ஆப்பிள் நிறுவனத்தின் வயர்லெஸ் ஏர்பாட்ஸ் பயன்படுத்துபவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அழைப்பு விடுபடுதல், ஆடியோ குறைகள் ஆகியவைகளை கூறலாம். நீங்களும் இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்திருந்தால் தீர்வுகள் என்னென்ன என்பதை பார்ப்போம் இது நிச்சயமாக ஏர்பாட்ஸ் பயனர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனையாக கருதப்படுகிறது. இந்த ஏர்பாட்ஸ் அளவை வைத்து கணக்கிடும்போது இவற்றில் ஏதேனும் ஒன்றை தொலைக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக, நீங்கள் உங்கள் ஐபோனில் உள்ள ஃபைண்ட் மை போன் மூலம் இதனை […]
உலகின் மிகப்பெரிய தேடுபொறி நிறுவனமான கூகுள், கடந்த ஒரு மாத காலமாக அமெரிக்க பாதுகாப்பு துறையுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்த கூட்டணியானது, யுத்த களங்களில் செயல்படும் (போரிடும்) ட்ரோன் மென்பொருள் உருவாக்கத்திற்காக பணியாற்றி வருகிறது. ப்ராஜெக்ட் மாவென் (Maven) என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி, கூகுள் ஊழியர்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று, கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், கூகுள் நிறுவனமானது ப்ராஜெக்ட் மாவேன் […]
ட்விட்டர் நிறுவனம் தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்கியுள்ளது. தீவிரவாதத்திற்கு ஆதரவாக கருத்துத் தெரிவிப்பவர்களின் கணக்குகளை கடந்த 2015ம் ஆண்டு முதல் ட்விட்டர் நிறுவனம் முடக்கி வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 2 லட்சத்து 74 ஆயிரத்து 460 கணக்குகளை ட்விட்டர் முடக்கியுள்ளது. வன்முறையைத் தூண்டும் விதமாகவும், தீவிரவாதத்திற்கு ஆதரவான கருத்துக்களை வெளிட்டதாலும் இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு […]
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) ஆகிய இரண்டு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகியுள்ள ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் (Jio Payment Bank) ஆனது நேற்று முதல் (செவ்வாய்) தனது சேவை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இந்த ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் சேவையின் பிரதான நோக்கம் நிதி சேர்க்கை (financial inclusion) ஆகும். ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் (ஆர்பிஐ) கூற்றுப்படி, இந்த ஜியோ பேமன்ட்ஸ் பேங்க் சேவையானது அதன் வாடிக்கையாளர்களுக்கு […]
லேட்டஸ்ட் கூகுள் ஓஎஸ் வெர்சனை அப்டேட் செய்வதில் சாம்சங் நிறுவனம் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8+ மற்றும் கேலக்ஸி எஸ்8 ஆகிய மாடல்களில் தற்போதைய ஜெனரேசன் ஓஎஸ் உள்ளது. எனவே இனிவரும் சாம்சங் மாடலில் ஓரியோ ஓஎஸ் உடன் தான் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி எஸ்8 விலை ரூ.57,900, 5.8 இன்ச், QHD+ சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே ஆண்ட்ராய்டு 7.0 ஆக்டோகோர் எக்ஸினோஸ் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர் […]
ஃபேஸ்புக் நிறுவனம் உலகம் முழுவதும் 200 கோடி பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தால், எட்டரை கோடி பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள ஃபேஸ்புக் சி.இ.ஓ. மார்க் ஜூகர்பெர்க், பயனர்களின் தகவல்களை காப்பதற்கான ஏற்பாடுகளை நிறுவனம் செய்யவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார். ஃபேஸ்புக் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தேடுபொறி மூலம் தகவல்களை எடுத்து தவறான வழியில் பயன்படுத்த […]
கேலக்ஸி எஸ்9 மினி என்கிற பல ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் கேலக்ஸி மினி தொடர் இந்த ஆண்டு நிச்சயமாக வெளியாகி விடும் என்பது போல் தெரிகிறது. கீக்பென்ச் தளத்தில் வரவிருக்கும் இந்த மினி ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் சில பட்டியலிடப்பட்டுள்ளது. 4ஜிபி அளவிலான ரேம், சிங்கிள் கோர் டெஸ்டில் 1619 புள்ளிகளையும், மல்டி-கோர் டெஸ்டில் 5955 புள்ளிகளையும் பெற்றுள்ள கேலக்ஸி S9 மினி ஆனது, வெளியான பட்டியலின்படி 4ஜிபி அளவிலான ரேம் மற்றும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் […]
