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுத்திடுக: காவல்துறை துணைத் தலைவரிடம் கோரிக்கை மனு …!

தீக்கதிர் செய்தியாளரைத் தாக்கிய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி வட்ட காவல்துறை துணைத் தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. தீக்கதிர் நாளிதழின் தூத்துக்குடி மாவட்ட செய்தியாளராகப் பணியாற்றி வருபவர் குமார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் மீது கடந்த மே 22-ஆம் தேதி காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் இரண்டு பெண்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். காவல்துறையின் தடியடி தாக்குதலில் […]

#Thoothukudi 4 Min Read
Default Image

அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின்னர் முதல்முறையாக களமிறங்கும் ரஜினிகாந்த்!துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க நாளை தூத்துக்குடி செல்கிறார்!

துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க நாளை தூத்துக்குடி செல்கிறார் ரஜினிகாந்த். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நாளை தூத்துக்குடி […]

#ADMK 3 Min Read
Default Image

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள் தூத்துக்குடி செல்கின்றனர்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள் தூத்துக்குடி செல்கின்றனர். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்நிலையில் […]

#ADMK 3 Min Read
Default Image

BREAKING NEWS:ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் உயிரிழப்புக்கு பழிக்கு பழி வாங்க திட்டம்!புலனாய்வு துறை எச்சரிக்கை

தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் உயிரிழப்புக்கு பழிக்கு பழி வாங்க திட்டம்” என்று  தமிழக குற்ற புலனாய்வு துறையின் அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மாவட்ட  ஆட்சியர் அலுவலகம்,எஸ்.பி அலுவலகங்கள் மற்றும் போலீசார் தங்கியுள்ள இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம் என தகவல் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக  தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி […]

#ADMK 3 Min Read
Default Image

ஸ்டெர்லைட் கலவரத்துக்கு திமுக எம்.எல்.ஏ. கீதாஜீவன் தான் காரணம் : எடப்பாடி பழனிசாமி ..!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் கலவரத்துக்கு திமுக எம்.எல்.ஏ. கீதாஜீவனே காரணம் என்று   சட்டப்பேரவையில் குற்றஞ்சாட்டியுள்ளார் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது, நடைபெற்ற சம்பவங்கள் குறித்த விளக்க அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். பின்னர், பேசிய அவர் தடுப்புகளை மீறி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டக்காரர்கள் கூடிய புகைப்படத்தை, சட்டப்பேரவையில் காண்பித்தார். அதேபோல், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்ட சம்பவம், பேருந்துகளுக்கு தீவைப்பு தொடர்பான புகைப்படங்களையும் காண்பித்த […]

DMK MLA for sterile riots The reason for Keithajivan is: Edappadi Palanisamy ..! 3 Min Read
Default Image

சமூகவிரோதிகள் ஊடுருவும் வரை உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது?தினகரன்

சமூகவிரோதிகள் ஊடுருவும் வரை உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்று  தினகரன் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,தூத்துக்குடி சம்பவத்திற்கு அரசின் இயலாமையே காரணம்.போராட்டத்திற்கு அனுமதி அளித்துவிட்டு 144 தடை உத்தரவு போட்டது ஏன்?மேலும் சமூகவிரோதிகள் ஊடுருவும் வரை உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்று  தினகரன் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல்  சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் எம்எல்ஏ டிடிவி தினகரன் பேச்சைக் கண்டித்து அமளியில் ஈடுபட்டனர். அரசுக்கு நெருக்கடி கொடுக்க கட்சிகள் திட்டமிட்டதாக கூறுவது […]

#ADMK 2 Min Read
Default Image

தூத்துக்குடி துப்பாக்கி சூடு:சட்டமன்றத்தில் பேச அனுமதிக்காத சபாநாயகரை கண்டித்து அபூபக்கர் எம்.எல்.ஏ., தர்ணா!

இன்று சட்டமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் குறித்து ஒத்தி வைப்பு தீர்மானத்தை தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கருக்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனைத்தொடர்ந்து அவர் புறக்கணித்தார். பின்னர் செய்தியாளர் களிடத்தில் கூறியதாவது:- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் படுகொலையை கண்டிக்கும் வகையில் சட்டமன்றத்தில் […]

#ADMK 6 Min Read
Default Image

கவர்னரிடம் சரமாரி புகார் அளித்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள்..!

துப்பாக்கி சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது கவர்னரிடம், ‘அமைதியான முறையில் அறவழியில் போராடிய எங்களிடம் போலீசார் அராஜகமாக நடந்துகொண்டார்கள். துப்பாக்கி சூட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குமுறினார்கள். அதை பொறுமையாக கேட்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும், இனிமேல் […]

governar panvarilal progith 3 Min Read
Default Image

BREAKING NEWS:ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பான அரசாணை சட்டப்படி செல்லும்! சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகே அரசாணை!முதலமைச்சர் பழனிசாமி

பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அறிக்கை: ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பான அரசாணை சட்டப்படி செல்லும் என்று  பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.  சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகே அரசாணை வெளியிடப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அறிக்கையில், போராட்டக்குழுவினருடன் சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் சேர்ந்ததால் பிரச்சனையில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர். கண்ணீர் புகைகுண்டு, தடியடிக்கும் கலைந்து செல்லாத காரணத்தினால் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அமைச்சர்கள் நேரில் […]

#ADMK 5 Min Read
Default Image

குஜராத் மாடலில் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை ! ஐபிஎஸ் அதிகாரி தகவல்..!

