காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரான்சின் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை தன்னிச்சையாக மாற்றிய பிரதமர் மோடி, அவரது நண்பருக்கு அந்த ஒப்பந்தத்தை கொடுத்துவிட்டதாக, குற்றம்சாட்டியிருக்கிறார். சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும், கர்நாடக மாநிலத்தில் தனது மூன்று நாள் சுற்றுப்பயணத்தை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். பெல்லாரியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திற்கும், பிரான்ஸ் நிறுவனத்திற்கும் இடையே, ரஃபேல் போர் விமானங்களை வாங்க மோடி அரசு ஒப்பந்தம் மேற்கொண்டதாக தெரிவித்தார். […]
நாமக்கல்லில் போலீசார் ஃபேஸ்புக்கில் 300க்கும் மேற்பட்ட பெண்களிடம் பழகி செல்போன் எண்களைப் பெற்று, அவர்களது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களுக்கே வாட்ஸ்-ஆப் மூலம் அனுப்பி தொந்தரவு செய்த இளைஞரை கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த 28 வயது பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அவரது செல்போன் எண்ணுக்கு நபர் ஒருவர் கடந்த 4 மாதங்களாக அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட அந்த நபர், பரமத்திவேலூர் பேருந்து நிலையதிற்கு தனியாக வரவேண்டும் […]
வரி ஏய்ப்பு புகார் சாம்சங் நிறுவனத்தின் தலைவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. தென்கொரிய காவல்துறையினர் சாம்சங் நிறுவனத் தலைவரான லீ குன் ஹீ ( Lee Kun-hee ) மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன்படி, சாம்சங்கின் நம்பிக்கைக்கு உரிய செயலாளர்கள் மற்றும் ஊழியர்களின் பல்வேறு வங்கிக் கணக்குகளில் பணத்தைப் போட்டு வைத்து தென்கொரிய மதிப்பின் படி 820 கோடி வாண் (Won) -ஐ வரி ஏய்ப்பு செய்ததாக அவர் குற்றம்சாட்டப்படுகிறது. ஏற்கெனவே 2014-ல் லீயின் மூத்த மகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு […]
போலீசார் சீனாவில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஸ்கேனருடன் கூடிய உயர் தொழில்நுட்பக் கண்ணாடி ஒன்றை பயன்படுத்தி வருகின்றனர். ஸெங்சவ் (Zengzhou) ரயில் நிலையத்தில் நான்கு உயர் போலீஸ் அதிகாரிகள் இந்தக் கண்ணாடியை அணிந்தபடி, குற்றவாளிகளைப் பிடித்து வருவதாக சீனாவின் பிப்பிள்ஸ் டெய்லி பத்திரிகை தெரிவிக்கிறது.இந்தக் கண்ணாடியில் உள்ள கேமிரா, கூட்டத்தில் உள்ள சந்தேகத்திற்குரிய நபர்களைப் படம் பிடித்து, அதைக் கண்ணாடியுடன் பொருத்தப்பட்டுள்ள செல்போன் போன்ற உபகரணத்திற்கு அனுப்புகிறது. அந்த உபகரணத்தில் ஏற்கனவே போலீஸ் சேகரித்து வைத்துள்ள தரவுகளை வைத்து அவரது […]
வாட்ஸ் ஆப் செயலியில் தகவல் பரிமாற்றத்திற்கு உலகின் பெரும்பாலனவர்களால் பயன்படுத்தப்படுவதால் புதிய சுவாரசியமான அம்சம் ஒன்று புகுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் நாம் இதுவரையில் தனியாகவே ஒருவருடன் வீடியோ கால் மூலம் பேசும் இருந்து வருகிறது, விரைவில் குழுவாக வீடீயோ கான்ஃபரசிங் மூலம் பேசும் வசதி இதில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போது சோதனை முறையில் ஆண்ட்ராய்ட் பீட்டா எடிஷனில் சோதிக்கப்பட்டு வரும் இந்த வசதி விரைவில் வாட்ஸ் அப்பின் அப்டேட் செய்யப்பட இருக்கும் என தெரிகிறது. வாட்ஸ் அப் பயன்பாட்டை […]
உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பேசிய கருத்தை, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஆதார் வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், மேற்கோள்காட்டி வாதாடினார். நியூசிலாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, தரவுகளை யாரால் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியுமோ, அவர்களே உலகத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார். இந்நிலையில், ஆதார் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கு வங்க அரசு […]
தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தமிழகத்தில் கூகுள் மையம் அமைக்க அந்த நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் கூகுள் நிறுவனத்தின் இந்திய தலைமை இயக்குநர் சேத்தன் கிருஷ்ணசாமி தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மணிகண்டன், டெல்லி, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களைப் போன்று தமிழகத்திலும் கூகுள் மையம் அமைக்க கோரியிருப்பதாகத் தெரிவித்தார். இயற்கைப் பேரிடர் காலங்களில் சென்னையில் இணையதளத் தொடர்பு பாதிக்காமல் தடுக்க […]