சமீபகாலமாக, தனது சாதனங்களுக்கான மேம்படுத்துதல்களை அதிகளவில் கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது என்றாலும் அவை எல்லாமே சிறப்பாக செயல்படுகின்றன என்று கூற முடியாது. ஒரு எடுத்துக்காட்டாக, கூகுள் டியோ வி30-க்கான மேம்பாடாக வெளியிடப்பட்ட வி30 மேம்பாட்டை அந்நிறுவனம் தற்போது நிறுத்தி வைத்துள்ளது. வெர்ஷன் 30-ன் மேம்பாட்டில் அப்ளிகேஷனின் செயல்பாட்டை பாதிக்கும் வகையில், அழைப்புகளின் ஒலி அளவு குறையும் பிரச்சனை ஏற்படுவதை தொடர்ந்து, அதன் வெளியீட்டை கூகுள் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது என்று இணையதளத்தில் வெளியான சில தகவல்களின் […]
ஃபேஸ்புக் ஐந்தரை லட்சம் இந்தியர்களின் தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திடம் பகிரப்பட்டு இருக்கலாம் என கூறியுள்ளது. பிரிட்டனில் இயங்கும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம், ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை முறைகேடாகப் பெற்று தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஃபேஸ்புக்கிடம் மத்திய அரசு சில கேள்விகளை கேட்டிருந்தது. இந்திய வாடிக்கையாளர்களின் தகவல்கள் பகிரப்பட்டதா? தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டதா? என்று கேட்டிருந்தது. இதற்கு விளக்கம் அளித்த ஃபேஸ்புக், 5 லட்சத்து 62 ஆயிரம் பயனர்களின் தகவல்கள் பகிரப்பட்டிருப்பதாக […]
பில்லியன் கணக்கான பயனர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் வாட்ஸ்ஆப்பில் – லாக்டு ரெக்கார்டிங்ஸ் (Locked Recordings) என்கிற அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப்பின் பீட்டா சமீபத்திய பதிப்பான பதிப்பான 2.18.102-ல் இந்த புதிய அம்சமானது ஏகப்பட்ட ஆடியோ மெஸேஜ்களை அனுப்பும் பயனர்களுக்கு மிகவும் வசதியான ஒரு அம்சமாகும். வழக்கமாக வாட்ஸ்ஆப் வழியாக ஒரு வாய்ஸ் ரெகார்டட் மெஸேஜை அனுப்ப, சாட்டில் உள்ள ரெகார்ட் பட்டனை தொடர்ச்சியாக அழுத்தி, பேசி முடித்த பின்னர் பட்டனை ரிலீஸ் செய்வோம். இனி அப்படி […]
யுடியூப் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை,அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் ப்ரூனோ பகுதியில் யுடியூப் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு வந்த பெண் ஒருவர் திடீரென துப்பாக்சிச் சூடு நடத்தினார். இதில் 4 பேர் காயம் அடைந்தனர். பின், துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டார். காயமடைந்த […]
ஆன்லைன் வர்த்தகத்தில் முதல் இடத்தில் இருப்பது அமேசான் நிறுவனம். இந்த நிறுவனம் மற்ற அனைத்து நிறுவனங்களையும் பின்னுக்குத் தள்ளியது. இந்தியாவில் அமேசானைப் போல், பிளிப்கார்ட்டு, ஸ்னாப் டீல் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களும் பிரசத்தி பெற்றது. இந்நிலையில், அமேசானுக்குப் போட்டியாக இருக்கும் வால்மார்ட் நிறுவனம், பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கி, வர்த்தக்ததில் முதல் இடத்தைப் பிடிக்க எண்ணியது. ஆனால், வால்மார்ட்டின் இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்ட அமேசான் நிறுவனம், முன்னெச்சரிக்கையாக தற்போது பிளிப்கார்ட்டை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன் […]
ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்(Mark Zuckerberg) நிறுவனத்தை திறம்பட நடத்த இன்னொரு வாய்ப்புத் தாருங்கள் என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்(Mark Zuckerberg) வேண்டுகோள் விடுத்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த Cambridge Analytica என்ற நிறுவனத்திற்கு ஃபேஸ்புக் பயணாளர்களின் தகவல்கள் பகிரப்பட்டாதை மார்க் ஜூக்கர்பெர்க்(Mark Zuckerberg) ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டுமென்று Facebook நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் போர்க்குரல் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மனிதர்கள் […]
ஆப்பிள் நிறுவனம் வளைவான செல்போன் திரைகளுக்கு அருகே விரல்களை கொண்டு சென்றாலே செயல்படத்தக்க வகையில் புதிய தொழில்நுட்பத்தை தயாரித்து வருகிறது. துவக்க கால ஆய்விலிருக்கும் இந்த தொழில்நுட்பத்தை சந்தைக்கு கொண்டு வர இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என கருதப்படுகிறது. ஸ்மார்ட் போன்கள் சந்தையில் நாளுக்கு நாள் போட்டிகள் அதிகரித்து வரும் நிலையில் தனது தனித்தன்மையை நிலை நிறுத்தும் விதமான முயற்சிகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. வளைவான அமைப்பைக் கொண்டிருக்கும் செல்போன் திரைகளை தொடுவதற்கு பதிலாக […]