இந்தியாவில் அமேசான் பிரைம் மியூஸிக் சேவை தொடங்கப்பட்டுள்ளது இசைப் பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டில் தனது பிரைம் வீடியோ சேவையை துவங்கியது. தற்போது 6 லட்சம் பிரத்யேக வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் வீடியோ ஸ்டிரீமிங் சேவையை பயன்படுத்தி வரும் நிலையில், இதன் போட்டியாளரான நெட்ப்ளிக்ஸ்(Netflix) -ஐ முந்தி இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்டிரீமிங் வழங்கும் தளமாக உருவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அமேசான், தற்போது மியூசிக் ஸ்டிரீமிங் தளத்திலும் தனது […]
ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுடன் இணைந்து கடன்சுமையில் சிக்கித் தவிக்கும் ஏர்செல் நிறுவனம், சேவை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. சுமார் 15 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனை திருப்பி அளிப்பது குறித்து தீர்க்கமான முடிவுக்கு வர இயலாத சூழலில் உள்ள ஏர்செல் நிறுவனம், தம்மை திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி, தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாட்களை தங்களின் இதயமாக ஏர்செல் நிறுவனம் கருதுவதாகவும், […]
நெட்வொர்க் கிடைக்காத போதும் ஏர்செல் மொபைல் வைத்திருப்பவர்கள் வேறு சேவைக்கு மாறலாம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பயனாளர்களின் செல்போனில் நெட்வொர்க் செட்டிங் எனும் பகுதிக்கு சென்று நெட்வொர்க் தேர்வை ஆட்டோமேட்டிக் என்பதிலிருந்து மேனுவல் என மாற்ற வேண்டும். இதன் பின்னர் சேவை நிறுவனத்திற்கான தேர்வை ஏர்செல்லிலிருந்து ஏர்டெல் 2G என தேர்வு செய்து கொள்ளலாம். பின்னர் 10 இலக்க மொபைல் எண்ணை டைப் செய்து 1900 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். இதற்கு பதிலாக கிடைக்கும் யுனிக் போர்டிங் கோடு(Unique […]
தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில், டெலி கம்யூனிகேசனில் பிரபலமான ஏர்செல் நிறுவனம் திவாலானதாக அறிவிக்க கோரி மனுத்தாக்கல் செய்துள்ளது. டெலி கம்யூனிகேசனில் ஏர்டெல், ஏர்செல், வோடபோன், ஐடியா, ஜியோ போன்ற நிறுவனங்கள் பிரபலமானதாக உள்ளன. இதில் ஏர்டெல் மற்றும் ஏர்செல் போன்ற நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மத்தியில் பிரபலமானதாக இருந்து வந்தது. மேலும் அதிகமான வாடிக்கையாளர்களும் இதன் நெட்வொர்க்கை பயன்படுத்திவந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக ஏர்செல் நிறுவனத்தின் டவர் பல இடங்களில் […]
தமிழிலேயே பல வருடங்களாக ஃபேஸ்புக், யூடியூப், வலைப்பூ போன்ற டிஜிட்டல் தளங்களில் தங்களுடைய சிந்தனைகளையும் படைப்புகளையும் வெளிப்படுத்திக்கொண்டிருப்பவர்கள் அநேகர். ‘இணையத்தில் இந்திய மொழிகளின் பயன்பாடு’ என்ற தலைப்பில் கடந்த ஆண்டு கூகுள் நிறுவனமும் கே.பி.எம்.ஜி. (KPMG) நிறுவனமும் இணைந்து ஓர் ஆய்வை நடத்தின. அதில், இணையத்தில் பகிரப்படும் இந்திய மாநில மொழியிலான உள்ளடக்கத்தில் 42% தமிழ் என்ற அடிப்படையில் தமிழ் முதலிடத்தைப் பிடிப்பதாக ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. தமிழுக்கு அடுத்ததாக 39% இந்தி என்று அதில் கண்டறியப்பட்டது. மறுக்கப்பட்ட […]
வோடஃபோன் நிறுவனம் அடுத்த ஆண்டு நிலவில் 4ஜி இணைய சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. 1972-ல் நிலவுக்குச் சென்ற நாசாவின் அப்போலோ 17 லூனார் ஊர்தியை ஆய்வு செய்வது உள்ளிட்ட பல பணிகளில் ஆடி லூனார் க்வார்ட்ரோ ஊர்தி ஈடுபட்டு வருகிறது. அதன் உதவியோடு நிலவில் இருந்து அறிவியல் சார்ந்த தகவல்களையும், ஹெச்டிNIL (HD) தரத்திலான வீடியோவையும் ஒரு இணைப்பின் மூலம் உலகில் உள்ளோருக்கு ஒளிபரப்ப விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நிலவில் முதன் முறையாக தனியார் இணைய சேவை […]
வெற்றிகரமாக உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஸ்ட்ராடோலாஞ்ச் (stratolaunch) என்று பெயரிடப்பட்ட அந்த விமானம் விண்வெளியில் ராக்கெட்டுக்கள் மற்றும் செயற்கைக் கோள்களை செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் செயற்கைக் கோளை ஏவும் ராக்கெட்டில் பெருமளவு எரிபொருள் மிச்சப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டை ஏவிய பின் மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்பும் வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 6 என்ஜின்கள் கொண்ட இந்த விமானத்தின் பிரமாண்டம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. விமானத்தின் இரண்டு இறக்கைகளுக்கு […]
