தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு. தூத்துக்குடி கோவில்பட்டி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் மூன்று கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் காரில் சென்ற கீர்த்திக், அவரது நண்பர்கள் செந்தில்குமார், அஜய் ஆகியோர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் 135 கிலோ குட்காவை கடத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் கண்டெய்னர் லாரி மற்றும் இருசக்கர வாகனங்களும் கைது செய்யப்பட்டுள்ளது. குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது. இருந்தும் அவை தமிழகத்தில் பல்வேறு கடைகளில் சட்டவிரோதமாக விறக்கப்பட்டு தான் வருகிறது. அதனை தடுக்க அரசு பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் அதிரடி சோதனை செய்து சட்டவிரோதமாக கடத்தப்படும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகிறது. அப்படி தான், […]
சொத்து குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன் விடுவிப்பு. சொத்து குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன், அவரது தம்பி ஜெகன் உள்பட 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேயர் ஜெகன் உள்ளிட்டோரையும் வழக்கில் இருந்து விடுவித்தது தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம். 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக அப்போது இருந்த அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை பெரியசாமி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.31 கோடி சொத்து குவித்ததாக […]
தூத்துக்குடி ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் மனு அளித்துள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் புகைப்படங்களுடன் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி, தூத்துக்குடி ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு மற்றும் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் […]
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தற்போது வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இன்று இரவு புயல் கரையினை கடக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் வங்ககடலில் புயல் உருவாகியுள்ள காரணத்தால் தமிழக கடலோர மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழையானது தென் தமிழகம் பகுதியில் அங்கங்கே பெய்து வருகிறது. மேலும் […]
துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை. துப்பாக்கிச்சூடு தொடர்பாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை கொலை செய்த காவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படும். குற்றவியல் நடவடிக்கை […]
மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகரில் படகு போட்டி நடைபெற்றது. இந்த படகு போட்டியை எம்பி கனிமொழி கொடியசைத்து தோடங்கி வைத்தார். நேற்று உலகம் முழுக்க மீனவர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் கோலாகலமாக கொண்டாடினர். இந்த மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் சிறிய ரக மோட்டார் படகு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை தூத்துக்குடி எம்பியும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த […]
தூத்துக்குடி மாவட்டத்தில் 11 கிலோ அம்பர் கிரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை கடத்த முற்பட்டவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தடை செய்யப்பட்ட அம்பர் கிரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் காரில் கடத்தியுள்ளனர். இவர்களை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே, உடன்குடியில் புதுமனை எம் பகுதியில் காரில் 11 கிலோ அம்பர் கிரிஸ் எனப்படும் தடைசெய்யப்பட்ட திமிங்கல எச்சத்தை தனிப்படை காவல் துறையினர் சோதனையின் போது பிடித்தனர். […]