அரசுத்துறைகளிடம் ஆதார் எண்களை பகிர அவசியம் இல்லை என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதார் தகவல் திருட்டைத் தடுக்க விர்ச்சுவல் ஐ.டி. என்ற மெய்நிகர் அடையாள எண்ணைப் பயன்படுத்தும் புதிய முறையை அறிமுகப்படுத்த ஆதார் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் வருமான வரித்துறை உள்ளிட்ட எந்த அரசுத் துறையினர் கேட்டாலும் பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அத்தகைய சூழ்நிலைகளில் அதார் தொடர்பான தங்களின் மெய்நிகர் எண்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் ஆதார் ஆணைய […]
இன்று வெற்றிகரமாக 31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது .இதையடுத்து இஸ்ரோ இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்… கார்ட்டோசாட்-2 உட்பட 31 செயற்கைக் கோள்களுடன், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது: ‘‘பிஎஸ்எல்வி-சி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ மற்றும் அதன் விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த வெற்றியின் […]
31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி40 ராக்கெட்.இஸ்ரோவின் 3 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.கார்ட்டோசாட் 2எஸ் வரிசை செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.1 நானோ செயற்கைக்கோலும் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் மேலும் 2 செயற்கைக்கோள்களும் செலுத்தப்பட்டன.6 வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன.கனடா, பின்லாந்து, பிரான்ஸ் செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டன.தென்கொரியா, பிரிட்டன், அமெரிக்க செயற்கை கோள்களும் செலுத்தப்பட்டன.இரு வேறு சுற்றுப் பாதைகளில் செயற்கைக்கோள்கள் செலுத்தப்படுகின்றன. ராக்கெட்டின் செயல்பாடு : கடந்த ஆகஸ்ட் மாதம் பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் சுமந்து […]
இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் நியமிக்கபட்டுள்ளார்.இதனால் அவரது சொந்த ஊர் மக்கள் இனிப்பு வழங்கி மகிழ்சியை வெளிபடுத்தினர் . திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குனராக உள்ள சிவன் இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை ஆகும். இஸ்ரோ தலைவராக சிவன் நியமிக்கப்பட்டதற்கு அவரது சொந்த ஊரான நாகர்கோவிலை அடுத்த சரக்கல்விளையைச் சேர்ந்த ஊர் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் சிவன் படித்த சரக்கல்விளை […]
உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு கேபிள் டிவி நிறுவனம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனலாக் முறையிலான ஒளிபரப்பிற்கு கேபிள் டிவி கட்டணத்தை உரிய தேதிக்குள் செலுத்த தவறிய ஆபரேட்டர்களுக்கு அபராதத் தொகையை தள்ளுபடி செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு கேபிள் டிவி நிறுவனம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அசல் நிலுவைத் தொகை முழுவதையும் 3 தவணைகளுக்குள் செலுத்திவிட்டால், கடந்த அக்டோபர் மாதம் வரையிலான அபராதத் தொகை […]
பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட்டை ஏவ கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது. ஸ்ரீ ஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 9 மணி 28 நிமிடங்களில் ராக்கெட் ஏவப்பட உள்ள நிலையில், 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை தொடங்குகிறது.. இந்தியாவின் 100வது செயற்கைக் கோளை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட்டை ஏவுவதற்கான கவுண்ட் டவுன் இன்று தொடங்குகிறது. இந்த ராக்கெட் மூலம் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்த 28 செயற்கைக் கோள்கள் […]