தமிழகத்தில் தற்போது நடந்துள்ள துப்பாக்கி சூடு சம்பவம் குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது நடைபெற்ற திட்டமிட்ட சம்பவங்கள் போல் இருக்கிறது என ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ்பட் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் மோடிக்கு நெருக்கமான வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலை ஆரம்ப முதலே சட்டவிதிகளுக்கு மாறாக மக்களின் உயிருக்கு உலை வைக்கும் வகையில் இயங்கி வருகிறது. இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் போராட்டத்தின் நூறாவது நாளான […]

sterlite protest in thoothukudi 5 Min Read
Default Image

ஆளுநர்  பன்வாரிலால் ப்ரோஹித் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து  ஆறுதல்!

ஆளுநர்  பன்வாரிலால் ப்ரோஹித், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து  ஆறுதல் கூறினார். முன்னதாக பன்வாரிலால் விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். துாத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் இறந்தனர். பலத்த காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை, அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர். நேற்று, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், இன்று காலை, விமானத்தில் […]

#ADMK 3 Min Read
Default Image

தூத்துக்குடியில் போலீசாரே தீ வைத்த காட்சி !வைரல் வீடியோ வெளியீடு..!

தூத்துக்குடியில் காவல்துறையே தீ வைக்கும் வைரல் வீடியோ வெளியிடப்படதால் இது  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது. தூத்துக்குடி திரேஸ்புரம் என்ற பகுதியில் போலீசாரே அங்குள்ள படகிற்கு தீ வைத்துள்ளனர் .   https://theekkathir.in/wp-content/uploads/2018/05/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80.mp4 மேலும்  ஸ்டெர்லைட் தொடர்பான  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்…

thoothukudi sterlite strike 1 Min Read
Default Image

தூத்துக்குடியில் தொடர்ந்து அத்துமீறும் காவல்துறை ! நீதிபதி கண்டனம்..!

தூத்துக்குடி காவல்துறையின் அராஜகம்… தூத்துக்குடி மாவட்ட காவல்நிலையங்களில் சட்டவிரோதமாக சிறார்களும் இளைஞர்களும் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் இந்தப் பிரச்சனை குறித்து அவர்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மாவட்ட தலைமை நீதிபதியிடம் முறையிட்டிருக்கிறார்கள். காவல் நிலையங்களை ஆய்வு செய்ய மாவட்ட தலைமை நீதிபதி விளாத்திகுளம் மேஜிஸ்திரேட் அவர்களை அனுப்பியதாகத் தெரிகிறது. வழக்கறிஞர்கள் சங்கம் சொன்னதன் அடிப்படையில் விளாத்திகுளம் மேஜிஸ்திரேட் புதுக்கோட்டை காவல்நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அவர் செல்லும் போது சட்டவிரோதமாக அங்கு யாரும் அடைத்து வைக்கப்படவில்லை. தனக்கு […]

sterlite protest in thoothukudi 6 Min Read
Default Image

BREAKING NEWS:தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்திற்கு திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவன் தான் காரணம்!புகைப்பட ஆதாரத்துடன் கூறிய முதலமைச்சர் பழனிசாமி

தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்திற்கு திமுகவே காரணம் என பேரவையில் முதலமைச்சர் குற்றச்சாட்டியுள்ளார். முதலமைச்சர் பழனிசாமி பேரவையில், தூத்துக்குடி கலவரத்தின் போது அரசு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை பேரவையில் காட்டி  பேசினார்.  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் போலீசார் மீது தாக்குதல் நடைபெற்ற புகைப்படங்களை முதலமைச்சர் காட்டினார்.மேலும் அவர் கூறுகையில், திமுக ஆட்சியில்தான் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது..போராட்டத்திற்கு திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவன் காரணம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக புகைப்படங்களை காட்டி […]

#ADMK 2 Min Read
Default Image

தூத்துக்குடியில் மீனவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம்! 8 ஆயிரம் பேர் பங்கேற்பு..!

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாட்டுப் படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி சூடு நடைபெற்ற கடந்த 22-ம் தேதி முதலே தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தொடர்ந்து தூத்துக்குடியில் நிலவிய பதற்றத்தைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையோரம் நிறுத்தியிருந்தார்கள்.திங்களன்று அவர்கள் ஏழாவது நாளாக கடலுக்கு செல்லவில்லை. துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் மீனவர்கள் சிலர் உயிரிழந்தனர் பலர் படுகாயம் அடைந்து தூத்துக்குடி […]

தூத்துக்குடி போராட்டம் 4 Min Read
Default Image

துரைமுருகன் சபாநாயகரிடம் வாதம்!தூத்துக்குடி பிரச்சனை பற்றி விவாதம் செய்ய அனுமதி வேண்டும்!

திமுகவின்  துரைமுருகன் சட்டபேரவையில் கூறுகையில், தூத்துக்குடி பிரச்சனை பற்றி விவாதிக்க அனுமதி வேண்டும் என்று வாதித்ட்டார். அவை விதிஎண்-28ன் கீழ் தமக்குள்ள அதிகாரப்படி பேச அனுமதிப்பதாக தனபால் விளக்கம் அளித்துள்ளார். நேரம் இல்லாத நேரத்தில் பிரச்சனை பற்றி பேச வகை உள்ளதாக துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். அவை அலுவலர்களை ஒத்திவைத்து விட்டு பேச அனுமதிக்க துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image