பிப்ரவரி 26, 1991 — வரலாற்றில் இன்று – உலகின் முதல் Internet Browser அறிமுகப்படுத்தப்பட்டது…! உணவின்றி கூட இளைஞர்கள் இருந்து விடுவார்கள் ஆனால், இணையம் இன்றி இருக்கவே மாட்டார்கள். மொபைல், லேப்டாப், கணிணி, டேப்லட் என அனைத்திலும், இணையத்தை பயன்படுத்தும் ஒரு மூலம் தான் இணைய உலவி(Web Browser). இந்த இணைய உலவி அறிமுகப்படுத்தப் பட்ட தினம் இன்று. இது ஒரு கணிணி மென்பொருளாகும். இதனை, டிம் பெர்னேர்ஸ்-லீ நெக்சஸ் என்பவர் கண்டுபிடித்தார். இந்த இணைய […]
அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் திறன்படைத்த தனுஷ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக ஏவிப் பரிசோதித்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள தனுஷ் ஏவுகணை 350கிலோமீட்டர் தொலைவில் உள்ள தரை இலக்கைக் குறி தவறாமல் தாக்கும் திறன் படைத்ததாகும். ஒடிசா மாநிலம் பாராதீப் துறைமுகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்து இந்த ஏவுகணையைச் செலுத்திச் சோதித்தனர். அப்போது குறிப்பிட்ட இலக்கை ஏவுகணை வெற்றிகரமாகச் சென்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த ஏவுகணை ஏற்கெனவே பாதுகாப்புத் துறையில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் […]
கடந்த சில தினங்களாக ஏர்செல் சேவையில் குறைபாடு இருந்தது. இந்நிலையில்,தமிழகத்தில் ஏர்செல் செல்போன் சேவை 60% சரி செய்யப்பட்டுள்ளது என்று ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார். மேலும்,நள்ளிரவுக்குள் செல்போன் சேவை முழுமையாக சீர் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் சங்கரநாராயணன், ஏர்செல் சேவையில் உள்ள பிரச்சனைகள் இரண்டு நாளில் சரிசெய்யப்படும் என தெரிவித்துள்ளார். ஏர்செல் நெட்வொர்க் சேவை முற்றிலும் முடங்கியதால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அந்நிறுவனத்தின் சேவை மையங்களில் வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏர்செல்லின் டவர்களை வைத்திருக்கும் ஏஜென்சிகளுக்கு வாடகைப் பணம் கொடுப்பதில் நிலுவை உள்ளதால் சிக்னல் தடைபட்டுள்ளதாக, அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் சங்கரநாராயணன் நேற்று விளக்கம் அளித்திருந்தார். ஏர்செல் டவர் வைத்திருக்கும் தனியார் ஏஜென்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும், சிக்னல் பிரச்சினையை சரி செய்வதற்கான […]
கூகுள் அசிஸடன்ட் (Google Assistant) இணைப்பு நெஸ்ட் கம் ஐகியூ (Nest Cam IQ) கண்காணிப்பு கேமராவுக்கு வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. நெஸ்ட் கம் ஐகியூ(Nest Cam IQ) கேமராக்கள் உள்ளரங்க கண்காணிப்புகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. பயனாளர்கள் குரல் மூலம் கேமராக்கள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களின் இயக்கங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் வசதியை கூகுள் அசிஸடன்ட்(Google Assistant) வழங்குகிறது. பயனாளர்களின் முகத்தையும் கேமரா மூலமாக அடையாளம் காணும் விதத்தில் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளதாக கூகுள்(Google) தெரிவித்துள்ளது. அமேசான், ஆப்பிள் […]
ஏர்செல் நெட்வொர்க் சேவை தொடர்ந்து 2-வது நாளாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முழுமையாக முடங்கியதால் அவதியுற்று வரும் வாடிக்கையாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நேற்று ஏர்செல் கிளை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள் பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை விரட்டினர். கோவை அவினாசி சாலையில் உள்ள ஏர்செல் மாவட்ட தலைமை அலுவலம், ஈரோட்டில் ஏர்செல் சேவை மையம் ஆகியவற்றையும் முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். […]