ஆதார் தகவல்கள் வெளியானது தொடர்பான விவகாரத்துக்கு, தேசிய தனிநபர் அடையாள ஆணையத்தைதான் கைதுசெய்ய வேண்டும்’ என்று எட்வர்ட் ஸ்நோடென் தெரிவித்துள்ளார்… இந்த விவகாரம்குறித்த எட்வர்டு ஸ்நோடெனின் ட்விட்டர் பதிவில், ‘ஆதார் மீறல்களை செய்தியாளர் வெளிக்கொண்டுவந்ததற்கு அவருக்கு விருது அளிக்க வேண்டும். விசாரணை நடத்தக் கூடாது. இந்த அரசாங்கம், உண்மையில் நீதிகுறித்து அக்கறை கொண்டிருந்தால், அவர்களுடைய கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவர்களுடைய கொள்கைகள் 100 கோடி இந்தியர்களின் தனியுரிமையை அழித்துவிடும். இதற்குக் காரணமானவர்களை அரசு கைதுசெய்ய வேண்டுமா? […]
2019ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் சுமார் ரூ.700 கோடி செலவில் 8,500 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் முதல்முறையாக மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இலவச வை-ஃபை வசதியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து பாட்னா, விசாகப்பட்டினம், ராஞ்சி, டெல்லி, சென்னை உட்பட 215 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பினை அடுத்து, நடப்பாண்டு இறுதிக்குள் […]
இனி போர் வந்தால் சொந்த நாட்டு ஆயுதங்களை பயன்படுத்தியே போர் நடக்கும் என ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார் . அடுத்தமுறை போர்வந்தால், சொந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் துணையுடனே போரிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ராணுவத் தொழில்நுட்பக் கருத்தரங்கில் பேசிய அவர், வீரர்களுக்கு குறைந்த எடை கொண்ட குண்டுதுளைக்காத உடைகளை தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்தார். பாதுகாப்புத்துறைக்குத் தேவையான ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து […]
கடந்த 2016ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு துறையில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ, பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது. தொடக்கத்தில் அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்கியது. பின்னர் படிப்படியாக கட்டணங்களை நிர்ணயித்துக் கொண்டது. இருப்பினும் வாடிக்கையாளர்கள் ஜியோவிற்கு தொடர்ந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் தங்கள் பிளான்களில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, ஏர்டெல் * ரூ.448 திட்டம் – 70 நாட்களில் இருந்து 82 நாட்கள் வேலிடிட்டி * ரூ.509 திட்டம் – 84 நாட்களில் இருந்து […]
உலகத் தலைவர்களின் கருத்துக்கள் சர்ச்சைக்குரியனவாக இருந்தாலும் அதுபற்றிப் பொதுமக்கள் தெரிந்துகொள்ளவும் விவாதிப்பதற்கும் ஏதுவாக அவர்களின் டுவிட்டர் பக்கங்கள் முடக்கப்படுவதில்லை என டுவிட்டர் சமூக வலைத்தளம் தெரிவித்துள்ளது. அணு ஆயுதங்களை ஏவுவதற்கான பட்டன் தன்னிடம் இருப்பதாகவும், அது வடகொரியாவிடம் இருப்பதைவிடப் பெரியதும், திறன்மிக்கதும் ஆகும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். கடுமையான கருத்துக்களை வெளியிடும் தலைவர்களின் டுவிட்டர் பக்கங்களை முடக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதற்குப் பதிலளித்துள்ள டுவிட்டர் […]
ஐபோன்கள், ஐபேட்கள், கம்ப்யூட்டர்களில் குறைபாடுகள் இருப்பதாக முதல்முறையாக ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. அந்த நிறுவனத்தின் ஐபோன்கள் உள்ளிட்ட சாதனங்களில் செயல்திறன் குறைவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து இதுநாள் வரை மௌனம் காத்த ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், ஐபேட்கள், கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றில் குறைபாடுகள் இருப்பது உண்மைதான் என்றும், எனினும் வாடிக்கையாளர்கள் இதனால் நேரடியாக பாதிக்கப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது. ஆப்பிள் போனில் உள்ள ஆப் ஸ்டோர் மூலம் செயலிகளை தரவிறக்கம் செய்யாததால் இந்த பாதிப்பு […]
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போனை தாக்கும் வைரஸ்கள் இன்டல் ப்ராசஸிங் வழியாக தாக்கும் விதமாக 2 புதிய வைரஸ்கள் உருவாகி உள்ளதாக தகவல்கள் உருவாகிறது. இந்த வைரஸ்கள் புதிதாக களமிறங்கும் ஆண்டராய்டு பிராசஸர்கள் இன்டல் கோர் பராசசர்கள் வழியாக தாக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை எவ்வாறு அழிப்பது என தெரியாமல் கூகுள் திணறி வருகிறது. source : dinasuvadu.com