லண்டன் நீதிமன்றம், விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீதான கைது வாரண்ட் தற்போதும் உயிர்ப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளின் ரகசியங்களையும், ஊழல்களையும் வெளியிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக அடைக்கலம் புகுந்துள்ளார். அவருக்கு அண்மையில் ஈகுவடார் அரசு குடியுரிமை வழங்கிய நிலையில், லண்டனில் உள்ள வழக்கில், ஜாமீன் பெற்று, தப்பியது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அசாஞ்சே தரப்பு […]
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் , அதிவேகத்தில் செல்லக் கூடிய உலகின் மிக சக்தி வாய்ந்த ராக்கெட்டை நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. விண்வெளி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், சில நாட்களிலேயே நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தை அடையும் அளவுக்கு வேகமாகச் செல்லும் 27 எஞ்சின்களைக் கொண்ட ராக்கெட்டை தயாரித்தது. ஃபிளாரிடா மாகாணம் கேப் கானவாரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]
ஆராய்ச்சியாளர்கள் கருத்து ,பால்வெளி அண்டத்தில் புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட 7 கோள்களில் தண்ணீர் இருப்பு மற்றும் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக கருதுகின்றனர். சூரியக்குடும்பம் உள்ள இதே பால்வெளி அண்டத்தில் பூமியிலிருந்து சுமார் 40 ஒளியாண்டுகள் தூரத்தில் திராப்பிஸ்ட்-1(Trappist-1) எனும் கோள்களின் குடும்பம் கடந்த 2015ல் கண்டறியப்பட்டது. இக்கோள்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள், இவற்றில் பூமியில் இருப்பதைப் போன்றே பாறைகள், நீர் உள்ளிட்டவை இருக்கலாம் என தங்களின் ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்துள்ளனர். பூமி தனது ஒட்டு […]
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதிவேகத்தில் செல்லக் கூடிய உலகின் மிக சக்தி வாய்ந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சோதனை செய்ய தயாரானது. விண்வெளி தொழில்நுட்பத்தில் கோலோச்சி வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது, சில நாட்களிலேயே நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தை அடையும் அளவுக்கு வேகமாகச் செல்லும் ராக்கெட்டை தயாரித்துள்ளது. உலகின் சக்தி வாய்ந்தது என கருதப்படும் ராக்கெட்டை தயாரித்து, உலக நாடுகளின் பார்வையை திரும்பி பார்க்க வைத்துள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சி.இ.ஓ. எலன் மஸ்குக்கு விருப்பமான சிவப்பு […]
அக்னி-1 ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, அணுஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ராணுவத்தின் சார்பில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஒடிசாவின் பலாசூரில் ((Balasore)) அப்துல் கலாம் தீவிலிருந்து காலை 8.30 மணிக்கு இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 15 மீட்டர் நீளம் கொண்ட அக்னி-1 ஏவுகணை 12 டன் எடை கொண்டதாகும். 1000 கிலோ வரை எடையை சுமந்து செல்லும். தரையிலிருந்து 700 முதல் 900 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும். […]
பேஸ்புக் நிறுவனம் இந்து மதத்தில் இருந்து மாறி திருமணம் செய்தவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூறி, பேஸ்புக்கில் தொடங்கப்பட்ட பக்கத்தை, முடக்கியுள்ளது. ஹிந்துத்வா வர்தா என்ற பேஸ்புக் பக்கத்தில் கடந்த ஜனவரி 28ஆம் தேதி ஒரு பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அந்த பட்டியலில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் இந்து மதத்தில் இருந்து மாறி, மாற்று மதத்தவரை திருமணம் செய்தவர்கள் என்று கூறப்பட்டதுடன், அவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. […]