பிரிட்டன் சைபர் தாக்குதலால், ஐரோப்பிய நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரஷ்யாவே காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் உக்ரைனில் உள்ள நிதி, மின்சாரம், மற்றும் அரசுத் துறைகளை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட சைபர் தாக்குதலால் ஐரோப்பிய நிறுவனங்களும் பாதிக்கப்பட்டன. இதனால், வர்த்தக நிறுவனங்களுக்கு சுமார் 120 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகைய தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணம் என பிரிட்டன் சாடியுள்ள நிலையில், அதை ரஷ்யா மறுத்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வாட்ஸ் ஆப் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான சேவைக்கு எதிராக பேடிஎம் நிறுவனம் போர்கொடி உயர்த்தியுள்ளது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான முக்கிய செயலியாக பேடிஎம். உள்ளது. தற்போது இந்த சேவையை வாட்ஸ் ஆப் நிறுவனம் கையில் எடுத்து அதற்கான சோதனை முயற்சியை இந்தியாவில் தொடங்கியது. ஆனால் இதில் லாக் இன் மற்றும் ஆதாரை அடிப்படையாகக் கொண்ட செயல் முறைகள் இல்லை என பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா கூறியுள்ளார். இதனால் பரிவர்த்தனைகளுக்கு பாதுகாப்பு இல்லாத […]
அமெரிக்க மக்கள் ஹுவேய் (Huawei) மற்றும் இசட்.டி.இ. நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டாம் என அந்நாட்டு உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்புக்கு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை அமெரிக்கா முக்கிய அச்சுறுத்தலாக கருதுகிறது. இந்நிலையில் உளவுத்துறை தொடர்பான அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் விசாரணை ஒன்றில் எஃப்.பி.ஐ. சி.ஐ.ஏ., என்.எஸ்.ஏ. உள்ளிட்ட 6 உளவு அமைப்புகளின் இயக்குநர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது சீன தொலைத் தொடர்புக் கருவிகள் உற்பத்தி நிறுவனங்களான ஹுவேய் மற்றும் இசட்.டி.இ. நிறுவனங்களின் […]
பாதுகாப்புத் துறை அமைச்சகம் 7லட்சத்து நாற்பதாயிரம் துப்பாக்கிகள் உட்படப் பல்வேறு ஆயுதங்களை வாங்குவதற்குப் அனுமதி அளித்துள்ளது. முப்படைகளுக்கும் ஆயுதங்கள் வாங்குவதற்குப் பாதுகாப்புக் கொள்முதல் குழுவில் ஒப்புதல் பெற வேண்டும். காஷ்மீரில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க 7லட்சத்து 40ஆயிரம் துப்பாக்கிகள் வாங்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. துப்பாக்கிகளும் மற்ற ஆயுதங்களும் 15ஆயிரத்து 935கோடி ரூபாய்க்கு வாங்க பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆயுதக் கொள்முதல் குழு அனுமதி அளித்துள்ளது. மேலும் […]
அமேசான் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான அமேசான் நூற்றுக்கணக்கான பணியாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக, தெரிவித்துள்ளார். இந்த பணி நீக்க நடவடிக்கையால் அமேசானில் பணியாற்றும் எந்தப் பிரிவு ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரியவில்லை.கடந்த ஆண்டில் இந்நிறுவனம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியதுடன், வட அமெரிக்காவில் மற்றொரு தலைமையகம் திறக்கவும் திட்டமிட்டது. ஆனால் கணினியில் குரல் மூலம் கட்டளையிடுவது போன்ற புதிய தொழில்நுட்பங்கள் புகுந்து வரும் நிலையில், இந்த ஆண்டு […]
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆதார் இல்லாததைக் காரணம் காட்டி அரசு நலத்திட்ட பயன்களை வழங்க மறுக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். டெல்லியில், மாநில தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர்கள் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய ரவிசங்கர் பிரசாத், ஆதார் இல்லாததைக் காரணம் காட்டி சிலருக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்படுவதாகவும், அத்தகைய நிகழ்வுகள் தொடரக் கூடாது என்றும் கூறினார். இதுவரை ஆதார் பெறாதவர்களை உடனடியாக வாங்குமாறு அறிவுரை கூற வேண்டுமே தவிர, அதைக் காரணம் காட்டி அவர்களுக்கான சலுகைகளை மறுக்கக் கூடாது […]
இண்டிகோ விமான நிறுவனம் எஞ்சின் கோளாறு காரணமாக A320 ரக விமானங்களில் மூன்றை, சேவையிலிருந்து நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 18 மாதங்களில் 69 முறை இண்டிகோ A320 ரக விமானங்களின் எஞ்சின்களில் ஒன்றில் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டுக்கான விமான சேவையை இயக்கிவரும் நிலையில் இந்த எஞ்சின் கோளாறு ஏற்பட்டதையடுத்து, ஐரோப்பிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு முகமை எச்சரிக்கை விடுத்தது. நடுவானில் எஞ்சின் செயலிழக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த முகமை கூறியிருந்தது. இதையடுத்து, A320 ரக விமானங்களில் மூன்றை மட்டும் […]