பெரிய அளவிலான செயற்கைக்கோளை தயாரிப்பதில், உலக அளவில் சாதனை புரிந்து வரும் இஸ்ரோ, தற்போது சிறிய அளவிலான செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளது. விண்வெளி ஆராய்ச்சிக்கான சந்தையில் கடும் போட்டி நிலவிவரும் சூழலில், செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதற்கான செலவைக் குறைக்கும் முயற்சியாக சிறிய அளவு விண்கலன்களைத் தயாரிக்கும் முயற்சியில் இஸ்ரோ இறங்கி இருப்பதாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து பூர்வமாக பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கான இணையமைச்சர் ஜிதேந்திர சிங் […]
டிரிப்யூன் நாளிதழின் செய்தியாளர் ஒருவர் அடையாளம் தெரியாத முகவரை வாட்ஸ் மூலம் தொடர்பு கொண்டு ஆதார் தொடர்பான லாக் இன் ஐ.டி.யையும் பாஸ்வேர்டையும் பெற்றதாகவும், இதற்காக பே டி.எம். மூலம் 500 ரூபாய் செலுத்தியதாகவும் அந்த நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு மூலம் நூறு கோடி ஆதார் எண்கள், பெயர், முகவரி, புகைப்படம், தொலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை எளிதில் பெற்றுவிட முடியும் என்று அந்த நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
இந்தியாவில் ரயில் விபத்துக்கள் வருடாவருடம் அதிகரித்துக்கொண்டே போகிறது .இதன் காரணமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் அது தோல்வியிலே முடிகிறது .எனவே இந்த விபத்துக்கு தீர்வு காண விபத்துகளை தடுப்பதற்காக, வரும் டிசம்பருக்குள் இஸ்ரோ செயற்கைக்கோள் மூலமாக அனைத்து ரயில் இன்ஜின்களையும் இணைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே மூத்த அதிகாரி கூறுகையில், “ இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தமுள்ள 10,800 இன்ஜின்களிலும் ஆன்டனா பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும்.. இதன் மூலம் ரயில் […]
மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் முக்கியப் பங்களிக்கும் நிதி ஆயோக் அமைப்பு எலக்ட்ரிக் வாகனங்கள் நடைமுறைக்கு வந்தால் ஆங்காங்கே மின்னூட்ட மையங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஏற்கனவே மின்பற்றாக்குறை நிலவும் நாட்டில் இதனால் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லித்தியம் பேட்டரிகள் தேவை எனவும் லித்தியம் சுலபமாக கிடைக்கக் கூடிய பொருள் அல்ல என்றும் நிதி ஆயோக் கருதுகிறது. பேட்டரி தயாரிப்பில் இந்தியா இன்னும் நிபுணத்துவம் பெறவில்லை எனவும் பேட்டரி இறக்குமதிக்கு சீனாவைத்தான் சார்ந்திருக்க வேண்டும் எனவும் நிதி ஆயோக் […]
பிரபல ஆண்ட்ரைடு ஆப் ஆன வாட்சப் ஆனது 201 7 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.அதன் படி 2009ல் வாட்ஸ்ஆப் தொடங்கப்பட்ட போது தற்போது மக்கள் பயன்படுத்து செல்ஃபோன் கருவிகளை காட்டிலும் சற்று வித்தியாசமான கருவிகளை பயன்படுத்தியதாகவும், அந்த காலகட்டத்தில் விற்பனையான செல்ஃபோன்களில் 70 சதவீதம் செல்ஃபோன்கள் நோக்கியா மற்றும் பிளாக்பெர்ரி அளித்த இயங்குதளங்களில் இருந்ததாகவும் கூறுகிறது. ஆகவே, பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10, […]
நாட்டிலேயே முதன் முறையாக ஏ.சி. வசதியுடன் கூடிய புறநகர் ரயில் மும்பையில் இயக்கப்பட்டது. சர்ச்கேட் முதல் விரார் வரை ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இந்த புறநகர் ரயில் ஏ.சி. வசதியுடன் இயக்கப்படுகிறது. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களுக்கு மாற்றாக 12 ஏ.சி. ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான கட்டணம் சாதாரண ரயிலின் முதல் வகுப்பு அடிப்படைக் கட்டணத்தைவிட 1.3 மடங்கு அதிகமாகும். வாராந்திரக் கட்டணம் 285 ரூபாய் முதல் 1,070 ரூபாய் வரையிலும், மாதாந்திரக் கட்டணம் 570 ரூபாய் […]