சீனா புதிதாக ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. HQ 9 என்ற ஏவுகணை தடுப்பு அமைப்பை சீனா மேம்படுத்தி வருகின்றது. இதன்படி ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள கோர்லா சோதனைத் தளத்தில் இருந்து இடைமறித்து தாக்கும் ஏவுகணையை சீனா சோதனை செய்துள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், தரைப்பரப்பில் இருந்து விண்ணுக்குச் சென்று பின்னர் மீண்டும் வளிமண்டலப் பகுதிக்குள் நுழைந்து இலக்கை தாக்கும். ஆனால் தற்போது சீனா சோதித்து பார்த்துள்ள ஏவுகணை, […]
நாசாவின் சாதனையை ஸ்பேஸ் வாக்(Space Walk) என்ற நிகழ்வில் ரஷ்ய வீரர்கள் முறியடித்தனர். விண்வெளி நிலையத்துக்கு வெளியே வீரர்கள் செயல்படும் நிகழ்வு ஸ்பேஸ் வாக் என்று அழைக்கப்படுகிறது. விண்வெளி நிலைய சரிபார்ப்புப் பணிக்காக நிலையத்தில் இருந்து வெளியேறும் வீரர்கள், விண்வெளி நிலையத்தில் தங்களை இணைத்தபடி பணி செய்வர். இதில் எவ்வளவு நேரம் வீரர்கள் வெளியே உள்ளனர் என்பதைக் கணக்கிட்டு ஸ்பேஸ் வாக் சாதனை மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களான அலெக்ஸாண்டர் மிசுர்கின் ((Alexander Misurkin)) […]
கலிபோர்னியாவின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், செல்போன் கதிர்வீச்சு சுகாதார அபாயங்கள் பற்றி ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், மக்கள் தங்களின் செல்போன் பயன்பாட்டு நேரத்தை குறைத்து கொள்வதுடன், முடிந்தவரை செல்போன்களை தள்ளியே வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு புற்றுநோய், மனநிலை பாதிப்பு மற்றும் ஆண்மைக்குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும் தன்மையுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன்கள் அதிகளவு கதிர்வீச்சை வெளிபடுத்தக் கூடியதாக உள்ளதால் அவற்றை மக்கள் அதிகளவில் பயன்படுத்துவது கவலை அளிக்கும் வகையில் மோசமான […]
சிறை தண்டனை பெற்ற சாம்சங் தலைவர் ஜே ஓய் லீ முன்னாள் தென்கொரிய அதிபருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். தென் கொரியாவின் மேல் முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. லீக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு சிறை தண்டனையையும் நீதிமன்றம் நீக்கியுள்ளது. சாம்சங் குழும தலைவர் ஜே வொய் லீ மீது லஞ்ச, ஊழல் மோசடி வழக்குகளில் கடந்த ஆண்டு குற்றம் சுமத்தப்பட்டது. சாம்சங் குழுமத் தலைவர் உள்ளிட்ட நான்கு முக்கிய தலைவர்கள் மீது மோசடி, திட்டமிட்ட ஊழல் […]
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பிசிசிஐ), உலகிலேயே மிகவும் பணக்கார கிரிக்கெட் வாரியமாக திகளும் இதன் இணையதளம், டிவி ஆகியவற்றின் உரிமம் புதுப்பிக்கப்படாததால் பல மணிநேரம் முடங்கியது. கடந்த 2010-ம் ஆண்டிலேயே பிசிசிஐ அமைப்பால், ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித்மோடி நீக்கப்பட்ட போதிலும், இன்னும் அவர் பெயரில்தான் பிசிசிஐ இணைதளமும், டிவியும் செயல்பட்டு வருகிறது. அவர் பணம் செலுத்தாததால் பிசிசிஐ இணையதளம் முடங்கியது. ஐபிஎல் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி நிதி முறைகேடுகளில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டி […]
இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ள கருத்தில் சந்திராயன் 2 திட்டத்தின் மூலம் நிலவில் தரையிறக்கப்படும் ஆய்வூர்தி, முதல் கட்டத்தில் 14 நாட்களுக்கு ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். முதன் முதலில் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன்1 விண்கலம் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. ஆனால், சந்திராயன்2 திட்டத்தைப் பொறுத்தவரை, விண்கலம், ஆய்வூர்தி மற்றும் ஆய்வூர்தியை இறக்குவதற்கான லேண்டர் ஆகிய மூன்றும் முதன்முறையாக அனுப்பப்பட உள்ளன. இவற்றின் மொத்த எடை 3 ஆயிரத்து 290 கிலோ என்பதால் ஜிஎஸ்எல்வி மார்க்2 […]
ஜப்பான் உலகிலேயே மிகச் சிறிய ராக்கெட் மூலம் 3கிலோ எடையுள்ள மிகச் சிறிய செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது. 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் எஸ்எஸ்520என்கிற ராக்கெட்டை ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி முகமை விண்ணில் ஏவியது. தகவல் தொடர்பில் உள்ள கோளாறு காரணமாக அந்த ராக்கெட் மீண்டும் புவிக்குத் திரும்பி வந்தது. இதனால் 10மீட்டர் நீளம், 50செண்டிமீட்டர் விட்டம் கொண்ட அந்த ராக்கெட்டை மீண்டும் மேம்படுத்தி அதில் 3கிலோ எடையுள்ள மிகச் சிறிய செயற்கைக் கோளைப் […]